Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டி சி (D C) (பட விமர்சனம்

படம் : டிசி (D C)

நடிப்பு : லோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்ஜனா, கஸ்தூரிராஜா, தலைவாசல் விஜய், க்ரிஷ் தயால், அவினாஷ் ரகுநாதன், காக்கா கோபால் மற்றும் ஏராளமானவர்கள்

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: முகேஷ் ஜி

இயக்கம்: அருண் மாதேஸ்வரன்

பி ஆர் ஓ : ரியாஸ் கே அகமத், பாரஸ் ரியாஸ்

கதை: சிறுவயதிலேயே தந்தையை பிரிந்த தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ் ) கூலிப்படை ஆளாக  மாறி கொலைகாரனாகிறான் . அவனையும் அவனது நண்பர்களையும் போலீஸ் வலைவீசி தேடுகிறது. ஒரு கட்டத்தில் போலீசிடம் சிக்கும் தேவதாஸ் பின்னர் விடுதலையாகி வெளியே வருகிறான். மீண்டும் தனது கூலிப்படை வேலையே தொடர்கிறான். இதற்கிடையில் அவனுக்கு இரண்டு காதல் ஏற்படுகிறது. அந்த காதல்கள் என்னவாகிறது. சிறு வயதில் தந்தையை பிரிந்த தேவதாஸ் மீண்டும் தந்தையை பார்த்து இணைந்தானா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

மாஸ்டர், கூலி, லியோ போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் டிசி. லோகேஷ் கனகராஜ் படத்தில் வன்முறை அதிகம் இருக்கும், சில செண்டிமெண்ட் இருக்கும். அதே பார்முலாவைத்தான் இந்த படத்திலும் கையாளப்பட்டிருக் கிறது.

லோகேஷ் கனகராஜை எவ்வளவு கொடூர கொலைகாரனாக காட்ட முடியுமோ அவ்வளவு வெறித்தனம் பிடித்த கொலைகாரனாக இயக்குனர் காட்டி இருக்கிறார். ரவுடியிஸத்தைத்தான் ரசிகர்கள் இப்போது ஹீரோயிசமாக கொண்டாடுகிறார்கள். அந்த டெக்னிக்கைதான் லோகேஷ் கனகராஜ் கையாண்டிருக்கிறார். ஏற்கனவே ரஜினி, கமல், விஜய் படங்களை இயக்கி தான் ஒரு ஆக்சன் டைரக்டர் என்ற வகையில் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கும் லோகேஷ் கனகராஜ் அதை இப்போது ஹீரோ இமேஜாக மாற்றிக் காட்டி இருப்பது அவரது சாமர்த்தியம். இவரையும் ரசிகர்கள் கொண்டாட வாய்ப்பிருக்கிறது.

ஆக்சன் காட்சிகளில் ஹீரோக்கள் என்னவெல்லாம் முரட்டு ஸ்டைல் காட்டி அந்தர் செய்வார்களோ அதை லோகேஷ் கனகராஜ் செய்திருக்கிறார். அதேசமயம் அவர் மீது சென்டிமென்ட் வரும் வகையில் வாமிகா, சஞ்ஜனா என இரண்டு ஹீரோயின்களை வைத்து சில காதல் செண்டிமெண்ட் காட்சிகளை செய்திருக்கிறார்கள்.

பார்வதி கதாபாத்திரத்தில் வரும் சஞ்சனா பாடகியாக வந்து பழைய பாடல்கள் பாடி கவர்கிறார். சந்திரவாக வரும் வாமிகா ஒரு கூட்டத்திடம் சிக்கிக் கொண்டு விபச்சார தொழிலில் ஈடுபடுவதும் பின்னர் அந்த இடத்திலிருந்து லோகேஷ் கனகராஜால் மீட்கப்பட அவரை பின் தொடரும் வாமிகா திடீரென்று ஆக்சன் ஹீரோயினாக மாறி ரிவால்வர் ரீட்டாவாக அதிரி புதிரி செய்திருக்கிறார்.
என்கவுண்டர் போலீசாக வரும் கிரிஷ் தயால் யார் இந்த புது என்கவுண்டர் போலீஸ் என கேட்க வைக்கிறார். லோகேஷ் கனகராஜ் தந்தையாக வரும் கஸ்தூரிராஜா இயல்பான நடிப்பால் நிறைவு செய்கிறார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை தயாரித்திருக்கிறார்.
அனிருத் இசை வழக்கம் போல் ஒலிக்கிறது.
முகேஷ் ஜி கேமரா கதைக்கு ஏற்ற சூழலில் இருள் கலந்த பின்னணியில் டென்ஷன் குறையாமல் ஒளிப்பதிவு செய்து படமாக்கி இருக்கிறார்

ஆக்ஷன் ஸ்டார் ஹீரோவுக்கான கதையை லோகேஷ் கனகராஜுக்கு பொருந்தும்படி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியது பலம் ஆனால் வன்முறை காட்சிகள் ஒரு திகிலை ஏற்படுத்துகிறது.

டிசி – தெறிக்கும் தோட்டாக்கள்…

Movie Review
K.Jayachandhiran
trending cinemas now..com

 

Related posts

செஞ்சி (பட விமர்சனம்)

Jai Chandran

விமல் நடிக்கும் படவா ஆடியோ வெளியிட்ட விஜய் ஆண்டனி

Jai Chandran

Nandamuri Kalyan Ram’s spy thriller ‘Devil’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend