Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனுஷ்-கங்கனா சிறந்த நடிகர்- நடிகை : தேசிய விருது முழு விவரம்

 கடந்த 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள்  நேற்று அறிவிக்கப் பட்டது.  சிறந்த படமாக கலைப்புலி ஸ்.தாணு தயாரித்த அசுரன் படம் தேர்வாகி இருக்கிறது. இப்படத்தை  வெற்றிமாறன் இயக்க தனுஷ் நடித்திருந்தார். இதில் சிறந்த நடிக்கப் வெளியிட்ட தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.
தேசிய விருதுகள் வென்ற படம் மற்றும் கலைஞர்கள் விவரம் வருமாறு:

சிறந்த படம் அசுரன்.

அசுரன் படத்தில் நடித்த தனுஷ் மற்றும் இந்தியில் போன்ஸ்லே படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பா சிறந்த நடிகர்களுக்கான விருது பெறுகின்றனர். சிறந்த நடிகை கங்கனா ரனாவத் தேர்வு செய்யப்பட்டார் மணிகர்னிகா மற்றும் ‘பங்கா’ ஆகிய இரு படங்களுக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த துணை நடிகர்   விஜய் சேதுபதி (படம் சூப்பர் டீலக்ஸ்).

சிறந்த  இசையமைப்பாளர் டி. இமான்  (படம் விஸ்வாசம்).

சிறப்பு ஜூரி  விருது பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7. மேலும் ஒத்த செருப்பு  திரைப்படத்துக்காக  சிறந்த ஒலிக்கலவை செய்த ரசூல் பூக்குட்டிக்கும்  விருது  வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திர விருது கேடி என்கிற கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு கிடைத்து உள்ளது.

சிறந்த பின்னணி பாடகருக்கான விருது இந்தி திரைப்படமான ‘கேசரி’ படத்தின் ‘தேரி மிட்டி’ பாடலுக்காக பி பிராக் பெறுகிறார்.
சிறந்த இந்தி திரைப்படமாக சிச்சோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
சிறந்த மலையாளப் படம்  மரக்கார் அரபிகடலிண்டே சிம்ஹம் மற்றும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட், சிறந்த ஆடை வடைவமைப்பு(சுஜித் மற்றும் சாய்)  என இப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.
தெலுங்கில் சிறந்த பொழுதுபோக்கு படம் மகரிஷி. மேலும் இப்படத்திற்காக சிறந்த நடன மாஸ்டருக்கான விருதை ராஜு சுந்தரம் பெறுகிறார்.
சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது மாதுக்குட்டி சேவியர் இயக்கிய ‘ஹெலன்’ (மலையாளம்) படம் பெறுகிறது.
சிறந்த  சண்டைபயிற்சி : அவனே ஸ்ரீமன் நாராயணா (கன்னடம்)  படத்திற்காக விக்ரம் மோர். சிறந்த பாடல்: பிரபா வர்மா  கோலாம்பி  (மலையாளம்) .
சிறந்த பின்னணி இசை பிரபுதா பானர்ஜி ஜெயேஷ்தோபுட்ரோ (பெங்காலி).  சிறந்த ஒப்பனை கலைஞர்  ரஞ்சித்   ( ஹெலன் –
மலையாளம்). சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆனந்தி கோபால் (மராத்தி)
சிறந்த படத்தொகுப்பு  ஜெர்சி (தெலுங்கு).
சிறந்த ஆடியோகிராபி ஐவ்டு (காசி).
சிறந்த திரைக்கதை (அசல்) ஜெயேஷ்தோபுட்ரோ (பெங்காலி).
சிறந்த திரைக்கதை (தழுவல்) கும்னாமி (பெங்காலி).
சிறந்த திரைக்கதை (வசனம்) தாஷ்கண்ட் பைல்ஸ் (இந்தி).
சிறந்த ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன் ஜல்லிக்கட்டு படம்  (மலையாளம்).
சிறந்த பெண் பின்னணி பாடகர்: சவணி ரவீந்திரா பார்டோ (மராத்தி படம் )
சிறந்த இயக்கம் பஹத்தார் ஹூரைன் (இந்தி) படத்திற்காக சஞ்சய் புரான்
சிங் சவுகான் பெறுகிறார். சிறந்த குழந்தைகள் படம் கஸ்தூரி (இந்தி)
சுற்றுச்சூழல் குறித்த சிறந்த படம்: நீர் அடக்கம் (மோன்பா). சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படம்: ஆனந்தி கோபால் (மராத்தி). தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த படம்: தாஜ்மஹால் (மராத்தி)

Related posts

சிபி சத்யராஜ் நடிக்கும் கபடதாரி ட்ரெய்லர் 1 மில்லியன் வியூஸ் கடந்தது..

Jai Chandran

Seven veterans honoured with Kala Pradarshini

Jai Chandran

சினிமா மகளிர் 277 பேருக்கு பி டி ஜி நிறுவனம் உதவி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend