Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எக்ஸ்ட்ரீம் (பட விமர்சனம்)

படம்: எக்ஸ்ட்ரீம்

நடிப்பு: ரட்சிதா மகாலட்சுமி,  அபி நட்சத்திர, ராஜ்குமார் நாகராஜ்,  ராஜசேகர், ஜெயராஜ் ஜெயா, குட்டி கமலாத்மிகா,  மாஸ்டர் கோகுல், தனசேகர்,  ஓட்டேரி சிவா சந்திரம,

தயாரிப்பு: கமலகுமார், ராஜ்குமார் என்,

இசை ஆர் எஸ் ராஜ் பிரதாப்

ஒளிப்பதிவு: டி ஜே பாலா

இயக்கம்,: ராஜவேல் கிருஷ்ணா

பி ஆர் ஓ:புவன் செல்வராஜ்

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடத்தில். பில்லர் ஒன்றில் இளம்  பெண் பிணம் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் தகவல் தெரிவிக்கின்றனர். போலீசார் நேரில் வந்து பில்லரை தோண்டி எடுத்து பிணத்தை மீட்டு விசாரணை தொடங்குகின்றனர். கொல்லப்பட்ட பெண் யார் எதற்காக கொன்றார்கள் என்ற அதிர்ச்சிகரமான சஸ்பென்சுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

பெண்களுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பாடுதளர்த்தப்பட்டிருப்பதால் ஆடை விஷயத்திலும் அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை எந்த ஆடை உடுத்தினலும் அது பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்ற நிலை தான் சமுதாயத்தில் தற்போது நிலவுகிறது. அந்த கருத்தை மையமாக வைத்துதான் எக்ஸ்ட்ரீம் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

பணக்கார வீடுகளில் தனது தாய் வேலைக்கு  செல்லாத போது அவர்கள் வீட்டில் வேலை செய்ய செல்கிறார்  அபி  நட்சத்திரா.. ஏழை பெண்ணான அபி  பழைய ஆடைகளை உடுத்தி இருக்க அவருக்கு மார்டன்  பெண். தரும் உடைகளை  வாங்கி உடுத்திக் கொண்டு ஜொலிக்கும் போது பளிச்சிடுகிறார்..

போலீஸ் அதிகாரியாக வரும் ரட்சிதா நடிப்பில் வேகம் காட்டியிருக்கிறார். ஆனால் அவரது தோற்றத்திற்கு ஏற்ற ஆக்சன் காட்சிகள் குறைவுதான். உடல் தோற்றத்தை சற்று. இளைத்தால் இவர் ஹீரோயினாக திரையில் மின்ன வாய்ப்பு இருக்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ராஜ்குமார் விரைப்பு காட்டி முறைப்பு காட்டி ரவுடிகளை அந்தர் செய்வது. சிறப்பு. தன் குழந்தை இறந்ததை நினைத்து கதறும்போது பாசமுள்ள தந்தையாக உருக வைக்கிறார்.

படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்திருந்தாலும்  எல்லோருமே தங்களது கதாபாத்திரத்தை நறுக்கென செய்திருக்கிறார்கள்.

ஆர் எஸ் ராஜ்பிரதாப் . இசை காட்சிகளுக்கு கை கொடுக்கிறது.

டி ஜே பாலா  ஒளிப்பதிவு சோடையில்லை.

ராஜவேல் கிருஷ்ணா  படத்தை சஸ்பென்ஸ் உடையவிடாமல் கடைசிவரை இயக்கியிருக்கிறார். அதேசமயம் ரிப்பீட்  காட்சிகள் வருவதால் வேகம் குறைகிறது . இன்னும் ஷார்ப்பாக காட்சிகளை எடிட் செய்தால்  தொய்வை  குறைக்கலாம்.

பெண்கள் ஆடை குறைப்பு பற்றி கருத்து கூறினால் அதை தவறு என்கிறது ஒரு கூட்டம்.  உடல் கவர்ச்சியை ஆடை குறைத்து வெளிச்சம் போட்டு காட்டினால் இனக்கவர்சி தூண்டப்பட்டு தவறுகள் நடக்கத்தான் செய்யும் என்பதை துணிச்சலாக இயக்குனர் கூறியிருப்பது பல்வேறு விவாதங்களை  ஏற்படுத்தும்.

எக்ஸ்ட்ரீம் –  பெண்களின் மித மிஞ்சிய கவர்ச்சிக்கு எதிர்வினை.

 

 

 

 

 

 

Related posts

Amitabh turns narrator for Pan-India Film ‘Radhe Shyam’!*

Jai Chandran

Parking” Receives U/A Certification

Jai Chandran

கிரிக்கெட் வீரர் தோனி தமிழ் படம் தயாரிக்கிறார்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend