Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அதிரடி வசனங்களுடன் ஜெயம் ரவியின் ‘பூமி’ பட டிரெய்லர் ரிலீஸ்

ஜெயம் ரவியின் அதிரடி வசனங்கள், சண்டை காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது  பூமி படம். இதில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.   லக்‌ஷ்மன் இயக்கி உள்ளார்.இப்[படம் பொங்கல் தினத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது,

இப்படத்தின் ட்ரெய்லர் இன்று  வெளியானது. ஜெயம் ரவியின் அதிரடி வசனங்கள், ஆக்‌ஷன் ரொமான்ஸ் காட்சிகள், விவசாயிகளுடன் நடத்தும் போராட்ட என டிரெய்லர் பரபரக்கிறது.

முன்னதாக இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாவது குறித்து ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது,’ பூமி திரைப்படம்‌ எனது சினிமா பயணத்தில்‌ ஒரு மைல்‌ கல்‌. இப்படம்‌. எனது திரைப்பயணத்தில்‌ 25 வது படம்‌ என்பதை தாண்டி, என்‌ மனதிற்கு மிகவும்‌ நெருக்க மான படம்‌. கோவிட்‌ -19 காலத்தில்‌ ரிலீஸாகும்‌ படங் களின்‌ வரிசையில்‌ இப்படமும்‌ இணைந்திருக்கிறது. உங்களு டன்‌ இணைந்து திரையரங்கில்‌ இப்படத்தை ரசிக்க நினைத் தேன்‌, ஆனால்‌ காலம்‌ வேறொரு திட்டம்‌ வைத்திருக் கிறது. இப்படம்‌ உங்கள்‌ இல்லம்‌ தேடி உங்கள்‌ வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உடன்‌ இணைந்து உங்களின்‌ 2021 பொங்கல்‌ கொண்டாட்டத்தில்‌ பங்குகொள்வதில்‌ நான்‌ பெருமை கொள்கிறேன்‌. நிறைய பண்டிகை காலங் களில்‌ திரையரங்கில்‌ வந்து,

எனது திரைப்படத்தை பார்த்து, பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள்‌. இந்த பொங்கல்‌ பண்டிகை தினத்தில்‌ எனது அழகான திரைப்படத்துடன்‌ உங்கள்‌ வீட்டில்‌ உங்களை சந்திப் பதை, ஆசிர்வாதமாக கருது கிறேன்‌. பெரும்‌ அன்புடனும்‌, நிறைய நம்பிக்கையுடனும்‌, என்‌ திரைப்படத்துடன்‌ உங்களை
திரையரங்கில்‌ சந்திக்க காத்திருக்கிறேன்‌. கடவுள்‌ நம்மை ஆசிர்வதிக்கட்டும்‌
இவ்வாறு ஜெயம் ரவி கூறி உள்ளார்.

இவ்வாறு ஜெயம் ரவி கூறி உள்ளார்.

Related posts

தமிழில் வெ:ளிவந்த நெடுநல்வாடை தெலுங்கு பேசுகிறது..

Jai Chandran

கல்யாணி நடிக்கும், மலையாள படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’

Jai Chandran

கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend