Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் விவேக் மரணம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

*நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகார்: விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்*

இந்த நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை இன்று (ஆக.25) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.இதுகுறித்து சரவணன் கூறுகையில், “கரோனா தடுப்பூசியை யார் யார் செலுத்திக்கொள்ள வேண்டும், யாருக்குச் செலுத்தக்கூடாது என்பதை மத்திய, மாநில அரசுகள் வரையறுக்கவில்லை. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்த தெளிவான விளக்கமும் வெளியிடவில்லை.இதனால்தான் கடந்த ஏப்ரல் 17-ம் தேதியே தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அளித்தேன். (Case No. 1987/22/13/2021) அதன் படி ஆணையம் புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. நடிகர் விவேக்கின் மரணத்தை முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முன் அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளேன்” என்றார்.

Related posts

Kamal Haasan MNM Party New office bearers

Jai Chandran

Making of LifeOfCharlie song

Jai Chandran

விக்ராந்த் ரோனா டீஸர் வெளியிடும் சிரஞ்சீவி, மோகன்லால் & சிம்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend