Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

2023ம் ஆண்டில் ஷாருக்கின் 3 வெற்றி படங்கள்..

‘பதான்’- ஓராண்டு நிறைவு ! ‘ஜவான்’- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான ‘டங்கி’ திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்…2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக் கிறார்.!

ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டு களை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத்தொடர்ந்து ‘ஜவான்’, ‘டங்கி’ என பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து இந்த ஆண்டு முழுவதும் திரையுலகில் ஆட்சி செய்து ஆதிக்கம் செலுத் தினார்.

இந்நிலையில் ‘பதான்’ வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலை யிலும், ஷாருக்கானின் ‘ஜவான்’, ‘டங்கி’ என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை வழங்கியதால் அவரது ரசிகர்கள் ஷாருக்கின் படங்களை நினைவுக்கூர்கி lறார்கள்.

பதானுக்கு பிறகு ஷாருக்கான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவானை வழங்கினார். இது ஒரு மெகா பான் இந்திய பிளாக் பஸ்டராக மாறியது. பவர் பேக் ஆக்ஷனுடன் கூடிய ஷாருக் கானின் கதாபாத்திரத்தையும் அவரது திரை தோற்றத்தையும் இதற்கு முன் ரசிகர்கள் பார்த்த தில்லை. ஜவானும் பல சாதனை களை முறியடித்தது. ₹1,148.32 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அதிக அளவில் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

தொடர்ந்து இரண்டு அதிரடி ஆக்சன் பிளாக் பஸ்டர் ஹிட்டு களை வழங்கிய பிறகு ஷாருக் கான் மனதைக் கவரும் மகத்தான படைப்பான ‘டங்கி’யை வழங்கி னார். இந்த படத்தின் மூலம் மில்லியன் கணக்கிலானவர்க ளின் இதயங்களை தொட்டார். திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்களின் பெருங் கூட்டத்தை ஈர்த்தார். அத்துடன் வெளிநாட்டில் வாழும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை தாயகம் திரும்பும் உணர்வையும் தூண்டி னார். இத்திரைப்படம் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் இது வரை 450 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ ஆகிய படங்களின் மூலம் ஒரே வருடத்தில் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட்டு களை கொடுத்து ஷாருக்கான் சாதனை படைத்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கான் நடிப்பில் வெளியானவை. இத்தகைய சாதனையை படைத்த ஒரே நடிகர் ஷாருக்கான் என்ற புதிய சாதனை யையும் அவர் படைத்திருக்கிறார். இதன் மூலம் நடிகர் ஷாருக்கான், தனக்கு தான் தான் மிகப்பெரிய போட்டியாளர் என்பதை மீண்டும் நிரூபித்து, புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.

Related posts

Watch #BloodMoney, A ZEE5 Original Film

Jai Chandran

MISHRI ENTERPRISES’s ASTAKARMMA Trailer

Jai Chandran

விஜயகுமாரி, டெல்லி கணேஷுக்கு சாதனை விருது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend