தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டு களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்ற 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது . ஒரு வாரம் சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்பினார் . இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகாந் துக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது . அவருக்கு மூச்சு திணறல் இருந்த காரணத்தால் உடனடியாக செயற்கை சுவாச கருவி பொருத் தப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப் பட்டது. அவருக்கு சளி இருமல் தொந்தரவு இருந்ததால் உடனடி யாக கொரோனா பரிசோதனை யை டாக்டர்கள் அவருக்கு மேற்கொண்டனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மூச்சு விடு வதில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மரணம் அடைந்த தகவலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் வேனில் வைத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஆயிர கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்த நிலையில் விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொது மக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்க எடுத்துச் செல்லப்பட்டது. பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் வரிசையில் நின்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.





மேலும் தமிழக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து சென்னை தீவு திடலில் விஜயகாந்த் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று காலை முதல் வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு ஊர்களிலிருந்து திரண்டு வந்த ரசிகர்கள், தொண்டர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி னார்கள்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் மனைவி பிரேமலதா வுக்கு ஆறுதல்.கூறினார். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகி னர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் மதியம் 2.30 மணி அளவில் விஜயகாந்த் உடல் தீவு திடலிலிருந்து வேனில் வைத்து கோயம்பேட்டில்.உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு ஊர்வல மாக கொண்டு செல்லப் பட்டது. வழிநெடுக மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
மாலை 6 மணி அளவில் கட்சி அலுவலகத்தை விஜயகாந்த் உடல் வந்தடைந்தது. அங்கு சந்தன பெட்டியில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. போலீசார் அணிவகுத்து 72 குண்டுகள்.முழங்க மரியாதை செலுத்தினர்.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஒ பி எஸ். ஜெயகுமார்i. ஜி . கே.வாசன் , தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் இறுதி சடங்குகள் முறைப்படி நடந்தது.
தொடர்ந்து தே மு தி க கட்சியினர் விஜயகாந்துக்கு வீரவணக்கம் செலுத்தினார். இதில் மனைவி பிரேம லதா, மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன், மைத்துனர் எல் கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு 7 மணி அளவில் விஜயகாந்த் நல்லடக்கம்.நடந்தது.
