Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சட்டமும் நீதியும் (வெப் சீரிஸ் விமர்சனம்)

படம் (வெப் சீரிஸ்) : சட்டமும் நீதியும்

நடிப்பு: பருத்தி வீரன் சரவணன், நம்ரிதா, அரௌல் டி, சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜயஸ்ரீ,  இனியா ராம்

தயாரிப்பு: சசிகலா பிரபாகரன்,

இசை: விபின் பாஸ்கர்

ஒளிப்பதிவு: எஸ் கோகுல கிருஷ்ணன்

கதை திரைக்கதை வசனம்,: சூரிய பிரதாப். எஸ்.

இயக்கம்: பாலாஜி செல்வராஜ்

ரிலீஸ்: ZEE5 ஒரிஜினல் OTT தளம்

பி ஆர் ஓ: சதீஷ், சிவா (AIM).

சட்டம் படித்திருந்தாலும் கோர்ட்டுக்குள் சென்று வாதாடுவதில் தயக்கம் காட்டுகிறார் நோட்டரி வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி (சரவணன்). அவருக்கு வீட்டில் மரியாதை கிடைப்பதில்லை, சக வழக்கறிஞர்களும் கிண்டல் செய்கிறார்கள். அவரிடம் உதவி வழக்கறிஞராக சேர்கிறார் இளம் பெண் ஒருவர். இந்நிலையில் கோர்ட் வாசலில் வயதான ஒருவர் தன் மகளுக்கு நீதி கேட்டு தீக்குளித்து இறக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த சுந்தரமூர்த்தி கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்கிறார்.  ஆனால் தீக்குளித்து இறந்தவர் ஏற்கனவே மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று அரசு வழக்கறிஞர் வாதாடி வழக்கை தள்ளுபடி செய்ய கூறுகிறார். ஆனால் சுந்தரமூர்த்தி தரும் சில  பாயிண்ட்ஸ் நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணை தொடங்குகிறது. அதன் பிறகு எதிர்பாராத சம்பவங்கள் காட்சிகளாக அரங்கேறுகின்றன

பருத்திவீரன் சரவணன் நோட்டரி வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி என்ற பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். 50க்கும் வயது அதிகமாக இருக்கும் சரவணன்,  கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து வாதாட தொடங்கும்போதே தான் தொடர்த வழக்கில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதை அறிந்து அதிர்வது வெப் சீரிஸ் பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தரும்.

எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சரவணன் தொடர்ந்த ஒரு பொது நல வழக்கு ஆட்கொணர்வு அதாவது ஹேபியஸ் கார்பஸ் வழக்காக நீதிபதியால் மாற்றப்படும்போது காட்சிகளில் சூடு பிடித்து  நிமிரவைக்கிறது. அதன் பிறகு கதை வெவ்வேறு எதிர்பாராத திருப்பங்களுடன்  அதாவது நீதிமன்ற வாத காட்சிகளாகவும் அடையாளமே தெரியாத  ஒரு பெண்ணுக்காக சரவணன் கோர்ட்டில் வாதாடுவதுமாக காட்சிகள் இன்ட்ரெஸ்டிங்காக நகர்கிறது..

ஒரு  சமயம் அரசு வக்கீல் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்  சரவணன் மயங்கி விழுந்து அதிர வைக்கிறார்.  டோட்டலாகவே எதார்த்தமான நடிப்பில் மனதில் புகுந்து கொள்கிறார் சரவணன்.

முகத்தில் பயம்  தெரிந்தாலும் வாதாடும்போது கம்பீர குரலில் சரவணன் வசனங்களை எடுத்துவைப்பது வலு சேர்க்கிறது.

ஜூனியர் வக்கீல் அம்ரிதா  சரியான துப்பறியும் வேலைகள் செய்து சரவணனுக்கு துணையாக நிற்கும்போது பொருத்தமான ஜூனியர் என நம்ப வைக்கிறார்..

ZEE5 ஒ டி டி தளத்தில் வெளியாகியிருக்கும் சட்டமும் நீதியும்  வெப் சீரிஸ் எபிசோட்களை இயக்குனர் பாலாஜி செல்வராஜ் ஒரு த்ரில்லர் கதைபோல் இயக்கியிருப்பது அடுத்து என்ன நடக்கப்போகிறது. என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அதற்கேற்ப சரியான கதையை  விறுவிறுப்பு குறையாமல் எழுதி இருக்கிறார் சூரிய பிரதாப். எஸ்.

விபின் பாஸ்கர் இசையும், ஒளிப்பதிவாளர் எஸ். கோகுல கிருஷ்ணன்  கேமராவும் கவனத்தை சிதற  விடாமல் கதையோடு ஒன்றி பயணிப்பது சிறப்பு.

கோர்ட்டுக்கு சென்று வாதாட பயப்படும் வக்கீல்களுக்கு இந்த வெப் சீரிஸ் புது தைரியத்தை தரும்.

சட்டமும் நீதியும் –  தவற விடக் கூடாத வெப் சீரிஸ்.

.

 

.

 

Related posts

Valimai Grand Gala Show Organised by Malaysia Thala Ajith Fan Club

Jai Chandran

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது..

Jai Chandran

விஷாலுக்கு நடிகர் உதயா கடிதம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend