மாற்றான். அனேகன், காப்பான் போன்ற படங்களின் இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள இரங்கல்
பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி.
நடிகர் தனுஷ் இரங்கல்:
நேர்மையான, மென்மையான மனிதர் கே.வி.ஆனந்த். இனிமையும் சந்தோஷமும் அவர் வாழ்வில் நிரம்பி இருந்தது. கே.வி. ஆனந்த் மிக சீக்கிரமே காலமாகி இருக்கி றார். இதுமிகவும் சீக்கிரம்.. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கே.வி.சார் ஆன்மா சாந்தி அடையட்டும்.
இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள இரங்கல்:
கே.வி.ஆனந்த் மறைவு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது. எனது இதயம் மிகவும் கனத்துவிட்டது. வலி நிரம்பி உள்ளது. ஜீரணிக்க முடிய வில்லை. எந்து நெருங்கிய நணபரை இழந்துவிட்டேன். அற்புதமான கேமராமேன், திறமையான இயக்குனர். இது எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. நான் உன்னை இழந்து வாடுகிறேன் நண்பா. அவரது குடும்பத் துக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இயக்குனர் சுசீந்திரன்:
இயக்குனர் கேவி.ஆனந்த் சாரின் இந்த மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியும் ஆயிரம் கேள்விகளையும் உருவாக்கி உள்ளது. நல்ல மனிதர், சிறந்த படைப்பாளி அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுறேன்.