Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆர். கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்- ராகுல் ரவீந்திரன்

மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5′ தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது.

கேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட” தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே இக்கதை. இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மீண்டும் இவருக்கு ஒரு பெரிய பாராட்டுக்கள் குவியும் கேரக்டராக இது அமையும். இதன் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் ஆரம்பமாகியது. முதல் நாள் படபிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். காரைக்குடியிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெறும். இவரது ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். ‘

மாஸ்கோவின் காவேரி ‘ படம் மூலம் சமந்தாவுடன் அறிமுகமான இவர் பின்பு ‘ வணக்கம் சென்னை ‘, யூ- டர்ன் ‘ மற்றும் பல படங்களில் நடித்தார். அதே வேளையில் ‘அந்தாள ராட்சசி’ படம் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகி பிரபலமானார் . தெலுங்கில் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் – தெலுங்கு மொழிகளில் நடிக்கும் இவர் இன்று முதல் படபிடிப்பில் கலந்து கொள்கிறார். மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம்,
R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்ஷன் சார்பாக M.K. ராம் பிரசாத் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

Related posts

“Ninaivellam Neeyada” shooting wrapped up

Jai Chandran

Actor Kartikeya Gummakonda ties the knot to Lohitha

Jai Chandran

’சந்திரமுகி 2’ பட கதாநாயகி யார்? லாரன்ஸ் அறிக்கை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend