நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு, வெளியான படம் ‘சர்தார்’. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். இதில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார்.
தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து. இதன் 2ம் பாகம் உருவாகிறது. பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணி ‘சர்தார் 2’ல் மீண்டும் இணைந்துள்ளது.
இதில் மேலும் எஸ் ஜே சூர்யா, மாளவிாக மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மைசூரில் ‘சர்தார் 2’ படத்தின் சண்டை காட்சி படமானபோது கார்த்திக்கு காலில் காயம் எற்பட்டது. அவர் வலியால் துடித்தார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக் குழுவினர் சென்னை திரும்பினர். கார்த்தி காலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.
