Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டூரிஸ்ட் பேமலி (பட விமர்சனம்)

படம்: டூரிஸ்ட் பேமிலி

நடிப்பு: சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோக லட்சுமி

தயாரிப்பு: பசிலியான் நாசரத், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்

இசை: சான் ரோல்டன்

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

இயக்கம்: அபிஷன் ஜீவிந்த்

பிஆர்ஓ: யுவராஜ்

இலங்கையில் விலைவாசி ஏறியதால் குடும்பம் நடத்த முடியாமல் சசிகுமார் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளை களுடன் தமிழ்நாட்டுக்கு தப்பி வருகிறார். அவரை போலீஸ் கடற்கரையில் வழிமறிக்கிறது. அவர்களின் வாழ்க்கை கஷ்டத்தை கேட்ட போலீஸ் தப்ப விடுகிறார். சசிகுமார் குடும்பத்திற்கு வீடு பார்த்து தருகிறார் யோகி பாபு. ஆனால் தங்களை ஈழத் தமிழர்கள் என்று சொல்லக்கூடாது என கண்டிஷன் போடுகிறார். அதை மீறி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்கி றார்கள். இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் சசிகுமார் குடும்பத்தை போலீஸ் சுற்றி வளைக்கிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதை கிளைமாக்ஸ்.

ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய படங்கள் ஏற்கனவே நிறைய வந்திருக்கின்றன. அதிலிருந்து இது வித்தியாசமான கதை அமைப்பு என்னவென் றால் போருக்கு பின்னால் நடந்த பொருளாதார சீரழிவால் அங்கு விலைவாசி ஏறியதால் தவிக்கும் தமிழர் குடும்பம் ஒன்று தமிழகத்திற்கு வருவது தான் புதிது.

சசிகுமார், சிம்ரன் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை சுற்றித்தான் கதை நடக்கிறது.

ஈழத் தமிழருக்கு தரும் முக்கியத்துவத்தை விட சசிகுமாருக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அவரை எவ்வளவு தூக்கி வைத்து பேச முடியுமோ அவ்வளவு தூக்கி வைத்து பேசுவதற்காக வும், அவரை உயர்த்தி காட்டுவதற்காகவே பல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் குடிகார இளைஞன், சசிகுமாரை தெய்வம் என்று கூட கூறுகிறார். ஆனால் உண்மையில் தெய்வம் யார் என்று பார்த்தால் அந்த ஊர் மக்களும், சசிகுமார் குடும்பத்தை போலீசில் மாட்டி விடாத ரமேஷ் திலக்கும்தான் தெய்வம் போல் தெரிகிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பக்ஸ், சசிகுமார் பேசும் ஈழ தமிழை கேட்டு கூட அவரை கேரள மலையாளி என்று நம்புவது காதில் பூ சுற்றும் கதையாகத்தான் இருக்கிறது. இப்படி கூடவா ஒரு இன்ஸ்பெக்டர் இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது

செண்டிமெண்ட் சீன்களை பொருத்தவரை இயக்குனர் அபிஷன் ஜீவந்த் நன்றாகவே அமைத்திருக்கிறார். குறிப்பாக குமாரவேல் தம்பதி காட்சி, குடிகார இளைஞனின் மறதி தாயின் காட்சி நெஞ்சை வருடுகிறது.

புடவை கட்டிக்கொண்டு ஆள் தோட்ட பூபதி
மெடடுக்கு சிம்ரன் போடும் குத்தாட்டம் அரங்கை ஆர்ப்பரிக்க வைக்கிறது.

சசிகுமாரின் மகன்களாக வரும் இரண்டு பிள்ளைகளும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் அதிலும் அந்த குட்டிப் பையன் வெடுக்குத்தனமாக பேசி அரங்கை கலகலக்க வைக்கிறான்.

பசிலியான் நாசரத், மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரிக்கின்றனர்.

சான் ரோல்டன் இசை,
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு பொருத்தம்.

டூரிஸ்ட் பேமிலி – ஜாலி சென்டிமென்ட் பேமிலி.

Related posts

Ponniyin Selvan 2 Audio and Trailer Launch Event

Jai Chandran

பித்தலை மாத்தி பட விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

Jai Chandran

of the Most Awaited Film #Memories Teaser Has Crossed 500K Views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend