Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற தனுஷ்.. அசுரன் சிறந்த படம்..

சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கனாகன 67 வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கலைப்புலி எஸ்,தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான படம் அசுரன் படம் 2 விருதுகளை தட்டி உள்ளது.

சிறந்த படமாக அசுரன் தேர்வாகி இருப்பதுடன் அதில் நடித்த  தனுஷ் சிறந்த நடிகருக்கான விருது பெற்றிருக்கிறார்.. இதில்  இளமை மற்றும் முதுமை என இருமாறுபட்ட தோற்றத்தில் நடித்தார். அவர் சிறந்த நடிகராக தேர்வாகி இருக்கிறார். (மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது).  ஒரு தந்தை தனது மகனைக் காப்பாற்ற முயலும் கதாபாத்திரத்தில்  அசுரன் படத்தில் நடித்திருந்தார் தனுஷ். அவரது நடிப்பு அப்போதே பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸில் திருநங்கை யாக விஜய் சேதுபதி நடித்தி ருந்தார். அவர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென் றார். விஜய்சேதுபதி பெறும் முதல் தேசிய விருது இதுவாகும்.


அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் பாடல் ளுக்காக டி இமான் மனுக்கு சிறந்த இசைகாக விருது பெற்றார்.

நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சோதனை முயற்சியாக ஒரே நடிகர் மட்டுமே நடித்து இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 சிறப்பு ஜூரி விருது வென்றது மற்றும் அப்படத்தின் ஒலி வடிவமைப்பாளரான

ஆஸ்கார் விருது பெற்ற ரசுல் பூக்குட்டி சிறந்த ஆடியோகிராபி விருதை பெறுகிறார்.


மதுமிதா இயக்கிய கே.டி என்கிற கருப்பு துரை படத்தில் நடித்த நாக விஷால் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதைப் பெற்றார்.


மகேஷ் பாபுவின் தெலுங்கு திரைப்படமான மகரிஷி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடன இயக்குனர் விருதை நடன இயக்குனர் ராஜு சுந்தரம் பெற்றார்.

Related posts

தேஜா சஜ்ஜாவின் ‘ஹனு-மேன்’ பட டீசர் வெளியீடு

Jai Chandran

நடிகர் சூர்யா திரைப்படத்துக்கு மிரட்டலா? மார்க்சிய கம்யூ கண்டனம்

Jai Chandran

Vels Film International set new platform for youth “VELS SIGNATURE’,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend