படம்: மெட்ராஸ் மாஃபியா கம்பெனி
நடிப்பு: ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனிஷ் காந்த், ராம்ஸ், ஆதித்யா
தயாரிப்பு: வி சுகந்தி அண்ணாதுரை
இசை: ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு: அசோக் ராஜ்
இயக்கம்: ஏ எஸ் முகுந்தன்
பிஆர்ஓ: சதீஷ் S2 மீடியா
ராயபுரம் பிரபல தாதா பூங்காவனம் (ஆனந்தராஜ்) ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏஜெண்டுகளை நியமித்து ஐடி கம்பெனி போல் ரவுடி ஏஜென்சி நடத்தி வருகிறார். அந்தந்த ஏரியாவில் ரவுடிகளாக இருப்பவர்களை வைத்து தனக்கு வரும் அசைன்மென்ட்களை கொடுத்து கொலை செய்கிறார். ஆனால் பூங்காவனத்தை நேரம் பார்த்து தீர்த்துக்கட்ட அவரது கூட்டத்தில் உள்ளவர்களே திட்டமிடுகிறார்கள். பல கொலை சம்பவங்களை நிகழ்த்திய பிறகும் பூங்காவனம் மீது போலீசில் ஒரு எப் ஐ ஆர் கூட இல்லை என்பதால் அவரை கைது செய்ய முடியாத போலீஸ் துறை, இன்ஸ்பெக்டர் திகழ் பாரதி (சம்யுக்தா) தலைமையில் தனிப்படை அமைத்து பூங்காவனத்தை என்கவுண்டர் செய்ய முடிவு செய்யப்படுகிறது. இந்த திட்டங்களை அறிந்த பூங்காவனம் அவர்களிடமிருந்து தப்பிக்க முடிந்ததா?. என்பதே கிளைமாக்ஸ்.
வில்லனாக நடித்து பின் ஹீரோவாக சில படங்களில் நடித்த ஆனந்தராஜ் ஒரு கட்டத்தில் காமெடி படத்திலும் நடிக்க தொடங்கினார். தற்போது மீண்டும் அவருக்கு ஹீரோ வாய்ப்பு அமைந்திருப்பது அவரது நடிப்பு வாழ்க்கையில் ஒரு சுழற்ச்சியாக மாறி இருக்கிறது.
மதராஸ் மாபியா கம்பெனி பட ஹீரோவே ஆனந்தராஜ்தான் அவரை சுற்றித்தான் முழு கதையும் பின்னப்பட்டிருக்கிறது. வில்லத்தனத்துக்கு வில்லத்தனம் , அதே சமயம் தன்னை என்கவுண்டர் செய்ய வரும் சம்யுக்தாவிட மிருந்து தப்பிப்பதற்காக அவர் செய்யும் ஹீரோயிசம் இரண்டுமே ரசிக்கும்படி உள்ளது.
தொடக்கத்தில் ஒன்றிரண்டு காட்சியில் தலை காட்டிய ஆனந்தராஜுக்கு அடுத்த காட்சியிலேயே மாலை போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதை பார்த்ததும் அதுக்குள்ள ஆனந்தராஜ் கதாபாத்திரம் முடிந்துவிட்டதா என்று ஷாக் ஏற்படுகிறது. ஆனால் அதன் பிறகு பிளாஷ்பேக்கில் அவரது ரவுடியிச கதை தொடங்கி ஒவ்வொரு காட்சியும் கத்திக்குத்தாக இருந்தாலும் அதிலும் ஒரு நகைச்சுவை இழையோட நடித்து வித்தியாசமான ஆனந்தராஜாக ஆச்சரியப்பட வைக்கிறார்.
கிளைமாக்சில் ஆனந்தராஜ் நடத்தும் கூத்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு என்னென்ன லீடு கொடுக்க வேண்டுமோ அதையெல்லாம் கொடுத்து இரண்டாம் பாகத்திலும் நடிக்க நான் ரெடி என்று இயக்குனருக்கு சூசகமாக சமிக்ஞை காட்டியிருக்கிறார்.
ஆனந்த ராஜை போட்டு தள்ளுவதற்காக அவர் பின்னாலே கத்தியுடன் சுற்றி சுவரும் முனிஷ்காந்த் ஒவ்வொரு முறையும் ஆனந்தராஜை கொல்ல முடியாமல் மொக்கை வாங்கி அவரிடமே அடியும் வாங்கி காமெடி செய்து அரங்கை கலகலப் பாக்குகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சம்யுக்தா பாய்ந்து பறந்து ஆக்சன் அதிரடியில் தில் காட்டி இருக்கிறார்
வி சுகந்தி அண்ணாதுரை தயாரித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் மெலடி, குத்து, கானா என வகைக்கு ஒரு பாட்டு கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ் கேமரா ஒரு பிளாக் காமெடி படத்தை பளிச் காமெடியாக காட்டி இருக்கிறது.
இயக்குனர் ஏ எஸ் முகுந்தன் ரவுடியிச கதையாக இருந்தாலும் ரத்தம் குத்து வெட்டு என்று தலை சுற்ற வைக்காமல் குடும்ப செண்டிமெண்ட், மகள் செண்டிமெண்ட் கலந்து ஒரு தாதா குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை காமெடியுடன் தந்திருக்கிறார்.
மெட்ராஸ் மாபியா கம்பெனி – ரவுடிசம், ஆக்சன், காமெடி செண்டிமெண்ட் கூட்டாஞ்சோறு.

Review By
K Jayachandhiran
www.Trendingcinemasnow.com
