Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் சீனு ராமசாமியின் நூல்..

சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூல் வெளியீடு

பிரபல இயக்குனரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ என்ற புதிய நூல் இன்று சென்னை எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் வீட்டில்
எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி அருகிலும் எளிய முறையில் வெளியிடப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நேரடி அன்பைப் பெற்ற முன்னாள் மாநகராட்சி நிர்வாக மேலாளர் திரு. ராஜேந்திரன் இந்நூலினை முறைப்படி வெளியிட, அதன் முதல் பிரதியை நூலின் பதிப்பாசிரியர் ‘சந்தியா’ நடராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்திய மத்திய அரசின் சார்பில் இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான வாக்குறுதியை மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு திரு. எல். முருகன் அவர்கள் ஏற்கனவே வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நூல் வெளியீடு குறித்து இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது:

குழந்தைகளின் சிந்தனை மேன்மைக்கு
‘சினிமா ரசனைக் கல்வி’ மிக அவசியமானது. உலகின் சிறந்த சினிமாக்களை பள்ளி பருவத்திலேயே அவர்களுக்கு நாம் காட்டினால்
அதன் மூலமாக ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்திலே பல மாற்றங்கள் உண்டாகும்
இந்த நூலின் வழியாகத் தமிழகத்தில் சிறார்கள் மற்றும் பொதுமக்களிடையே சினிமா ரசனை குறித்து ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.”
*

Related posts

ஒரு சினிமா இயக்குனரின் எண்ணத்திலும் கைவண்ணத்திலும் உருவாகிய தஞ்சை கோவில் குடமுழுக்கு சிறப்பு பாடல்!

CCCinema

Arivazhagan ‘ s ‘AV 31’, dubbing works commenced Today

Jai Chandran

‘கபடதாரி’ படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா.

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend