Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தலைமை செயலகம் (வெப் சீரிஸ் விமர்சனம்)

படம்: தலைமை செயலகம் ( வெப் சீரிஸ்)

நடிப்பு: கிஷோர், ரம்யா நம்பீசன்,  ஸ்ரேயா ரெட்டி,  சந்தான பாரதி,  ஆதித்யா மேனன்,  கனி கிஸ்ரிதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா,  சசாரா பிளாக், சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரா, கவிதா பாரதி மற்றும் பலர்

தயாரிப்பு:  ராடன் மீடியா ஒர்க்ஸ் ராதிகா சரத்குமார், ஜி 5

இசை: ஜிப்ரான்

இயக்கம்: வசந்த பாலன்

பிஆர்ஓ:  சதீஷ் (AIM)

வடநாட்டில் நில அதிபர்கள் ஆட்டம் சுதந்திரத்திற்கு முன்பும் அதன் பின்பும் பல காலகட்டங்களில் கொடிக்கட்டி பறந்தது. தங்கள் நிலத்தில் பணிபுரியும் விவசாயிகள் ,வேலையாட்கள் யாரையும் மனிதர்களாகவே மதிக்காமல் விலங்குகள் போல் கொடுமைப்படுத்துகின்றனர். இந்த நிலையில் ஒரு பெண்ணை ஜமீன் வீட்டில் திருடி விட்டதாக அங்குள்ள கூட்டம் அடித்து துன்புறுத்தி உயிர் போகும் நிலைக்கு உள்ளாக்குகிறது. அவள் வெகுண்டெழுந்து பண்ணை ஆட்களை வெட்டி சாய்கிறாள். அங்கிருந்து கதை தமிழ்நாட்டுக்கு பயணிக்கிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் கிஷோர் மீது ஊழல் வழக்கு ஒன்று 15 வருடமாக நடக்கிறது. அதில் அவருக்கு தண்டனை கிடைத்தால் அவர் சிறைக்கு சென்று பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.. ஒருவேளை கிஷோருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் வகிக்கும் முதல்வர் பதவியை யார் அடைவது என்ற போட்டி அவரது வீட்டுக்குள்ளேயே மகளுக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கிறது. இதற்கிடையில் கிஷோரிடம் பேட்டி காண வரும் ஸ்ரேயா ரெட்டி அவருக்கு அரசியல் ஆலோசகராக மாறியதால் ரகசியமாக அவரும் முதல்வர் பதவிக்கு சூழ்ச்சி செய்து அடைய முயற்சிக்கிறார். பல்வேறு முனைகளில் இருந்து தன் மீது தொடுக்கப்படும் தாக்குதலை  கிஷோர் எப்படி எதிர்கொள்கிறார் அவரால் அதிலிருந்து மீள முடிந்ததா என்பதற்கு தலைமை செயலகம் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

அங்காடித்தெரு வெயில், போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலன் முதன்முறையாக தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் இயக்கியிருக்கிறார். மக்களின் எதார்த்த வாழ்வியலை படமாக்கிக் கொண்டிருந்த வசந்தபாலன் திடீரென்று ஒரு அரசியல் கதையை  இயக்கினால்  எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக தலைமைச் செயலகம் உருவாகி இருக்கிறது.

தமிழ்நாட்டு அரசியல் என்று கதையில் சொல்லப்பட்டாலும் அதில் ஆந்திர அரசியல், டெல்லி அரசியல், மேற்கு வங்க அரசியல் என பல்வேறு மாநிலங்களின் அரசியல் காய் நகர்த்தல்களை கொண்டு  கதை உருவாகி இருக்கிறது.

பெரும்பாலும் இது ஆந்திர முதலமைச்சர்களின் அரசியலை தழுவி உருவாக்கப்பட்ட கதையாகவே தோன்றுகிறது. மறைந்த ஆந்திர முதல்வர் என் டி ராமராவ், மறைந்த ராஜசேகர் ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை சம்பவங்கள் தலைமைச் செயலகம் கதையில் கற்பனையாக புனையப்பட்டுள்ளது .

வெப் தொடரில் கிஷோர் மாநில முதல்வராக நடித்திருக்கிறார். அவரது தோற்றம், பேச்சில் காட்டும் நிதானமும். தனக்கு எதிராக நடக்கும் சதியை அறியும் கில்லாடியாகாவும் அதி அற்புத மான  நடிப்பை வழங்கி இருக்கி றார்.

கிஷோரின் மகளாக  ரம்யா நம்பீசன், அதேபோல் கிஷோரின் அரசியல் ஆலோசகராக ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயா ரெட்டியை பொறுத்தவரை என்டி.ராமராவுடன் இணைந்தி ருந்த சிவபார்வதி கதாபாத்திரம் போல் சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த வேடத்தை ஸ்ரேயா ரெட்டி ஏற்று கனமான நடிப்பை வழங்கி காட்சிக்கு காட்சி சைலன்ட் கியர் போட்டு ஆட்சியில் என்ன குளறுபடியை ஏற்படுத்து வாரோ என்ற எதிர்பார்ப்பை  சீனுக்கு சீன் அதிகரிக்கிறார.

கிஷோரின் மகளாக வரும் ரம்யா நம்பீசன் எப்படியாவது தந்தையின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் பாசாங்கு வேலைகளில் சகுனித்தனம் தெறிக்கிறது.

தான் ஜெயிலுக்கு சென்றால் தன் பதவியை யார் வகிக்க  வேண்டும் என்பதை ஒரு கடிதத்தில் எழுதி அதை கட்சி பொதுச் செயலாள ரான சந்தான பாரதியிடம் கிஷோர் கொடுத்துவிட்டு யார் பெயரை எழுதினேன் என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸாக விடுவது அப்படி யார் பெயரைத் தான் அந்த கடிதத்தில் அவர் எழுதியிருக்கிறார் என்ற ஆர்வத்தை தூண்டி வடுகிறது

படத்தில் சிபிஐ அதிகாரியாக ஆதித்யா மேனன் நடித்திருக்கிறார் பல படங்களில் அவரை வில்லன் வேடத்தில் பார்த்து அலுத்துப் போயிருந்த நேரத்தில் ஒரு பெரிய மாற்றமாக சிபிஐ அதிகாரி வேடம் கிடைத்திருக்கிறது. அதை  நன்றாக பயன்படுத்தி படம் முழுக்க தனது நடிப்பாற்றலை வெளிப் படுத்தி கவனத்தை ஈர்க்க தவறவில்லை.

கட்சி பொதுச் செயலாளராக வரும் சந்தான பாரதி இயல்பான பாத்திர மாக நடமாடி காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்த வெப் சீரிசில்  நடித்திருக்கும் மற்ற எல்லா கதாபாத்திரங்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்து கதைக்கு உரம் சேர்த்திருக் கின்றனர்.

தலைமைச் செயலகம் வெப்சீரிஸ் மொத்தம் எட்டு எபிசோடுகளாக உருவாகி இருக்கிறது. நிகழ்கால அரசியலை பேசுவதால் காட்சிகள் போவதே தெரியாமல் முழு எபிசோடுகளையும் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது. ஆனாலும் சில காட்சிகளுக்கு கத்தரி போட்டிருந்தால் எட்டு எபிசோடாக உருவாகியிருக்கும் தலைமைச் செயலகம் ஏழு எபிசோடில். முடித்திருக்கலாம்.

தலைமை செயலகம் வெப் சீரிஸ் திராவிட அரசியலை தான் பேசுகிறது.  ஜனநாயகத்தில ஊழல் இருந்தாலும் மக்களின் முன்னேற்றத்தில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது  என்பதை நேரடியாகவே சுட்டிக் காட்டி இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.

ஜிப்ரானின் பின்னணி இசை பக்கபலம்

ராடன் மீடியா ஒர்க்ஸ் ராதிகா சரத்குமார், ஜி 5  இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

ஜி 5 ஒ டி டி.தளத்தில் தலைமைச் செயலகம் வெளியாகி இருக்கிறது.

தலைமைச் செயலகம்  திராவிட  அரசியல் பேசுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Pushpa Trailer mAAnia all over 15M+ views

Jai Chandran

பிரைம் வீடியோவின் “தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்” புது எபிசோட்கள்

Jai Chandran

பணிப்பெண் இல்லத் திருமணத்தில் சீயான் விக்ரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend