Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய விருது வென்றவர்களுக்கு நடிகர் நாசர் வாழ்த்து

அசுரன் படத்துக்காக தனுஷ், ஒத்த செருப்பு படத்துக்காக பார்த்திபன்,  சூபர் டீலக்ஸ் படத்துக்காக விஜய் சேதுபதி, விஸ்வாசம் படத்துக்காக டி.இமான், மேலும் ரசூல் பூகுட்டி, ராஜூ சுந்தரம்  ஆகியோர் தேசிய விருது வென்றதுடன் சிறந்த படத்துக்காக அசுரன் தேசிய விருது வென்றது. இதுகுறித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் நாசர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபதாவது:

என்ன தான் மாபெரும் பொருளாதார வெற்றி ஈட்டினாலும் ஓரு கலைஞனுக்கு அங்கீகாரமும் விருதுகளும் தான் மனநிறைவும் , அகமகிழ்வும்….

வருட காலமாய் துவண்டு கிடந்த தமிழ் திரை துறைக்கு சமீபத்திய விருது செய்தி , புத்துணர்ச்சி , புது வேகம் மற்றும் உத்வேகத்தை கொடுக்கிறது.
‘அசுரன்’ படத்திற்காக சிறந்த நடிகர் தேசிய விருது பெற்ற தனுஷ், சிறந்த படம் ‘அசுரன்’ படத்திற்காக தயாரிப்பாளர் எஸ்.தாணு, டைரக்டர் வெற்றிமாறன், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது பெற்ற விஜய்சேதுபதி, ‘விஸ்வாசம்’ படத்திற்கு சிறந்த இசைஅமைப்பாளர் விருது பெற்ற டி.இமான், பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு நம்பர்7’ படத்திற்காக இரண்டு தேசிய விருது பெற்ற ஆர்.பார்த்திபன், ஒலி வடிவமைப்பு செய்த ரசூல்பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் இப்படி தமிழ்த்திரையின் வரலாற்று புத்தகத்தில் பொன்னேடுகள் பொறித்த நடிகர்கள், கலைஞர்கள் , தொழில் நுட்ப வல்லுனர்கள் அனைவருக்கும் நடிகர் சமூகம் சார்பாக பெருமைமிகு வாழ்த்துக்கள் …
அனைத்து நடிகர் நடிகைகள் சார்பில் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்..

இவ்வாறு நாசர் தெரிவித்திருக்கிறார்.

Related posts

தசரா பண்டிகையில் 2 படங்கள் அறிவித்த சமந்தா !

Jai Chandran

Actor Arya has won the best actor for Magamuni

Jai Chandran

தக்ஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend