Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஐங்கரன் (பட விமர்சனம்)

படம்: ஐங்கரன்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார், ஆடுகளம் நரேன், காளி வெங்ஜட், அருள்தாஸ், ஹரிஸ் பெராடே,  அழகம் பெருமாள், சரவண சுப்பையா, அபிஷேக், சித்தார்த்தா ஷங்கர்

தயாரிப்பு:  பி.கணேஷ்

இசை: ஜி.வி.பிரகாஷ்

ஒளிப்பதிவு: சரவணன்
அபிமன்யூ

இயக்கம்: ரவி அரசு

பி.ஆர்  ஒ: கோபிநாத்

போலீஸாக  இருந்தாலும்    இன்ஸ்பெக்ட ருக்கு  ஜீப் ஓட்டும் பணியிலிருக்கிறார் நரேன். இவரது மகன் ஜி.வி.பிரகாஷ்.  எஞ்ஜினீயரிங் படித்த திறமைசாலியான இவர் புதிய கண்டுபிடிப்புகள்  செய்வதில் வல்லவர். ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சில கொள்ளையர்கள் வைரங்களை கொள்ளையடித்துவிட்டு போலீசில் சிக்குகின்றனர். போலீசுக்கு தெரியாமலி ருக்க வைரங்கள்  அடங்கிய மூட்டையை காரிலிருந்து தூக்கி வீசுகின்றனர்   அந்தமூட்டை பயனில்லாத ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. 200   அடி ஆழத்தில் சிக்கிக் கொள்ளும் அந்த மூட்டையை எடுக்க முடியாமல் தவிக்கும் கொள்ளையர்கள் விபரீத திட்டமிடுகின் றனர்  அதன்படி குழந்தை ஒன்றை ஆழ்துளை கிணற்றுக்குள்   தள்ளிவிடு கின்றனர் . குழந்தையை மீட்க அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபடுகின்ற னர். குழந்தையை அதிகாரிகள் மீட்ட பின்  வைரம்  அடங்கிய பையை கைப்பற்ற கொள்ளையர்கள் எண்ணுகின்றனர் அதற்கு போலீஸ்  அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருக்கிறார் . இந்நிலையில் குழந்தையை உயிருடன் மீட்கும்  எந்திரம் ஒன்றை ஜிவி.பிரகாஷ் கண்டு பிடிக்கிறார் அதை பயன்படுத்தி னால் வைர பையை  எடுக்க முடியாது என்பதால் பிரகாஷ் கண்டு பிடித்த கருவியை பயன்படுத்தவிடாமல் போலீஸ்  அதிகாரி தடுக்கிறார். இந்தநிலையில் குழந்தையை மீட்க முடிந்ததா? கொள்ளையர்கள் திட்டம் நிறைவேறியதா என்பதற்கு த்ரில்லான பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

இதுரை அரசுகளாலும் அதிகாரிகளாலும்  கண்டு கொள்ளப்படாமலிருக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை வாங்கித்தர வேண்டும்  என்ற எண்ணத் துடன் கதைக்கருவை அமைத்தி ருக்கும் இயக்குனர் ரவி அரசு முயற்சிக்கு அப்ளாஸ் தரலாம்.

நல்லவேளை  நியூட்டன் வெளிநாட்டில் பிறந்தார் அவரே இங்கு பிறந்திருந்தால் ஆப்பிள் மரத்தை போதி மரமாகவும், நியூட்டனை புத்தராகவும் ஆக்கியிருப் பார்கள் என்று கிளைமாக்ஸில் அடிக்கும் கமென்ட் அரங்கையே கைத்தட்ட வைக்கிறது.

புதிய கருவிகள் கண்டு பிடிக்கும் இளம் விஞ்ஞான பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத் தை முழுமையாக் உணர்ந்து உள்வாங்கி நடித்திருக்கிறார்.

கோழிகளுக்கு ஊசி போட்டு தில்லுமுல்லு செய்யும் ரவுடியை வீடியோ எடுத்துபோட்டு போலீஸில் சிக்க வைக்கும் ஜி.வி.பிரகாஷை  ரவுடிகள் ஆயுதங்களுடன்   தாக்க வர அவர்களை துவசம் செய்வதும் அதேபோல் கொள்ளையர்கள் ரவுண்டு கட்டி தாக்கும்ன்போதும் பாய்ந்து மோதி ஆக்‌ஷன் காட்சிகளில் அசர வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற ஜி.வி.பிரகாஷ் தயார் செய்யும் கருவியை பயன்படுத்த விடாமல் செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் தடுப்பது காட்சியில் டென்ஷன் பரவ வைக்கிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் நடிப்பு உருக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஹரிஸ் பெராடே, , மகிமா நம்பியார் காட்சிக்கு  துணை நிற்கின்றனர்.

கமர்ஷியலாக படம் தயாரித்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று எண்ணி  இப்படத்தை  தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் பி.கணேஷ்  பாராட்டுக்குரியவர்.

தொடக்கத்தில் சொன்னபடி இயக்குனர் ரவி அரசுவின் கதைக்களம் பல இளம் விஞ்ஞானிகளுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தி தர வாய்ப்பிருக்கிறது. இந்த குரல் அரசின் காதுக்கும் கேட்கச் செய்ய வேண்டும்.

இசை பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்றிருக்கிறார்.

சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு தெளிவு.

ஐங்கரன்-  அர்த்தமுள்ள படம்.

Related posts

ebseries with ZEE5Tamil has commenced filming

Jai Chandran

இளையராஜா இசையமைப்பில் ” மதுரை மணிக்குறவர்” ரெடி

Jai Chandran

ZEE5 Original Series ‘Ayali’ Success Meet!!!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend