Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மேட் இன் கொரியா (பட விமர்சனம் )

படம்: மேட் இன் கொரியா

நடிப்பு: பிரியங்கா மோகன், பார்க் ஹை ஜின், நோ ஹோ ஜின், ரிஷிகாந்த், ஜாங் ஜெயோன்

தயாரிப்பு: ஸ்ரீநிதி சாகர்

இசை: ஹிசாம் அப்துல்

ஒளிப்பதிவு : பிரசன்ன குமார்

இயக்கம்: ரா கார்த்திக்

வெளியீடு: நெட் ப்ளிக்ஸ் OTT தளம்

பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா

கதை : கிராமம் ஒன்றில் வசிக்கும் செண்பா (பிரியங்கா மோகன்) கன்னியாகுமரியில் இருந்து சிறுவயதில் கடல் கடந்து கொரியா சென்று அரசி என்ற நாடகத்தில் நடித்த நிலையில் கொரியா மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. வளர்ந்த பிறகு அவர் கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்று எண்ணுகிறார் ஆனால் அவரது தந்தையோ தான் நடத்தும் இட்லி கடையை மகள் பார்த்துக் கொண்டு வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிறார். இந்த நிலையில் செண்பாவை தேடி கொரியாவில் இருந்து நான்கு பேர் வருகிறார்கள். செண்பாவை தேடி அவர்கள் ஏன் வந்தார்கள்? செண்பா தான் எண்ணியபடி கொரியாவுக்கு எப்படி சென்றார்? என்பது கதை.

கொரியன் படங்கள் என்றாலே அதில் ஆக்சன் அடிதடி என கமர்சியல் அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. தெளிந்த நீரோடையாக ஒரு அழகான வாழ்வியல் கதையைத்தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு படமாகத்தான் மேட் இன் கொரியா உருவாகி இருக்கிறது.

கொரியாவில் சியோல் நகரில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று பிரியங்கா எண்ணுகிறார் அதன்படியே அவர் சியோலில் எப்படியெல்லாம் பொழுதை கழிக்கிறார் என்பது தேனில் ஊறிய பலாவாக இனிக்கும் அனுபவமாக அமைகிறது.

கொரியன் உணவு, இந்திய பாரம்பரிய உணவு என இரண்டு கலாச்சாரமும் ஒன்றாக சேரும் இடம் என கொரியாவில் சென்று படம் எடுத்தாலும் தமிழ் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கும் காட்சிகள் நிறையவே இருக்கின்றன.
பிரியங்காவை சுற்றியே கதை செல்கிறது. அவருடன் நடித்திருக்கும் ரிஷிகாந்த் மற்றும் கொரிய நடிகர்கள் பார்க் ஹை ஜின், நோ ஹோ ஜின், ஜாங் ஜெயோன் தங்களது இயல்பான நடிப்பில் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனர்.

ஸ்ரீநிதி சாகர் படத்தை தயாரித்திருக்கிறார்.

நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கி அளித்த ரா கார்த்திக் ஒரு மெல்லிய பூச்சாரல் மனதை தொட்டு தழுவி செல்லும் வகையில் மேட் இன் கொரியா படத்தை இயக்கியிருக்கிறார்.

இசை, ஒளிப்பதிவு காதுகளையும் கண்களையும் நிரப்புகிறது.

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படத்தை காணலாம்.

Review By
K. Jayachandhiran
trendingcinemasnow. com

Related posts

Blood Money teaser out now!

Jai Chandran

நடிகை பார்வதி நாயர் போலீஸ் புகார் குறித்து அறிக்கை

Jai Chandran

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’பூஜையுடன் தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend