Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு தம்பதி திடீர் விவாகரத்து

இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இயக்குனர் கே. பாலசந்தர் தயாரிக்க. மணிரத்தினம் இயக்கிய “ரோஜா” படம் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து பின்னர் பாலிவுட் சென்று ஹாலிவுட் படத்துக்கும் இசையமைத்து. இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் தட்டி வந்தார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏ. ஆர். ரகுமானுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 29 வருடமாக இணை பிரியாமல் வாழ்ந்த ஏ ஆர் ரகுமான், சாய்ரா பானு தம்பதிகளுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் தங்களது மணவாழ்வை முறித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக
ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நடத்திய பிறகு சமீப காலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி இருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் முடியவில்லை. மிகக் கடுமையான மனவலியில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இவ்வாறு சாய்ரா பானு கூறி இருக்கிறார் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஏ ஆர் ரகுமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டார். அதில் அவர் கூறும்போது,”நாங்கள் 30 வருடங்களை எட்டுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால், எல்லா எண்ணமும் எதிர்பார்க் காத ஒரு முடிவை கொடுத்திருக்கிறது. எங்கள் இதயங்களை கண்டால் கடவுளின் சிம்மாசனமும் நடுக்கம் பெறும். நாங்கள் அர்த்தத்தை தேடுகி றோம். இருப்பினும் இந்த பிரிவில் எங்கள் பலவீனமான அத்தியா யத்தை கடந்து செல்லும் போது எங்களுக்கான தனியுரிமையை கொடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஏ ஆர் ரகுமான், சாய்ரா பானு தம்பதியின் இந்த திடீர் மணமுறிவு ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related posts

பிஃபோர் யூ டெய் (இந்தி பட விமர்சனம்)

Jai Chandran

VetriMaaran donated 10 Lakhs To CM Corona Fund

Jai Chandran

நீட் தேர்வால் 3 மாணவர்கள் தற்கொலை: சூர்யா அறிக்கை மீது நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend