Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பீட்ஸா பாய்ஸ் மூலம் அறிமுகமாகும் புது கதாநாயகன் சிவம் சங்கர்

செவன் ஹில்ஸ் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சங்கர் கே என், சஹானா சங்கர் தயாரிக்கும் படம் “பீட்சா பாய்ஸ் “. சுக் தேவ் சிங் இணை தயாரிப்பு செய்கிறார்.

இப்படத்தை சேகர் கேஷவ் ஷிரின் கதை திரைக்கதை வசனம் எழுதி இசையமைத்து இயக்குகிறார். குரு பிரசாத் எம் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ சாஸ்தா பின்னணி இசை அமைக்கிறார். கணேஷ்குமார் டி, பவித்ரா வி கே எடிட்டிங் கவனிக்கின்றனர்.

இதில் சிவம் சங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அலிபியா நடிக்கிறார். இவர்களுடன் சரத், ஜிமிகிலி, அருள, காக்கா முட்டை ரமேஷ், சில்மிஷம் சிவா, சோப்புராஜ் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் சேகர் கேஷவ் ஷிரின் கூறியதாவது:

ஏற்கனவே  சங்கர் தயாரித்த இந்தி படம் ஒன்றை நான் இயக்கினேன். இது அவரது தயாரிப்பில் நான் இயக்கும் 2வது படம்.

இப்படத்தின் கதையை பொருத்தவரை தமிழ் இளைஞர்கள் நான்கு பேர் பெங்களூருக்கு வேலை தேடி செல்கின்றனர். அங்குள்ள பெரிய பீட்ஸா ரெஸ்டாரண்டில் வேலை செய்கிறார்கள். இந்த நிலையில் ரெஸ்டாரன்ட் ஓனருக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் கோபமடைந்த ஓனர், நான்கு பேரையும் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து துரத்துகிறார் . கோவம் அடைந்த இளைஞர்களும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து உங்களைவிட பெரிய தொழிலதிபராக வருவோம் என்று சவால் விடுகின்றனர். கையில் காசு இல்லாத நிலையில் அவர்களுக்கு இட்லி கடை நடத்தும் பெண் உதவுகிறார். அவர்கள் போட்ட சவாலில் வைப்பதற்கு தானும் பக்கபலமாக இருப்பதாக உறுதி தருகிறார். இளைஞர்கள் சவால் விட்டபடி ஜெயிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. காதல், கிரைம், காமெடி கலந்த கலையான இதில் இனிமையான மெலடி பாடல், ஆட்டம் போட வைக்கும் குத்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. முழுக்க முழுக்க கமர்சியல் ரீதியான படமாக உருவாகியிருந்தாலும் இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு மோட்டிவேஷன் மெசேஜ் படத்தின் அடிநாதமாக இழையோடியிருக்கும்.

இதன் படப்பிடிப்பு முழுக்க பெங்களூரில் நடந்திருக் கிறது. ஆனால் நேரடி தமிழ் படம் தான். சிவம் சங்கர் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகனாக பொருந்தியிருக்கிறார்.
அதேபோல் கதாநாயகி அலிபாபாவும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். காமெடி ஆக்சன் காதல் கலந்து அனைத்து தரப்பினரக்குமான படமாக உருவாகியிருக்கிறது. டிசம்பர் மாதம் 4ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

கதாநாயகன் சிவம் சங்கர் கூறியதாவது : நான் நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றிருக்கிறேன். அதில் கோல்ட் மெடலும் வாங்கி இருக்கிறேன். எனக்கு சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை. பீட்சா பாய்ஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமாவதில் சந்தோஷம் அடைகிறேன். டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனது கதாபாத்திரத்திற்காக உடல் எடையில் 20 கிலோ குறைத்தும், பின்னர் 22: கிலோ உடல் எடை கூட்டியும் நடித்திருக்கிறேன். இது எனக்கு சவாலக இருந்தது. எனது தோற்ற வேறுபாடு படத்தில் நன்றாகவே தெரியும்.

நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் பையன் தான். எனது பெற்றோர் தமிழர்கள்தான். தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தமிழர்களை பொருத்தவரை சிங்கப்பூர், இலங்கை, மலேசியா என பல்வேறு நாடுகளில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தமிழ் பேசும் விதம் வெவ்வேறு உச்சரிப்பாக இருக்கும். அத்தனை நாட்டுத் தமிழர்களின் பேச்சு வழக்கு உச்சரிப்பில் நடிக்க வேண்டும் அதன் மூலம் உலக தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்.


நடிகை அலிபியா கூறியதாவது:

நான் கோயம்புத்தூர் தமிழ் பொண்ணு ஏற்கனவே திரள் என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். அப்படம் சில வருடங்களுக்கு முன்ப வெளியானது. நான் நடிக்கும் இரண்டாவது படம் பீட்சா பாய்ஸ். இட்லி கடை நடத்தும் தாயின் மகளாக இதில் நடித்திருக்கிறேன். ஹீரோ உள்ளிட்ட நான்கு நண்பர்களுக்கு பின்னால் நின்று அவர்களுக்கு உதவும் நல்ல கதாபாத்திரம் அந்த வாய்ப்பை நன்றி பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்.
இப்படத்தில் நடித்த போது அனைவருமே ஒரு குடும்பம் போல் இருந்து பணியாற்றினோம்.

தயாரிப்பாளர் சங்கர் கே என், சகானா சங்கர் கூறியதாவது :

பீட்சா பாய்ஸ் கதையை இயக்குனர் கூறிய போது மிகவும் பிடித்திருந்தது. இதே இயக்குனருடன் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படம் தான் பீட்சா பாய்ஸ் . தொடர்ந்து படங்கள் தயாரிக்க உள்ளோம்.
இவ்வாறு தயாரிப்பாளர்கள் கூறினார்கள்.

Cast n Crew details of Pizza Boys :

Hero : Shivam Shankar
Heroine : Alfia
Villain :Sharath
Hero firends : jimikili ,Arul,kakkamutta Ramesh, slimisam siva
Police : Shobhraj

SEVEN HILLSS CINECREATIONS

PRESENTS

PRODUCED BY – SHANKAR KN & SAHANA SHANKAR
CO PRODUCER – SUKHDEV SINGH
I
WRITTEN & DIRECTED BY – SHEKHAR KESHAV SIRRINN

MUSIC – SHEKHAR KESHAV SIRRINN
SINGER – ANTHONY DASAN

LYRICS – Ve. MADHAN KUMAR

CHOREOGRAPHER – HARI KIRAN

DOP – GURU PRASAD MG

BACKGROUND SCORE – SHRI SASTHA

EDITOR – GANESH KUMAR.D – PAVITHRA.V.K

ART DIRECTOR – GANESH KUMAR

STUNT – VIOLENT VELU

STUNT ASSISTANT : MUHAMMAD SAJIR

PRODUCTION MANAGER – SATISH BRAHMAVAR

COSTUME DESIGNER – SAHANA SHANKAR

PRO – SURESH CHANDRA/ABDUL A NASSAR

PUBLICITY DESIGN – SELVA

LYRICAL VIDEO – CINE CUTZ STUDIO DGK-PVK

DI COLORIST – BALAGANGADHARAN

DISTRIBUTION – HARI UTHRAA PRODUCTIONS

 

Related posts

விஜய் – சங்கீதா 23வது ஆண்டு திருமணவிழா

Jai Chandran

சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா..

Jai Chandran

Not just the fans is waiting for PUSPHA

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend