Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கருடன் (பட விமர்சனம்)

படம்: கருடன்

நடிப்பு: சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயகுமார் ,  வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயக்குமார்

தயாரிப்பு: கே குமார்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ஆர்த்தர் ஏ வில்சன்

இயக்கம்: ஆர் எஸ் துரை செந்தில்குமார்

பிஆர்ஓ: யுவராஜ்

 

கோம்பை அம்மன் கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை வளைத்து போட அமைச்சர் திட்டமிடுகிறார். அதற்காக கோம்பை அம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் மன்னர் காலத்து பட்டயத்தை திருடி அழிக்க ஆட்களை ஏவுகிறார். கோம்பை அம்மன் கோவில் நிர்வாகியாக வடிவுக்கரசி இருக்கிறார். அவருக்குப் பிறகு அந்த பதவிக்கு சூரியை திட்டமிட்டு நியமிக்கிறார் சசிகுமார். சூரி சசிக்குமாரின் நண்பனாக இருந்தாலும் தனக்கு சிறுவயதில் உணவிட்டு ஆதரவளித்த உன்னி முகுந்தனுக்கு விசுவாசமாக இருக்கிறார். இந்நிலையில் அமைச்சரின் உறவினர் மைம் கோபி அடியாடகளுடன்  வந்து கோவில் பட்டயத்தை கைப்பற்ற முயல்கிறார.  அதற்கு உன்னி முகுந்தன் உடந்தையாக இருக்க எண்ணும் போது சசிகுமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதில் ஏற்படும் கலவரத்தில் யார் யார் என்ன கதிக்கு ஆளாகிறார்கள் பட்டயம் கடைசியில் யார் கைக்கு போய் சேர்ந்தது என்பதற்கு கிளைமாக்ஸ் உறவு நட்புகளுடன் ரத்த வெறியாட்டம் ஆடி பதில் அளிக்கிறது.

சசிகுமார் படத்தில் பிரதான வேடத்தில் இருந்தாலும் இப்படத்தில் கதாநாயகன் சூரி தான். ஹீரோ அந்தஸ்துக்கு அவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சூரி கதாபாத்திரத்திற்கு தரப்பட் டிருக்கும் முக்கியத்துவத்தை அறிந்தும் சசிகுமார்  இப்படியொரு வேடம்  எப்படி ஏற்ரார்.

குத்துப்பட்டு வெட்டுப்பட்டு கை துண்டாக்கப்பட்டு அனாதை. பிணம் போல்  தூக்கி. வீசப்படும் சசிகுமார் கதாபாத்திரம் கொடூரம்.

மலையாளத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் உன்னி முகுந்தன் இப்படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்தி ருக்கிறார். இவருக்கும் சூரிக்கும் உள்ள உறவு தளபதி படத்தில் மம்முட்டிக்கும் ரஜினிக்கும் இருக்கும் உறவு போல் அமைக்கப்பட்டிருக்கிறது.

நகைச்சுவை நடிகர் என்ற தனது முத்திரையை விடுதலை பட மூலம் மாற்றி அமைத்த சூரி இப்படத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாகவே மாறி இருக்கிறார்.  சண்டைக் காட்சிகளில் எதிர்பார்க்காத அளவிற்கு துணிச்சலாக மோதி அசர வைக்கிறார். போகிற போக்கில் இவரும் சந்தானம் போல் இனிமேல் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்து அடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சூரி திடீரென்று சாமி வந்தது போல் ஆடி ஆக்ரோஷமாக சத்தமிடும் போது காந்தார  படத்தின் காட்சிகள் ஞாபகத்துக்கு வருகிறது.

அப்பத்தாவாக வடிவுக்கரசி நடித்திருக்கிறார்  அந்த வேடம் அவருக்கு புதிதல்ல..  தூசி போல் ஊதிவிட்டு செல்கிறார். சோகமாக இருக்கிறேன் என்ற சாக்கில் அவர் மொந்தை மொந்தையாக கள் குடிப்பது லேசான காமெடி நெடி வீசுகிறது.

அமைச்சராக நடித்திருக்கும் ஆர்வி உதயகுமார் ஒயிட் காலர் வில்லனாக மாறியிருக்கிறார். மைம் கோபி வில்லனாக முறைப்பு காட்டுகிறார்.

கே குமார் படத்தை தயாரித்தி ருக்கிறார்.

இயக்குனர் ஆர் எஸ் செந்தில்குமார் கதை பழசாக இருந்தாலும் நட்பு காதல்  ஆக்சன் சென்டிமென்ட் கலந்து கடைசி வரை தொய்வு இல்லாமல் இயக்கி இருக்கிறார்.

ளைமாக்ஸ்சில் சூரி பேசும், “நான் நாயாகத்தானே இருந்தேன் என்னை மனுஷனாக்கி விட்டீர்களே” என்ற  வசனம் அவரது கதாபாத்திரத்தை ஒரு வரியில் சொல்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசை கோவில் திருவிழாக்குள்ளும், கிராமத்து சாலைகளுக்குள்ளும் பயணிக்க வைக்கிறது.

ஆர்த்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு பளிச்சென்று இருந்தாலும் காட்சிகளுக்கென்று வேறு வேறு கலர்டோன் கொடுத்திருந்தால் இன்னும் பிளஸ் ஆக இருந்தி ருக்கும்.

நீண்ட நேரம் படத்தை பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படு கிறது. இன்னும் கூட சில காட்சி களுக்கு கத்தரி போட்டால் கதைக்கு வேகம் கூடும். ரத்த களரியை  குறைகலாம்.

கருடன் –  மொந்தை. பழசு  கள் புதுசு.

 

 

 

 

 

 

Related posts

ரஜினியின் “கபாலி” கிளைமாக்ஸ் பற்றி பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு

Jai Chandran

நாகசைதன்யா- வெங்கட்பிரபு பட படப்பிடிப்பு நாளை தொடக்கம்

Jai Chandran

பலான படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம்.. நுங்கம்பாக்கம் இயக்குனர் வேதனை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend