வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக ரஜினிகாந்த் கூறியது: அன்பு நண்பர் விஜயகாந்த் இழப்பு மிகப் பெரிய துரதிருஷ்டம். அவர் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர். எப்படியும் உடல்நிலை தேறி வருவார் என எல்லாரும் நினைத்தோம்.
ஆனால் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அவரை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை குறைவாகிவிட்டது. அவர் இன்னும் ஆரோக்கியமாக இருந்து இருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்து இருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்து இருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்து விட்டோம் “ என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடிக்கு சென்று இருந்தார். விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்பதால் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னைக்கு புறப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் அஞ்சலி
நேற்று காலை காலமான தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கபட்திருந்த விஜயகாந்த் உடலை பார்த்து அவர் கலங்கி நின்றார். பின்னர் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
