Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிஃபோர் யூ டெய் (இந்தி பட விமர்சனம்)

காதல், ஆக்‌ஷன், சென்டி மென்ட், ஹாரர் , திரில்லர் என பலவித படங்கள் வருகின்றன. ஒரு சில படங்கள் அதில் மறக்க முடியாத படங்களாக நிலைத்து விடுகின்றன் அந்த வரிசையில் இடம் பிடிக்கும் படம் *பிஃபோர் யூ டை”.

தலைப்பே ஒருவித பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இளம் பெண் ஒருவர் தந்தையுடன் டீ இலை விளையும் மலைப்பிரதேசத் துக்கு வருகிறார். அங்குள்ள டீ தொற்சாலையில் முக்கிய பணியில் சேர்கிறார். அதே தொழிற்சாலையில் ஆசிரியர் போல் விவரங்கள் எடுத்து ரைத்து பயிற்சி அளிக்கும் இளம் வாலிபனுடன் நட்பு ஏற்படுகிறது. இருவரும் அன்பாக பழகுகின்றனர்.

திடீரென்று ஒருநாள் இளம் பெண் உடல்நிலை பாதிக் கப்படுகிறது. மருத்துவமனை பரிசோதனையில் அவளுக்கு கேன்சர் இருப்பதாக தெரி கிறது. ஆறு மாதத்தில் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் கெடு விதிக்க மனம் உடைந்து சோர்வடைகிறாள். மான்போல் துள்ளித்திந்தவள் வேதனையீல் வீழ்கிறாள் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வாலிபன் எண்ணு கிறான். அது எப்படி முடியும் என்று தவிக்குறான்

லைப்பரரி செல்லும் இளைஞனுக்கு பிஃபோர் யூ டை என்ற புத்தகம் கிடைக்கிறது
இடப்பதற்கு முன் 131இடங் களை கண்டு அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டு அந்த புத்தகத்தில் அழகிய இடங்கள், இயற்கை பிரதேசங்கள், துர்கா பூஜை திருவிழா போன்ற அம்சங்கள்
குறிப்பிடபட்டுள்ளது. அதெல் லாவற்றையும் தோழிக்கு அழைத்துச் சென்று காட்டி அவளை இளைஞன் எப்படி சந்தோஷப்படுத்துகிறான். அவளால் எல்லா ஆசை களையும் நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததா என்பதை சென்டிமென்ட்டுடன் விளக்கு கிறது படம்.

அற்புதமான இப்படியொரு கதையை யோசித்தற்கே இயக்குனர் சுவேந்து
ராஜ் கோஷுக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.

எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்துவிடலாம் அதை காட்சியாக கொண்டு வருவது அசாத்தியம் ஆனால் அந்த கற்பனைகள் அனைத்தை யும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி சாத்திப்படுத்தி இருப்பது என்றென்றும் நீங்காமல் மனதில் பதிந்திருக்கும்.

படத்தின் முதல் காட்சி தொடங்கிய நிலையிலேயே பசுமை போர்வை போர்த்திய மலை முகடு சாலையில்
செல்லும் அந்த முதல் கார் பயணமே இயற்கையை அரங்கு முழுவதும் போர்த்தி வாயடைகச் செய்து விடுகிறது.

ஒரு சென்டிமென்ட் கதையுடன் பெங்கால் பகுதி முழுக்க உள்ள அழகியலை கொத்துகொத்தாக கேமரா கொள்ளையடித்திருக் கிறது. பெங்கால் நடிகர்களே நடித்திருக்கின்றனர்.
எல்லோரும் தங்களது இயல் பான நடிப்பில் கவர்கின்றனர்.

ஐ லீட் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Related posts

Team Phoenix Hosts Thanksgiving Meet

Jai Chandran

SaktivelVasu Starring Kuttravaali Movie Poster

Jai Chandran

ரியோ, ரம்யாவின் பிளான் பண்ணி பண்ணனும் வரும் 24ல் ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend