Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கூழாங்கல் ( பட விமர்சனம்)

படம்: கூழாங்கல்

நடிப்பு:கருத்தடையான், செல்லபாண்டி

தயாரிப்பு: நயன்தாரா, விக்னேஷ் சிவன்,

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: விக்னேஷ் குழுமலை, ஜெயா  பார்த்திபன்

இயக்கம்: பி எஸ்.வினோத்ராஜ்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

ரிலீஸ்: சோனி லிவ்

 

அவார்ட்  படம் என்று சில படங்கள் வகைப்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இப்படம் இடம் பிடிக்கும் என்று சொல்லக வேண்டிய  வாய்ப்பில்லாமல் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்வதேச அளவில் டைகர் அவர்ட் உள்ளிட்ட 8 பெரிய விருதுகளை அள்ளி வந்திருக்கிறது..

கதை ரொம்பவே சிம்பிள். வீட்டிலிருந்து மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுகிறார் அவரை அழைத்து வர கணவனும். மகனும் செல்கின் றனர். அவர்கள் அங்கு செல்வ தற்கு முன்பே மனைவி வீடு திரும்பி விடுகிறார். போன இடத்தில் சண்டை பிடிக்கும் கணவன் பஸ்சுக்கு பணம் இல்லாமல் மகனுடன் நடந்தே  கோபத்துடன் வீட்டுக்கு திரும்பி வருகிறான். வந்தவன் என்ன செய்தான்?  தட்டு நிறைய சோறு போட்டு சாப்பிடுகிறான்!. அதன் பிறகு என்ன நடக்கிறது?  அம்புட்டுதான் கதை!

அவார்ட் படங்கள் என்றால் சில சிம்பாலிக் ஷாட்களை நாமே  யூகித்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான்  கிளைமாக்சும் நீங்களே ஒரு முடிவுக்கு வந்ததுடுங்க..

கோபக்கார கணவராக கருத்தடை யான் நடிக்க அவரது மகனாக செல்லபாண்டி நடித்திருக்கிறார். நிஜ பாத்திரமாகவே மாறுகி றார்கள் என்பார்களே அப்படித் தான் இவர்கள் இருவரும் நிஜ பாத்திரமாகவே மாறியிருக் கிறார்கள்.

குடும்ப சண்டையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்  முக்கால்வாசி படத்தில் அப்பா கருத்தடையானும் மகன் செல்ல பாண்டியும் நட நட என்று  நடக்கின்றனர்.  அதுவும் பகல்  12 மணி உச்சி வெயிலில் காலில் செருபில்லாமல் வறண்ட  மண்பாதையில் நடக்கின்றனர். அவர்கள் நடப்பதை பார்க்கும் போது நமக்கு மூச்சிரைத்து, வியர்த்துவிடுகிறது.

“எவ்வளவு தூரம் நடந்திருப்பீங்க என்று ஹீரோவிடம் கேட்டால் “ரிகர்சல் எல்லாம் சேர்த்து 500 கி மீட்டர் நடந்திருப்பேன் . ஹைவேஸ்ல  நடந்திருந்தா 5 ஸ்டேட்டுக்கு நடந்திருப்பேன் ” என்று சீரியசாகவே சொன்னார்.

படத்தில் வேற காட்சி இல்லையா என்று கேட்டால் எல்லாமே விஷுவலா பார்க்க வேண்டிய காட்சி,  பார்த்தால்தான் படத்தின் ஸ்பெஷல்  தெரியும்.

படத்தில் சண்டை போடும் காட்சி களில் கெட்ட  வார்த்தைகள் பேசப்படுகிறது. சீனுக்கு தேவை யான வசனம்ன்னு இயக்குனர் சொன்னாலும் ஓவரா பேசி நெளிய வைக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசைக்கு கொஞ்சம்தான் வேலை என்றாலும் கடைசி காட்சியில் ஊரணியில் தண்ணீர் எடுத்து பாட்டி குடத்தை நிரப்பும் சத்தம் படம்.முடிந்த பிறகும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் விக்னேஷ் குழுமலை,  ஜெயா பார்த்திபன் கடுமையான உழைப்பும் வித்தியாசமான  கோணங்களும் கண்ணில்.பதிகிறது.

படத்தின் ஒட்டு மொத்த சூத்திரதாரி இயக்குனர் பி எஸ்.வினோத்ராஜ். சர்வதேச அளவில் 8 விருதுகளை  வென்றி ருக்கிறது என்றால் அது சாதாரண விஷயமில்லை. உழைப்புக்கும், நடிப்புக்கும் எதார்த்துக்கும் கிடைத்த விருதுகள்.

சோனி லிவ் ஒ டி டி தளத்தில் படம் வெளியாகி உள்ளது.

கூழாங்கல் – உச்சி வெயிலில் காலில் செருபில்லாமல்  நடந்த அனுபவம்.

 

 

 

 

 

 

 

Related posts

Sathuranka Vettai 2 theatrical release on Janaury 22.

Jai Chandran

ஜூலையில் வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’

Jai Chandran

Vijay Antony starrer “VALLI MAYIL ” first schedule wrapped up

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend