Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பயணிகள் கவனிக்கவும் (பட விமர்சனம் )

படம்: பயணிகள் கவனிக்கவும்

நடிப்பு: விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா, சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன்

தயாரிப்பு: விஜய் ராகவேந்திரா

இசை: ஷாம் நாத் நாக்

ஒளிப்பதிவு: எஸ்.பாண்டிகுமார்

இயக்கம்: எஸ்.பி.சக்திவேல்

ரிலீஸ்: ஆஹா ஒரிஜினல் ஒடிடி

பி ஆர் ஒ : யுவராஜ்

விதார்த், லக்ஷ்மி பிரியா காது கேளாத, பேச்சு வராத மாற்றுத் திறனாளிகள். பள்ளி ஒன்றில் லைப்ரரியனாக பணிபுரிகிறார் விதார்த். இவர்களுக்கு ஒரு மகன், மகள். ஒருநாள் மகளுக்கு உடல்நலமில்லாமல் போகவே அவரை மருத்துவ மனையில் அனுமதிக்கும் விதார்த் அங்கேயே இரண்டு நாள் தூங்காமிலிருந்து மகளை கவனித்துக் கொள்கிறார். மெட்ரோ ரயிலில் வீட்டுக்கு திரும்பும் அவர் அசதியில் ஒரு பெஞ்சில் அசந்து தூங்கிவிடு கிறார். அதே ரயிலில் வரும் கருணாகரன் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டு குடித்துவிட்டு போதையில் தூங்கும் நபர் என கமென்ட்டும் பதிவிடுகிறார். இது வைரலாகிறது. இதனால் விதார்த் வேலை பறிபோகிறது. அவரை பார்ப்ப வர்கள் எள்ளி நகையாடுகின்றனர். செய்வதறியாது தவிக்கும் விதார்த் போலீஸில் புகார் அளிக்கிறார். இதற்கிடையில் கருணாகரனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. விதார்த் கொடுத்த புகாரில் கருணாகரனை போலீஸ் தேடுகிறது. இதில் பயந்து போகும் கருணாகரன் நிம்மதியில்லாமல் தவிக்கிறார். எங்கே தன்னை போலீஸ் கைது செய்துவிடுமோ என்று அஞ்சி அவசரமாக துபாய் செல்ல முடிவு செய்கிறார்.ஆனாலும் அவரை விமான நிலையத்தில் வைத்து போலீஸ் கைது செய் கிறது. அடுத்து நடப்பது என்ன என்பதற்கு உருக்கமான பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

பொழுதுபோக்கு படங்கள் ஆயிரம் வந்தாலும் அத்திப் பூத்தார்போல் பயணிகள் கவனிக்கவும் போன்று ஒரு சில கருத்துள்ள படங்கள் அவ்வப்போது வருகிறது.

விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா, அம்மா, குழந்தைகள், போலீஸ் என எல்லா பாத்திரங்aகளும் இயற்கையான நடிப்பில் கண்முன் நிஜபாத்திரங்களாக வாழ்ந்திருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளியாகவே விதார்த் மாறி விட்டாரோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு அவரது சைகை, உடல் மொழி, மெல்லிய குரலில் பேசுவது என படம் முழுக்க உயிர்ப்புடன் வாழ்கிறார்.

தன்னை குடிகாரன் என்று சமூக வலைதளத்தில் பதிவு வந்ததை அறிந்து தான் குடிகாரன் இல்லை என்று பார்பவர்களிடமெல்லாம் சொல்லி அழும் போது கண்களை குளமாக்குகிறார்.

அதேபோல் கருணாகரனும் தனது கதாபாத்திரத்தில் மூழ்கியிருக்கிறார். சமூகவலைதள ஆர்வலர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விமான நிலையத்தில் தொடங்கி வீடுவரை பயணிப்பதை லைவ் வீடியோவாக பதிவு செய்வது, செல்ஃபி எடுத்து பதிவிடுவது என பல இளவட்டங்களின் ஆரவக்  கோளாறுகளை அப்பட்டமாக நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தன்னை போலீஸ் தேடுகிறது என்று தெரிந்ததும் முகத்தில் இருந்த சந்தோஷத்தை முற்றிலுமாக துளைத்துவிட்டு பயத்துடன் கருணாகரன் நடமாடுவதும் அடுத்து என்ன நடக்குமோ என்ற திகிலில் அஞ்சி நடுங்குவதும் படபடப்பு .

கிளைமாக்ஸில் போலீஸ் விசாரணை யில் கருணகரன் அவரது குடும்பத்தினர் பதறுவது வித்தார்த் என்ன முடிவெடுப் பாரோ என்ற பதற்றம் எல்லோரையும் மவுனமாக்குகிறது.

விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார் ஆஹா ஒரிஜனல் படைப்பான பயணிகள் கவனிக்கவும் படத்தை நேர்த்தியாக இயக்கி உள்ளார் எஸ்.பி.சக்திவேல்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விக்ருதி படமே தமிழில் பயணிகள் கவனிக்கவும் படமாக ரீமேக் ஆகியுள்ளது.

ஷாம் நாத் நாக் இசை, பாண்டிகுமார் ஒளிப்பதிவு நிறைவு.

பயணிகள் கவனிக்கவும் – சமூக வலைதளத்தின் மறுமுகம்.

Related posts

PUBG: AUDIO RIGHTS BAGGED by LAHARI Music

Jai Chandran

Colourful love track Kannaatti hits 1 Million+ views

Jai Chandran

Kamal has given voice to “Ponniyin Selvan” – Mani Ratnam

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend