Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அலங்கு (பட விமர்சனம்)

படம்:அலங்கு

நடிப்பு: குணாநிதி,, செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி,, சௌந்தரராஜன், கொற்றவை, ஸ்ரீ ரேகா, அஜய், இந்திரகுமார்,  சண்முக முத்துசாமி

தயாரிப்பு: டி ஜி பிலிம் கம்பெனி,  மேக்னஸ் புரடக்ஷன் டி சபரீஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி

இசை: அஜீஷ்

ஒளிப்பதிவு: பாண்டி குமார்

இயக்கம்: எஸ் பி சக்திவேல்

பி ஆர் ஓ: கே குமரேசன்.

கேரளா தமிழ்நாடு பார்டர் பகுதியில் வசிக்கும் தர்மன் ( குணானிதி) கேரளாவிற்கு நண்பருடன் கூலி வேலைக்கு செல்கிறார். இதற்கிடையில் அங்குள்ள ஒரு முக்கிய புள்ளியின் மகளை நாய் கடித்த  விட கோபத்தில் ஊரில் உள்ள தெருநாய்களை அடித்துக் கொல்லச் சொல்கிறார். அதில் ஒரு நாயை தர்மன் காப்பாற்ற செல்ல முக்கிய புள்ளியின் அடியாட்களுடன் மோதல் ஏற்படுகிறது. இதில் தர்மன் ஒருவனின் கையை வெட்டி விட அதற்கு பழி வாங்க ரவுடி கூட்டம் தர்மனை துரத்துகிறது. இந்த துரத்தலின் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

கதையின் நாயகனாக குணாநிதி அறிமுகமமாகியிருக்கிறார். ஹீரோ என்றவுடன் பாய்ந்து பறந்து சண்டை போட்டு அசத்த வேண்டும் என்று நினைக்காமல் தர்மன் என்ற கதாபாத்திரத்தை மனதில் வாங்கிக் கொண்டு அந்த கதாபாத்திரத்தால் என்ன முடியுமோ அதை மட்டுமே நடித்திருக்கும் குணாநிதி மனதில் இடம் பிடிக்கிறார்.

காட்டுப்பகுதியில் ரவுடிகளுக்கு பயந்து குணாநிதியும்  காளி வெங்கட்டும தலைமறைவாக நினைத்து யானை,  ஓநாய் போன்றவையிடம் சிக்கி பதறுவது படபடப்பு.

குணாநிதி நண்பர்களாக நடித்திருப்பவர்களும் சோடையில்லை  தாயாக வரும் ஸ்ரீ ரேகா திடீரென்று ரௌடியின் கையை முறித்து கத்தி சண்டை போடுவது பலே..

படத்தில் புது முகங்கள்  நடித்திருந்தாலும்  எல்லோரும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள் . இவர்களுடன் காளியம்மா என்ற ஒரு நாட்டு நாயும் நடித்திருக்கிறது.

டி ஜி பிலிம் கம்பெனி,  மேக்னஸ் புரடக்ஷன் டி சபரீஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரித்திருக்கிறார்கள்.

காட்டுப்பகுதிக்குள் பாண்டி குமாரின் கேமரா சுற்றி சுழன்றிருக்கிறது.

இயக்குனர் எஸ் பி சக்திவேல் உண்மை சம்பவம் அத்துடன் கற்பனை கலந்து படத்தை இயக்கி இரக்கிறார். மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் உயிர் ஒன்றுதான் என்ற ஒரு உள்ளார்ந்த விஷயத்தை கருவாக வைத்து இயக்கி இருக்கிறார். இந்த விஷயத்தை டாக்குமெண்ட்ரி படமாக  இல்லாமல் கமர்சியல் ரீதியாக இயக்கியது  கூடுதல் பிளஸ்.

அஜிஷ் இசை பின்னணியில் வித்தை காட்டுகிறது.

அலங்கு – இரக்கம்.

 

 

 

 

 

Related posts

Shruti Haasan’s Legal Stand Against AI Misuse..

Jai Chandran

சி சி எல்: செலப்ரட்டி கிரிக்கெட் கப் வெல்வோம் – ஆர்யா, பரத் உறுதி

Jai Chandran

Dhanush Revealing the First look of ar entertainment, tridentarsts ProductionNo1

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend