Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கேப்டன் பிரபாகரன் (பட ரீ ரிலீஸ் விமர்சனம்)

படம்: கேப்டன் பிரபாகரன்

நடிப்பு: விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர்

தயாரிப்பு: அ. செ. இப்ராஹிம் ராவுத்தர்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: ராஜராஜன் , ஏ ரமேஷ் குமார்

வசனம்: லியாகத் அலிகான்

இயக்கம்: ஆர் கே செல்வமணி

பிஆர்ஓ: டைமண்ட் பாபு, கேப்டன் ஆனந்த், கே எஸ் கே செல்வா

கடந்த 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆகஸ்ட் 22 ஆம் தேதி மீண்டும் இப்படம் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது.

கதை: சத்தியமங்கலம்  அடர்ந்த காட்டுப்பகுதியில் வீரபத்திரன் (மன்சூர் அலிகான்) மறைந்திருந்து சந்தன மரங்கள் வெட்டி கடத்துகிறான் அத்துடன் யானை தந்தங்களையும் கடத்துகிறான். அவனை அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் யாராவது போலீசில் காட்டிக் கொடுக்க முயன்றால் அவர்களை பொது இடத்தில் வைத்து எரிக்கிறான், சுட்டுக் கொள்கிறான். காட்டிலாகா அதிகாரி சரத்குமார் தனக்கு கிடைத்த தகவலை வைத்து வீரபத்திரன் கடத்தும் சந்தன மரங்கள் அடங்கிய லாரியை மடக்கி பிடிக்கிறார். இதனால் கோபமடைந்த வீரபத்திரன் சரத்குமாரை கொடூரமாக கொள்கிறான். இதையடுத்து வீரபத்திரனை பிடிக்க கேப்டன் பிரபாகரன் (விஜயகாந்த்) சத்தியமங்கலம் வருகிறார். அவர் வீரபத்திரனை பிடிக்கிறாரா? தன் நண்பர் சரத்குமாரை கொன்ற வீரபத்திரனை பழி வாங்கினாரா? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

விஜயகாந்த் நடித்த 100வது படமாக கேப்டன் பிரபாகரன் உருவாகி 1991ல் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் தொடக்க காட்சிகளில் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் வீரபத்திரன் அதாவது மன்சூர் அலிகான் வரும் காட்சிகள், அவன் கிராம மக்களை கொன்று செய்யும் அட்டூழியம், சரத்குமாரை கொல்லும் காட்சிகள் என விறுவிறுப்பாக  நகர்கின்றன. இந்த காட்சிகளுக்குப் பிறகுதான் விஜயகாந்த் என்ட்ரி நடக்கிறது.

தொடக்க காட்சியிலேயே விஜயகாந்த்,  பொன்னம்பலம் மற்றும் ஸ்டண்ட் நடிகர்களுடன் மோதும் அதிரடி காட்சி இடம் பெற்று அவரது என்ட்ரியே  ரசிகர்களின் ஆரவாரத்துடன் அமைந்திருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.

அடுத்தடுத்து காட்சிகள் ராக்கெட் வேகத்தில் பறக்கிறது. சத்தியமங்கலத்துக்கு ரயிலில் வரும் விஜயகாந்தை மன்சூர் அலிகான் அடியாட்கள் நூற்றுக்கணக்கான குதிரைகளில்  துரத்தி வந்து தாக்குவதும் அவர்களுடன் விஜயகாந்த் பாய்ந்து பறந்து மோதும் காட்சிகள் படு பயங்கரமாக படமாக்கப்பட்டுள்ளத அதேபோல் கிளைமாக்சில் கொட்டும் அருவி அருகே மன்சூர் அலிகான் கூட்டத்தை சுற்றி வளைத்து தாக்கும் காட்சிகள் அரங்கை அதிர விடுகிறது.

ஆக்சன் காட்சிகளில் மட்டுமல்லாமல் கோர்ட்டிலும் விஜயகாந்தின் வசன காட்சிகளில் ஆனால் பறக்கிறது. அந்தக் கால அரசியலையும் சரி,  இந்த கால அரசியலையும் சரி  தோலுரிக்கிறது. இப்படியொரு அதிரடியான வசனங்களை லியாகத் அலிகான்  எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் சரத்குமார்  பத்து நிமிடங்களே வந்தாலும் ஒரு ஆக்ஷன் காட்சி , ரம்யா கிருஷ்ணனுடன் காதல் காட்சி என்று முத்திரை பதித்திருக்கிறார்.

இப்படத்தில் குறிப்பிடத்தக்க அறிமுகம் என்றால் அது வீர பத்திரனாக நடித்த மன்சூர் அலிகான்தான். சந்தன கடத்தல் வீரப்பன் எப்படி இருப்பான் என்று வெளி உலகத்துக்கு தெரிவதற்கு முன்பே அவன் எப்படி எல்லாம் கொடூரமாக நடந்து கொள்வான் என்பதை கற்பனையில் உருவகம் செய்து மன்சூர் அலிகான் நடிததது இன்றளவும் பேசப்படுகிறது.

இப்படத்தை அ .செ இப்ராஹிம் ராவுத்தர் அதிக பொருட்செலவில் தயாரித்தார்.

திரைப்பட கல்லூரி மாணவரான ஆர் கே செல்வமணி இயக்கிய 2 வது படமாக கேப்டன் பிரபாகரன் உருவானது. அது ஆர் கே செல்வமணியின் முதல் படமான புலன் விசாரணை படத்தையும் மிஞ்சும் அளவுக்கு பெரும் வெற்றியாக அமைந்தது. இன்றைக்கும் இப்படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகளை எடுக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வி எஃப் எக்ஸ், கிராபிக்ஸ் என எந்த தொழில் நுட்பமும் பயன்படுத்தாமல் அன்றைக்கு எடுக்கப்பட்டது இப்போதும் திரைப்பட கல்லூரிகளில் பாடமாக இடம்பெற்றிருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசையில் இடம் பெற்ற ஆட்டமா தேரோட்டமா பாடல் திரையில் வரும் போது ரசிகர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.

ஒளிப்பதிவாளர்கள் ராஜராஜன், கே ரமேஷ் மூர்த்தி கேமராக்கள் பிரம்மாண்டங்களை வியக்கும் வகையில் படமாக்கியிருக்கிறது.

கேப்டன் பிரபாகரன் – இன்றைக்கு மட்டுமல்ல இன்னும் ஐந்து  வருடம் கழித்து ரீ ரிலீஸ் செய்தாலும் வசூல் சாதனை புரியும்.

Review By

K.jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

 

Related posts

விஷ்ணு விஷால்-ஜூவாலா விரைவில் திருமணம்.. நடிகர் திடீர் அறிவிப்பு..

Jai Chandran

கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த கமல்

Jai Chandran

டீ கடை கிடையாது: ஊரடங்கு இன்று முதல் தீவிரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend