Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வடக்குபட்டி ராமசாமி (பட விமர்சனம்)

படம்: வடக்குபட்டி ராமசாமி

நடிப்பு: சந்தானம், மேகா ஆகாஷ், எம் எஸ்.பாஸ்கர், தமிழ், ரவி.மரியா, ஜான் விஜய் சேஷு , மாறன். it is பிரசாந்த், ஜாக்குலின், கூல் சுரேஷ், நிழல்கள் ரவி,

தயாரிப்பு: டி ஜி விஸ்வ.பிரசாத்

இசை : சான் ரோல்டன்

ஒளிப்பதிவு:  தீபக்

இயக்கம்: கார்த்திக் யோகி

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

1960 ஆம் ஆண்டுக்கு முன்பு வடக்குப்பட்டி கிராமம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஊரே அழிந்து போகிறது அங்கிருந்த கோவிலும் தண்ணீரில் அடித்து செல்கிறது.  இருப்பதைக் கொண்டு  அங்கிருக்கும் மக்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்.  ராமசாமி ( சந்தானம்)  பள்ளிக்கு கூட செல்லாமல் பானை செய்து பிழைப்பு நடத்துகிறான். ஒரு சமயம் ஒரு திருடன் நகையை கொள்ளை அடித்து வந்து பானையை எடுத்து அதில் நகைகளை போட்டுக்கொண்டு தப்பி ஓடுகிறான்.  அவனை ராமசாமி துரத்தி செல்கிறான். ஓடிய திருடன் நிலத்தில் பானையை புதைத்து விட்டு எஸ் ஆகிறான்.  இதற்கிடையில் ஊரில் தீய சக்தியாக நடமாடும் காட்டேரி ஊர் மக்களை மிரட்டும்போது ஊர் மக்கள் தீப்பந்தம் ஏந்தி அதை துரத்தி வருகின்றனர்.  காட்டேரி மாட்டு வண்டியில் தப்பிச்செல்ல அந்த வண்டி புதைக்கப்பட்ட பானையில் ஏறி கவிழ்ந்து  தீயில் காட்டேரி எரிந்து தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போகிறது.   பூமியில் புதைக்கப்பட்ட பானை வெளியே  வர அதை ஊர் மக்கள் எல்லோரும் தங்களை காக்க வந்த அம்மன் என்று எண்ணி வணங்கு கின்றனர்.  ஊர் மக்களின் பக்தியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தன் நிலத்தில் கிடைத்ததால் அங்கேயே கோயில் கட்டி வசூலில் இறங்கு கிறான் ராமசாமி. நாளுக்கு நாள் வசூல் பெருகிக் கொண்டே போவ தால் அந்த ஊருக்கு வரும் தாசில் தார் ( தமிழ்)  ராமசாமியை அழைத்து டீல் பேசுகிறார்.  அந்த டீல் ஒத்து வராததால் ராமசாமி அவரிடம் சவால் விட்டு வெளி யேறுகிறான்   கோபம் அடைந்த தாசில்தார் ஊரில் கலவரம் நடந்ததாக கூறி கோவிலை இழுத்து பூட்டுகிறார். இதனால் ராமசாமிக்கு வசூல் பாதிக்கிறது.  ஊரிலுள்ள இரண்டு பெரிய மனிதர்களை சமாதானம் செய்ய வைத்து மீண்டும் கலெக்டரிடம் சென்று முறையிட்டால் கோயில் திறக்க முடியும் என்ற நிலையில் அவர்களை சமாளித்த கோயில் திறக்க அனுமதி வாங்குகிறான் ராமசாமி.  ஆனால் கோவிலை திறக்க விடாமல்  தாசில்தார் எப்படி எல்லாம் டகால்டி வேலை செய்கி றார் என்பது தான் படத்தின் மீதி கதை. இதில் ஜெயிப்பது யார் என்பதை காமெடியுடன் சொல் கிறது கிளைமாக்ஸ்.

சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது.  அதே போல் தான் வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் காமெடிக்கு பஞ்சமே இல்லை.
படத்தின் தொடக்கத்தில்  காட்டேரி,  பேய் பயம் என்று படம் தொடங்கு. கிறது ஆனால் சந்தானம் என்ட்ரீக்கு பிறகு கதையே மாறி விடுகிறது.
கோயில் கட்டி பானையை. கவிழ்த்து  வைத்து அதையே அம்மன் என்று சொல்லி ஊர் மக்களிடம் சந்தானம்  பண வேட்டை நடத்துவதும் தனது மோட்டார் சைக்கிளில் உண்டி யலை வைத்துக்கொண்டு தெருத். தெருவாக சுற்றி வசூல் வேட்டை. யில் ஈடுபடுவதும், அம்மனை சப்பரத்தில் வைத்துக்கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை உற்சவம் நடத்தி மக்களிடம் பொருட்களை ஆட்டய போடுவது மாக  சந்தானம் நடத்தும் காமெடிக்கு என்டே கிடையாது.

கோயிலுக்கு சாமி கும்பிட வரும் தாசில்தார் தமிழிடம் அங்குள்ள வர்கள் பணத்தைக் கேட்டு ஒண்ணுக்கு இரண்டாக பிடுங்கு வதைக் கண்டு கோபமடையும் தாசில்தார் சந்தானத்தை தனது அலுவலகத்துக்கு வர வைத்து அவரிடம் டீல் பேசுவது எதிர்பார்க் காத திருப்பம்.  அந்த டீலுக்கு சந்தானம் ஒப்புக்கொண்டு தாசில்தாரோடு சேர்ந்து கொண்டு வசூல் வேட்டையில்  ஈடுபடுவார் என்று பார்த்தால் தாசில்தாருக்கு ஆப்பு வைத்துவிட்டு வசூல் வேட்டையை. முழுவதுமாக தானே நடத்தி தாசில்தாருக்கு பட்டைநாமம் சாத்த சந்தானம் முடிவு செய்வதும் , அதை கண்டு கோபம் அடையும் தாசில்தார் ஊரில் கலவரம்  நடந்ததாக கூறி சந்தானம் கட்டிய கோவிலுக்கு சீல் வைப்பது இன்னொரு திருப்பம்.

ஊரில் இருக்கும் இரண்டு பெருசுகள் ஜான் விஜய், ரவி  மரியா இருவரும் போட்டி போட்டு தங்களது  பந்தாவை காட்டுவதாக நினைத்து கோவில் மூட காரண. மாக இருப்பதெல்லாம் கதைக்கு கூடுதல் உரம் சேர்க்கிறது
பூட்டிய கோவிலை எப்படி திறப்பது என்று யோசிக்கும் சந்தானம் “மெட்ராஸ்  ஐ” கண் நோய் பற்றி கேள்விப்பட்டு தன்னுடன் சேசுவையும்  மாறனையும் அழைத்துக் கொண்டு மெட்ராஸுக்கு சென்று மெட்ராஸ் ஐ யை கொண்டு வந்து ஊருக்கு பரப்பி விடுவதற்காக செய்யும் சேட்டைகள் வயிற்று பதம் பார்க்கின்றன.
மெட்ராஸ் ஐ உடன்  வரும் மேஜர் நிழல்கள் ரவியைப காட்டி அவரிடம் கண்களை ஒத்தி எடுத்து மெட்ரா ஐ யை தனக்குள் கொண்டுவரும் சேசுவின் சேட்டை அரங்கையே குபீர் சிரிப்பு கடலில் ஆழ்த்துகிறது.
மெட்ராஸ் ஐயை ஊருக்கு  கொண்டுவரும் சந்தானம் அதை எப்படி பரப்புவது என்று யோசித்து ஒரு வழியாக ரவி மரியாவுக்கும் ஜான் விஜய்க்கும் சேசு  மூலம் கண்களில் ஒத்தி எடுக்கச் செய்து நோயை பரப்புவதும் அதன்.பிறகு   நடக்கும் கூத்தும் கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது

பெண் பார்க்க பாடையில் வரும் கூல் சுரேஷ் செய்யும் சேட்டை இன்னொரு  கிச்சுகிச்சு.


சாமி கண்ணை குத்திவிட்டது என்று சந்தானம் கட்டிவிடும் கதையை எல்லாம் உடைக்கும் விதமாக எல்லோருக்கும் வந்திருப்பது மெட்ராஸ்  ஐ என்று சொல்ல வரும் டாக்டர் மேகா ஆகாஷ் படாத பாடுபட்டு ஊர் மக்களை திரட்டி விளக்கம் தரும்போது பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம்  காதில் ஏதோ சந்தானம் சொல்ல திடீரென்று  ஊர்மக்கள். மேகாவுக்கு  எதிராக திரும்புவதும்,  என்னடா வென்று பார்த்தால் அவர் கொண்டு வரும் மெடிக்கல் பேக்கில் இருக்கும் ரெட்  கிராஸ் சிம்பலை பார்த்து இவர் வேற்று மதக்காரர் என்று சந்தானம் மக்களை நம்ப வைத்து  மேகா ஆகாஷை ஓட விடுவது வயிற்று வலி காமெடி.
மெட்ராஸ் ஐக்காக ரவி மரியாவும் ஜான் விஜயும் மற்றவர்களும் போடும் கண்ணாடியில் கருப்பு பெயிண்ட் பூசி  அவர்களுக்கு பார்வையே தெரியாமல் செய்யும்  காமெடியும்,  ரவி மரியாவும் ஜான் விஜயையும் கருப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு காரில் ஏறுவதுமாக ஏகத்துக்கு காமெடி பட்டாசு கொளுத்தி போடுகின் றனர்
இதில் ஹைலைட் காமெடியாக வருவது நிழல்கள் ரவி ஊருக்குள் வந்து கண்ணி வெடி வைத்துவிட்டு அங்கேயே நிற்பதும் அங்கு வரும் மொட்டை ராஜேந்திரன் ரவுடி கோஷ்டிக்கு  பல இடங்களில் கண்ணி வெடி புதைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லி அவருக்கு நடுக்கத்தை  ஏற்படுத் துவதும் மொட்டை ராஜேந்திரன் ஆட்கள்  ஒவ்வொருவராக கண்ணி வெடியில் கால் வைத்துவிட்டு நகர முடியாமல் நிற்பதும் புதிய கண்ணிவெடி  காமெடி.

வழக்கமாக காமெடி செய்து கலாட்டா செய்யும் எம் எஸ் பாஸ்கர் இதில் குடியால் பார்வையை பறிகொடுத்த பார்வையற்ற ஒரு நபராக வந்து செண்டிமெண்டாக பேசி மனதை தொடுவதுடன் தனது பங்குக்கு அவ்வப்போது என்னென்ன சிறிய காமெடிகள் செய்ய முடியுமோ அதை செய்து தனது பங்கை நிறைவு செய்கிறார்.

எப்படி எல்லாம் காமெடி காட்சி களை அமைக்க வேண்டும் என்று படத்தில் ஒரு டீமே ரூம் போட்டு யோசித்து இருக்கிறது. அந்த யோசனை நன்றாகவே கை கொடுத்திருக்கிறது.  இதே டீம்தான் சந்தானத்திற்கு அப்போது முதல் இப்போது வரை காமெடி காட்சிகளை அமைத்துக் கொடுக். கிறது எல்லாமே சக்சஸ் சக்சஸ் அந்த சக்சஸ்  பட்டியலில வடக்குப்பட்டி ராமசாமியும் இன்னொன்றாக இணைகிறது

டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.  இயக்குனர் கார்த்திக் யோகி காமெடி சரத்தை கொளுத்தி பட்டய கிளப்பி இருக்கிறார்

1960 காலகட்ட கதை என்பதால் அதற்கேற்ற ஒரு கலர் டோனை வைத்து ஒளிப்பதிவை செய்திருக் கிறார் ஒளிப்பதிவாளர் தீபக்.

சான் ரோல்டன் இசை படத்திற்கு இன்னொரு பிளஸ்.

வடக்குப்பட்டி ராமசாமி வயிற்றை சுழற்றி அடிக்கும் புயல் காமெடி.

 

 

 

Related posts

NaaneVaruven Shooting Begins from Today!

Jai Chandran

நடிகர் தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட டீசர்

Jai Chandran

கோவை ஜிஆர்டி கல்லூரியில் “கோப்ரா” விக்ரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend