Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ZEE5ல் சந்தானத்தின், “டி டி நெக்ஸ்ட் லெவல்” வெளியாகிறது

ZEE5 , அதிரடி வெற்றித் திரைப்படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, அடுத்ததாக அதிரடி வெற்றித் திரைப்படமான “டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல், எனும் டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதிரடி-திகில்-நகைச்சுவை, ஜம்ப்-ஸ்கேர்ஸ், நையாண்டி மற்றும் ஸ்லாப்ஸ்டிக் ஆகிய ஜானர்களின் சுவாரஸ்யமான கலவையாக, அனைத்து வகை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில், உருவாகியுள்ளது. இறந்துபோன திரைப்பட இயக்குநரின் பழிவாங்கும் எண்ணத்தால், ஒரு திரைப்படத்திற்குள் சிக்கிக்கொள்ளும் விமர்சகன், அங்கு இருக்கும் டைரியின் சக்தியை மீறி, அந்த மாயாஜால சக்தியை மீறி, ஜெயிக்கிறானா ? படத்திலிருந்து வெளியில் வந்தானா? என்பது தான் இப்படத்தின் மையம்.

இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.

ZEE5 இன் மூத்த துணைத் தலைவர் தென்னிந்திய மார்க்கெட்டிங் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறியதாவது…,
“ZEE5 இல், புதுமையான கதைக்களத்தில், ரசிகர்களை ஈர்த்த வெற்றித் திரைப்படங்களைக் கொண்டுவருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். தென்னிந்திய கதைகளுக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. “டிடி நெக்ஸ்ட் லெவல்” முற்றிலும் வித்தியாசமான களத்தில், ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும். இப்படத்தினை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் கூறியதாவது…,
“டிடி நெக்ஸ்ட் லெவல் மூலம், பாரம்பரிய திகில் அனுபவத்திலிருந்து மாறுபட்டு, நகைச்சுவையின் எல்லைகளைத் தாண்டி, முற்றிலும் புதுமையான ஒரு உலகத்தை உருவாக்க விரும்பினேன். தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதும், சந்தானம், செல்வராகவன், கௌதம் மேனன் மற்றும் கீதிகா திவாரி உள்ளிட்ட அற்புதமான நடிகர்களின் பங்களிப்பிலும், அந்த கற்பனை உலகத்தை உயிர்ப்பிக்க முடிந்தது. வழக்கமான கதை சொல்லலிருந்து மாறுபட்டு, ஒவ்வொரு திருப்பத்திலும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு படத்தை வடிவமைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு ZEE5 ஐ விடச் சிறந்த தளம் இருக்க முடியாது. ZEE5 மூலம் இப்படம், உலகம் முழிக்கவிருக்கும் அனைத்து ரசிகர்களையும் சென்றடையவுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

நடிகர் சந்தானம் கூறியதாவது..,
“டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தில் நடித்த கிஸ்ஸா கதாப்பாத்திரம், சமீப காலங்களில் நான் ஏற்று நடித்ததிலேயே மிகவும் திருப்திகரமான கதாபாத்திரமாக்கும். கிஸ்ஸா தைரியமானவன், விசித்திரமான குணங்கள் நிறைந்தவன். கிஸ்ஸா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மிகுந்த சவால் வாய்ந்ததாகவும், சந்தோசமான அனுபவமாகவும் இருந்தது. இப்போது இப்படம் ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைச் சென்றடைவது மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை பார்த்த திரைப்படங்களைத் தாண்டி, இந்தப்படம் உங்களை அடுத்த லெவலுக்கு கூட்டிச் செல்லும்.

ZEE5 ல் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்!!

Related posts

Pushpa The Rise Grand release in Tamil Nadu by Lyca Productions

Jai Chandran

கோப்ரா ஷூட்டிங்கை முடித்த ஸ்ரீநிதி ஷெட்டி..

Jai Chandran

Fundraising Campaign for Manipur Relief – Divya Sathyaraj

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend