Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க தேர்தலில் நாசரின் பாண்டவர் அணி வெற்றி

கடந்த 2019ல் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் திற்கு  தேர்தல் நடந்தது. இதில்  பாண்டவர் அணி என நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர்    ஒரு அணியாக வும் சங்கரதாஸ்  அணி  என கே. பாக்ய ராஜ் தலைமையில் மற்றொரு  அணியும்  போட்டியிட்டனர். வாக்கு பதிவு முடிந்த பிறகு

தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டது.  வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து பதிவான வாக்குகள் எண்ணப்படாமல்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.
தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் சமீபத்தில் உத்தரவிட்டது.

கோர்ட் உத்தரவுப்படி  இன்று ( மார்ச் 20, 2022) காலை 8 மணிக்கு நுங்கம்பாக் கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி யது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மொத்தம் 1, 602 வாக்குகள் பதிவாகியிருந்தது. அதில் 1,042 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின.

நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசம் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர் ( 1),  துணைத்தலைவர்கள் (2), பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
காலையில் தொடங்கிய வாக்கு எண்ணும் பணி சில காரணங்களால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. பின்னர் பபடிப்படியாக முடிவுகள் வெளியாகின.
பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட நிர்வாகிள் பெரும்பாலான செயற்குழு     உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.

Related posts

ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி டிரெய்லர்

Jai Chandran

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்..

Jai Chandran

*Is the sequel of Queen on the charts? Actess Ramya Krishnan Shares

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend