Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

10 ஹவர்ஸ் ( பட விமர்சனம்)

படம்: 10 ஹவர்ஸ்

நடிப்பு: சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் ஐயப்பா, முருகதாஸ், திலீபன், தங்கதுரை, சரவண சுப்பையா, சருமிஷா, நிரஞ்சனா

இசை: கே எஸ் சுந்தரமூர்த்தி

ஒளிப்பதிவு: ஜெய் கார்த்திக்

இயக்கம்: இளையராஜா கலியபெருமாள்

பிஆர்ஓ: நிகில் முருகன்

மகளை காணவில்லை என்று போலீசில் புகார்
தருகிறார் ஒரு தாய். அதைக் கேட்கும் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ (சிபிராஜ்). காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க துரித நடவடிக்கையில் இறங்குகிறார் காஸ்ட்ரோ. வாக்கி டாக்கி மூலம் சக போலீஸ் டீமை அலர்ட் செய்து ஆங்காங்கே வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்கிறார். ஒவ்வொரு நூலாக பிடித்து பெண் எப்படி காணாமல் போயிருப்பார் என்று படிப்படியாக நகர்வுகளை புத்திசாலித்தனமாக நகர்த்தி செல்கிறார். அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடிந்ததா, அதற்குப் பின்னால் என்ன மர்மம் அடங்கி இருக்கிறது என்பதை காஸ்ட்ரோ கண்டுபிடிக்கும் போது அதிர்ச்சியான தகவல் வெளிப்படுகிறது. அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

சிபி சத்யராஜ் ஏற்கனவே போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும் காஸ்ட்ரோ என்ற கதாபாத்திரத்தில் அவர் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி நடித்திருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது.

சிபிஐ டைரி குறிப்பு மம்மூட்டியை ஞாபகப்படுத்தும் வகையிலான ஒரு கதாபாத்திரம் அதை ரொம்பவே சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார்..சிபி சத்யராஜ். தாடி வைத்துக் கொண்டு, ஐயப்பன் மலைக்கு மாலை போட்டு கருப்பு உடை அணிந்து 10 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்கும் காட்சிகள் சீனுக்கு சீனு விறுவிறுப்பை அதிகரித்து செல்கிறது.

தாடியுடன் சிபி சத்யராஜ் கெட்டப் அருமை . தொடர்ச்சியாக இதை பின்பற்றுவது ஏற்கும் கதாபாத்திரத்தின் மெச்சூரிட்டியை மெருகேற்றும். கஜராஜ் உள்ளிட்ட சக துணை கதாபாத்திரங்கள் அளவுடன் கையாளப்பட்டிருக்கிறது

ஆங்காங்கே சண்டைக் காட்சிகள் இருந்தாலும் அதெல்லாம் வேகமாக முடிந்து விடுவதுபோல் இருக்கிறது. சிபி ஸ்டண்ட் காட்சிகளில் மாஸ்டர் எப்படி சொன்னாரோ அப்படி ஸ்டன்ட் செய்திருக்கிறார். ஆனால் கடினமான சண்டை காட்சி என்று கூறுவதற்கில்லை.

க்ரைம் ஸ்டோரி என்பதால் படத்தில் காதலுக்கும் இடமில்லை, காதல் பாடலுக்கும் இடமில்லை ஆனால் பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சமில்லை.

கே எஸ் சுந்தரமூர்த்தி இசை ஓவர் லோட் இல்லாமல் காட்சியோடு இணைந்து செல்வது கூடுதல் பிளஸ்.

ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு ஹைவேயில் இரவிலும் கழுகு பார்வை காட்சிகளை அழகாக படமாக்கி இருக்கிறது.

இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் படத்தின் திரைக் கதையை ஒன்றுக்கு பலமுறை பட்டை தீட்டியிருக்கிறார் என்பது காட்சிகளின் நேர்த்தியில் புலப்படுகிறது. எதிர்பார்க்காத டிவிஸ்ட்டுகள்  கதையின் நம்பகத்தன்மை அதிகப்படுத்துகிறது

10 ஹவர்ஸ் – பெர்ஃபக்ட் கிரைம் த்ரில்லர்.

Related posts

கோவை தெற்கில் கமல்ஹாசன்  போட்டி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்

Jai Chandran

ZEE5ல் சந்தானத்தின், “டி டி நெக்ஸ்ட் லெவல்” வெளியாகிறது

Jai Chandran

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி இறுதி கட்ட படப்பிடிப்பில்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend