Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு ஆளுநர், முதல்வர்கள், தலைவர்கள் இரங்கல்.. தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடந்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா உடல் நலக் குறைவால் நேற்று (நவம்பர்25m தேதி) காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வர் பினராய் விஜயன் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சங்கரய்யா இறுதி சடங்கு இன்று சென்னை. பெசன்ட் நகர் சுடுகாட்டில் அரசு மரியாதையுடன்  நடந்தது.

முன்னதாக நேற்று அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியி ருப்பதாவது:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்:

உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மூத்த தலைவர் களோடு பயணித்தவர். கல்லூரி பருவத்திலி ருந்தே பொது வாழ்க் கைக்கு தன்னை முற்றிலு மாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது மறைவு உழைக்கும் மக்களுக்கும் கம்யூனிஸ்ட் பேரியக் கத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப் பாகும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்:
மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக் காகவும், தமிழ் மண்ணுக் காகவும் வாழ்ந்து மறைந்த சங்கரய்யாவின் வாழ்க் கையும், தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். 2021-ல் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேரில் சென்று முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை அவருக்கு வழங் கியது எனக்கு கிடைத்த வாழ்நாள் பேறு. விரு தோடு கிடைத்த பெருந் தொகை யைகூட கரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த சங்கரய்யாவின் மாண்பால் நெகிழ்ந்து போனேன். சிறப்பு களுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக் கற்ற தியாக வாழ்வுக்கு சொந்தக் காரர். சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அனைவ ருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி:
90 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் மிகப்பெரிய போராளி யாக விளங்கியவர் சங்கரய்யா. தனி வாழ் வில் தூய்மையை யும், பொதுவாழ்வில் நேர்மை யையும் கடைபிடித்த அவர், பொதுவாழ்வில் ஈடுபடு பவர்களுக்கு முன்னு தாரணமாகத் திகழ்ந்த வர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்:
பொது வாழ்க்கையில் நேர்மையாகவும், எளிமை யாகவும் வாழ்ந்த மகத் தான சாதனை படைத்த ஒரு தலைவரை கம்யூனிஸ்ட் இயக்கம் இழந்துவிட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி:
தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங் களை நடத்தி, தொழிலா ளர்களின் உற்ற தோழ னாக விளங்கியவர். சாதி வர்க்கம், ஆதிக்கம், அடக்குமுறை களை தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வாழ்ந்தவர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:
சங்கரய்யாவுடன் நெருங்கி பழகிய அனுபவம் எனக்கும் உண்டு. அனைவரிடத் திலும் அன்போடும், பண் போடும் பழகக்கூடி யவர். சங்கரய்யாவின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:
மூத்த தலைவரான சங்கரய்யா மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பாகும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
தமிழகத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகவும், தொழி லாளர் வர்க்கத் துக்கா கவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைகுரல் எழுப்பி பல்வேறு போராட் டங்களை நடத்தி பலமுறை சிறை சென்றவர். எளிமை யான வாழ்க்கையை மேற்கொண்டவர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:
சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்வுக்கு முன்னுதார ணமாக திகழ்ந்தவர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:
சங்கரய்யாவின் வாழ்க் கை வரலாறும், அரசிய லில் அவர் கடை பிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறை யினர் தெரிந்து கொள்ள வேண்டியவையாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
தமிழகத்தின் மறைந்த மூத்த அரசியல் தலை வர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களோடு இணைந்து மக்கள் பணி யாற்றிய பெருமை சங்கரய்யாவை சேரும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
இந்திய விடுதலை போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என வாழ்நாள் முழுவதும் போராட்டக் களத்தில் நின்று போராடிய லட்சிய போராளி.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:
தமிழ்நாட்டின் அரசியல் வரலாறாக இருந்தாலும், போராட்ட வரலாறாக இருந்தாலும் அதை சங்கரய்யாவை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தவர்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்:
சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா மறைவு வருத் தத்தை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்திய டைய எல்லாம் வல்ல இறை வனை பிரார்த்திக்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
சங்கரய்யாவை, இழந்து வாடும் அவரது குடும்பத். தாருக்கும், உறவினர் களுக்கும், கட்சி நிர்வாகி களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

விசிக தலைவர் திருமாவளவன்:
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி என தமிழ்நாட்டின் பல்வேறு மூத்த தலைவர் களோடு அரசியல் பணியாற்றியவர். விளிம்பு நிலை மக்களின் உரிமை களுக்காக சமரசம் இன்றிப் போராடியவர்.

மநீம தலைவர் கமல்ஹாசன்:
ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக் காகவே செலவிட்டவர். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திர மல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான்.

பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர்:
வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமை யைப் போக்க வந்த நிறமே சிவப்பு என சட்டமன்றத் தில் உரையாற்றியவர். பொதுவாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் இறுதி வரை கம்யூனிசக் கொள்கை பிடிப்புடன் இருந்து பலருக்கு முன்னோடி யாக திகழ்ந்தவர்.

ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து:
ஒடுக்கப்பட்ட மக்களுக் காகவும், உழைப்பாளி களுக்காகவும் தன் வாழ் நாள் முழுவதும் குரல் கொடுத்தவர். தன்னுடைய இறுதிக் காலம் வரை உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக வாழ்ந்தவர்.

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்:
மக்கள் தொண்டுக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண் டவர். இதன்மூலம் அனை வராலும் மதிக்கப் பெற்று போற்றப்பட்டவர்.

மேலும் திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணி யரசன், சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலா ளர் டிடிவி தினகரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா, காங்கிரஸ் சட்டப்பேரவைகுழுத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், வி.கே.சசிகலா, பெருந் தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தன பாலன்,காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குமரய்யா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தலைமை செயலகச் சங்கத்தினர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் தகனம்  நடந்த  காட்சி;

Related posts

“பிளாக் விடோ” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Jai Chandran

நாமக்கல் எம்.ஜி.ஆர் பட டிரெய்லர் சத்யராஜ் வெளியிட்டார்.

Jai Chandran

சீமான் தந்தை மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend