Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தண்டகாரண்யம் (பட விமர்சனம்)

படம்: தண்டகாரண்யம்

நடிப்பு: தினேஷ், கலையரசன், டான்சிங் ரோஸ் சபீர், பால சரவணன், ரித்திகா , வின்சு சாம், அருள்தாஸ், முத்துக்குமார், யுவன் மயில்சாமி

தயாரிப்பு: எஸ் சாய் தேவானந்த், எஸ் சாய் வெங்கடேஸ்வரன், பா ரஞ்சித்

இசை: ஜஸ்டின் பிரபாகர்

ஒளிப்பதிவு: ஸ்ரீ கிருஷ்

இயக்கம்: அதியன் ஆதிரை

பிஆர்ஓ: குணா

காடுகள் நிறைந்த பகுதிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. அந்த காடுகளுக்கு தண்டக்காரண்யம் என்று பெயர். காட்டுப்பகுதியில் வாழும் ஆதி குடிகள் இனத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ் குடும்பத்தினர். தினேஷின் தம்பி கலையரசன். காட்டில் உள்ள காட்டிலாகத் துறையில் உதவியாளராக வேலை செய்கிறார். தற்காலிக வேலையில் இருக்கும் அவருக்கும், இலாகா அதிகாரிக்கும் மோதல் நிகழ்கிறது. இதில் கலையரசன் வேலை பறிபோகிறது. பின்னர் துணை ராணுவ படையில் சேர்வதற்காக யாரோ ஒருவர் கொடுக்கும் ஐடியா படி நக்சலைட் என்று சொல்லி போலீஸில் சரணடைகிறார். அப்படி சரணடைந்தால் அவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நடப்பதோ வேறு. இதுபோல் அப்பாவிகளை நக்சலைட் என்ற பெயரில் சரணடை செய்து அவர்களை ஒரு கூட்டம் கொல்கிறது. அதன் காரணம் என்ன, கலையரசன் கதி என்னவானது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு படம் பதில் அளிக்கிறது.

குண்டு என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்பு இயக்கிய அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

மந்திரி மற்றும் அரசியல் துறை அதிகாரிகளால் அப்பாவி இளைஞர்கள் எப்படி நக்சலைட்களாக மாற்றப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்ற ஒரு உண்மையை துணிச்சலாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

அப்பாவியான கலையரசன் படிப்படியாக எப்படி நக்சலைட் என்ற தீவிரவாதியாக மாற்றப்படுகிறார், தன் உயிர் போகப் போகிறது என்பதை அறிந்து அவர் எடுக்கும் எதிர் நடவடிக்கைகள் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.

கலையரசனுக்கும், வின்சுவுக்கும் இடையே மலரும் காதல் காட்சிகள் கொஞ்சமே வந்தாலும் அதில் ஜீவன் உண்டு.

அட்டகத்தி தினேஷ் காட்டிலாகா அதிகாரிகள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதும் ஒரு கட்டத்தில் அவரே துப்பாக்கி எடுத்து வஞ்சகர்களை
கொல்வதும் கதையில் மற்றொரு பரிமாணம்.

டான்சிங் ரோஸ் சபீர், பாலா சரவணன், இந்தக் கால சௌகார் ஜானகி அழுகாச்சி ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படம் பெரும் பகுதி காட்டுப்பகுதியிலேயே பார்க்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ கிரிஷ் கேமரா அனைவரையும் காட்டுக்குள் அழைத்து செல்கிறது.

இயக்குனர் அதியன் ஆதிரை அப்பாவி பழங்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியை உருக்கமாக சொல்லி இருக்கிறார். ஆனால் சினிமாவுக்கு கொஞ்சம் கமர்சியல் அம்சங்களும் முக்கியம் என்பதை ஏன்தான் மறந்து விடுகிறார்களோ… ஒரு முக்கிய விஷயத்தை துணிச்சலாக சொல்வது மட்டும் போதாது அது வெகு ஜன மக்களிடம் சினிமா வழியாக பரலாக சென்று சேர சில சினிமா தனங்கள் நிச்சயம் தேவை என்பதை இனிமேலாவது இவரும், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் உணர்வது நல்லது. அப்போதுதான் வெற்றியுடன் அரசியல் லட்சியத்தை அடைய முடியும்.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். அடியே அலங்காரி அகங்காரி பாடல் கேட்கும்படி உள்ளது. மற்ற பாடல்கள் ஒப்பாரி பாணியில் அமைத்திருப்பது ரசிப்பதற்கு பதிலாக பயமுறுத்துகிறது.

தண்டகாரண்யம் – வீசியும் வெடிக்காத குண்டு.

Review By

K.Jayachandhiran

Trendingcinemasnow.com

Related posts

Shah Rukh fans are set to travel from abroad to homeland to watch Dunki

Jai Chandran

ராஜாவுக்கு செக் (பட விமர்சனம்)

CCCinema

வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ் ?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend