Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

குருதி ஆட்டம் (பட விமர்சனம்)

படம்: குருதி ஆட்டம்

நடிப்பு: அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி, பேபி திவ்யதர்ஷினி, வட்சன் சக்ரவர்த்தி, கண்ணா ரவி, பிரகாஷ் ராகவன், வினோத் சாகர், சுஹாசினி

தயாரிப்பு: டி.முருகானந்தம்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

இயக்கம்:ஸ்ரீகணேஷ்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

மருத்துவமனையில் வேலை செய்யும் சக்தி (அதர்வா) தனது நண்பரின் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நல குறைவை போக்க அக்கறை காட்டுகிறார். அதர்வாவின் காதலி வெண்ணிலாவும் (பிரியா பவானி) குழந்தை மீது கவனம் செலுத்துகிறார். இதற்கிடையில் சக்தியை கொல்ல சில ரவுடிகள் துரத்துகின்றனர் அவர்களிடமிருந்து சக்தி தப்பிக்கிறார் அதே ரவுடிகள் காந்திமதியையும் ( ராதிகா) அவரது மகன் முத்துவையும் கொல்ல முயல்கிறது. காந்திமதியை பழி வாங்கும் எண்ணம் சக்திக்கும் உள்ளது. ஆனால் முத்துவுடன ஏற்பட்ட நட்பால் அவரது அம்மா மீதான கோபத்தை விட்டுவிடுகிறார் சக்தி. ஆனால் ரவுடிக் கூட்டம் முத்துவை கொல்கிறது. அந்த பழி சக்தி மீது விழுகிறது. சக்தியை கொல்ல காந்திமதி முடிவு செய்கிறார். இதிலிருந்து சக்தி எப்படி மீள்கிறார்? காந்திமதியை ரவுடிகள் கொன்றார் களா ?என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

அதர்வாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கவும், குழந்தை மீது பாசம் பொழிந்து நடிக்கவும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கிறார்.

குழந்தையை காப்பாற்றுவது கஷ்டம் என்று சொன்னதும் தனியாக வந்து அதர்வா அழுவதும்,
பிரியா பவானியும் குழந்தையை எண்ணி வருந்துவதும் உருக்கம்.

அதர்வா ஹீரோவாக இருந்தும் வில்லனுக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டிருகிறது. ஒவ்வொரு முறையும் அதர்வாவை பின்னியெடுக் கிறார்.

அருகேயிருந்து வில்லனின் கண்களை கவனிக்கும் அதர்வா, மொகரம் பண்டிகையில் கத்தியால் தாக்க வரும்போது அருகிலேயே அவரை கண்டும் வில்லன் முகத்தை அதர்வா அடையாளம் காண சிரமப்படுவதுபோல் காட்டுவது நம்பமுடியவில்லை.

ஆக்‌ஷன் காட்சி அதிகம் இருந்தாலும் யார் யாரை வெட்டுகிறார்கள் என்பதை கணிக்கமுடியவில்லை. படம் முழுக்க ரத்தம் ஆறாக ஓடுகிறது. ஏன் வெட்டுகிறாகள் என்பதை கேட்க போலீஸும் இல்லை.  கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக காமெடி காட்சிகளும் இல்லை.

காந்திமதியாக கம்பீரமாக முறைப்பு காட்டுகிறார் ராதிகா. தன்னை ரவுடிகள் கொல்ல சுற்றி வளைக்கும் போதும் கலங்காமல் எதிர்ப்பது பாத்திரத்தை நிலைநிறுத்துகிறது. ராதாரவி ரவுடித்தனமாக தோன்றினாலும் நக்கலாக வசனம் பேசி அரங்கை கலகலப்பாக்குகிறார்.

டி.முருகானந்தம் த்யாரித்திருக்கிறார். இயக்குனர் ஸ்ரீகனேஷ் ஆக்‌ஷன் சென்டிமென்ட் டுடன் படத்தை தர முயன்றிருக்கிறார்.

யுவன்சங்கர் ராஜா பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

ஆக்‌ஷன் படமென்பதால் பட.ம் முழுவதும் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் ஒரு வெப்ப உணர்வு மேலிடுகிறது.

குருதி ஆட்டம்- கடுமை.

Two And A Half Star Rating Illustration Vector

Related posts

Dhanush starrer ‘Naane Varuvean’ Teaser out now

Jai Chandran

Tamilisai Soundararajan appreciated Varahi Conclave

Jai Chandran

RadheShyam:ThiraiyoaduThoorigai song teaser tomorrow at 7 PM.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend