Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கிருத்திகா, தம்பிராமையாவுடன் களைகட்டிய டி எம் ஜே ஏ பொங்கல் விழா

 

தமிழ் திரைப்பட பத்திரிகையா ளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கும்போதே சர்வதேச அளவில் கவனம் பெற்ற லிடியன் குடும்பத்தாரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. பின்னர் பிரபல சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான முல்லை கோதண்டம் இருவரின் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச் சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சங்கத்தின் செயலாளர் ஆபிரகாம் அவர்களின் மகன் சந்தோஷ் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கிருத்திகா உதயநிதி பேசும் போது, பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ரொம்ப பாசத்தோடு கூப்பிட்டதால் இந்த விழாவிற்கு வந்தேன். பத்திரிகையாளர்களின் எழுத்துகள் தான் எங்களை போன்ற இயக்குனர் களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கிறது. என்னுடைய அடுத்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்றார்.

தம்பி ராமையா பேசும் போது, இந்த விழாவில் இரண்டு தந்தைகளின் நெகிழ்வை பார்த்தேன். ஒன்று லிடியனின் தந்தை சதீஷ் வர்ஷன். மற்றொன்று கோடாங்கி. இவர்கள் இரண்டு பேரும் தனது பிள்ளை களை இசையமைத்து, ஆட வைத்து நெகிழ்ந்து இருக்கிறார்கள். நடிகர் ஆண்டனியை உயர்த்தி அழகு பார்க்கிறீர்கள் அது எனக்கு பெருமையாக இருக்கிறது. முல்லை கோதண்டம் காமெடி சிறப்பாக இருந்தது. ஏற்கனவே பார்த்தது தான் ஆனால், அதை புதுமையாக அப்படியே டைமிங் மாறாமல் நடித்து அசத்தி இருக்கிறார்கள்.

என் தாய்தான் என்னை வளர்த்தார். அவர் இறந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. அவருக்கு பின், என் மனைவி தற்போது தாயை போல் இருந்து என்னை பார்த்து கொள்கிறார். நான் என் மகனுக் காக எந்த இடத்திலும் வாய்ப்பு கேட்டது கிடையாது. நீயாக போ, விழுந்து எழுந்து வாய்ப்பு தேடு என்று சொல்லிவிட்டேன். நான் அப்படித்தான் தேடினேன். உன் தோல்விதான் உன்னை உயர்த்தும் என்றேன்.

நான் ஏற்கனவே 80 முறை இறந்தவன். 81வது முறை இறக்க ஒன்றும் இல்லை. நான் வாழ்க்கை யில் தோற்றுப் போக காரணம் நான் எடுத்த முடிவுகளே காரணம். சமீபத்தில் கலந்துகொண்ட விழாவில் என்னிடம் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார்கள். அதற்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொன் னேன். முதலில் அனைவரும் உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.

ஆண்டனி பேசும் போது, மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு முன்பு நிறைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் மேற்கு தொடர்ச்சி படம் தான் எனக்கு அங்கீகாரம் கொடுத்தது. பா.ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ரைட்டர் படம் நல்ல பெயரை பெற்று கொடுத்து இருக்கிறது. பத்திரிகை யாளர்கள் எழுதும் எழுத்துக்கள் சில பேருக்கு வழக்கமாக இருக்கும். எனக்கு வாழ்க்கையாக மாறி இருக்கிறது. இவ்வாறு நெகிழ்ந்தார்.

சங்க உறுப்பினர்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் சங்க தலைவர் கவிதா பேசும் போது, 1 ரூபாய் கூட யாரிடமும் வாங்கவில்லை.. சங்க வைப்பு நிதியில் இருந்து நம் உறுப்பினர் களுக்கு உதவிகள் வழங்கினோம்..
மேலும் பொங்கலுக்கு பொருள் உதவி செய்த ஜிவி பிரகாஷ் ஆதி, மெட்ரோ சத்யா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து,
சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்.

முடிவில் பரத் நன்றி கூறினார்.

Related posts

பாடல் தருவதில் வஞ்சனை செய்யாத இளையராஜா: நடிகர் மோகன் பாராட்டு

Jai Chandran

99 சாங்ஸ்: ஏ ஆர் ரஹ்மான் சிறப்பு போட்டி அறிவிப்பு..

Jai Chandran

கொரோனாவில் இறந்தவர் உடல் புதைக்கலாம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend