Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பார்ட்னர் (பட விமர்சனம்)

படம் : பார்ட்னர்

நடிப்பு: ஆதி, ஹன்சிகா, யோகிபாபு, பாலக் லால்வானி , பாண்டிய ராஜன்,  முனிஸ்காந்த், ஜான் விஜய், ரவி மரியா, ரோபோ சங்கர், தங்கதுரை, அகஸ்டின்,

தயாரிப்பு: கோலி சூர்யா பிரகாஷ்

இசை: சந்தோஷ் தயாநிதி

ஒளிப்பதிவு: சபீர் அஹமத்

இயக்கம்: மனோஜ் தாமோதரன்

பி ஆர் ஒ : யுவராஜ்

 

பிஸ்னசுக்கு கடன் வாங்கி கடன் காரராகிறார்.ஆதி. கடன் கொடுத் தவர் மோதலுக்கு நிற்கிறார்.  கடனை திருப்பி தராவிட்டால் தங்கையை திருமணம் செய்து தர வேண்டும் என்று மிரட்டுகிறான்.  பணத்தை சம்பாதித்து திருப்பி தருவதாக கூறி நண்பன்  யோகி பாபுவை தேடி சென்னை வருகி றார் ஆதி. ஐடி கம்பெனியில் வேலை செய்வதாக  சொல்லும் யோகி பாபு டிஜிட்டல் திருட்டு கும்பல் கம்பெனியில் ஆதியை வேலைக்கு   சேர்த்துவிடுகிறார். சைன்டிஸ்ட் பாண்டியராஜன் அபூர்வ மருந்து ஒன்றை  கண்டு பிடிக்கிறார். அதை அபேஸ் செய்ய ஜான் விஜய் முயல்கிறார். அந்த வேலையை ஆதி செய்து தருவ தாக கூறி 50 லட்சம் வாங்குகிறார். யோகிபாவுடன்  சைன்ட்டிஸ்ட் வீட்டில் திருட செல்கிறார் ஆதி. அங்கு ஒரு ஊசி குத்தியதில்  யோகிபாபு பெண்ணாக  மாறி விடுகிறார்.  50 லட்சம் பணமும் மினிஸ்டர் ரவிமரியாவிடம் சிக்கிக் கொள்கிறது. பணத்தையும் தங்கையையும் ஆதி மீட்டாரா, பெண்ணாக மாறிய யோகி பாபு மீண்டும் ஆணாக  மாறினாரா என்பதற்கு கிளைமாக்ஸ் கலகலப்பாக பதில் சொல்கிறது.

லாஜிக் மேஜிக் பார்க்காமலி ருந்தால் படத்தை  ரசிக்கலாம். யோகிபாபுவை ஆதி சந்திக்கும் காட்சியிலேயே கதையும் தொடங்கி விடுகிறது. ஐடி கம்பெனியில் வேலை செய்வ தாகவும் உனக்கும் வேலை வாங்கி தருகிறேன் வா என்று சொல்லி ஆதியை யோகி பாபு அழைத்துச் செல்லும் வரை அது டுபாங்கூர்  ஆபிஸ் என்பது தெரியவில்லை.  டிஜிட்டல் பாணியில் கொள்ளை அடித்து நடத்தும்  கம்பெனி என்று யோகி பாபு விளக்கி ஒவ்வோரு திருட்டாக  ஆதியிடம் விளக்குவது காமெடி.

பாண்டியராஜன் வீட்டில் கொள்ளையடிக்க செல்லும் ரோபோ சங்கர், தங்கதுரை கோஷ்டி  அங்கிருக்கும் எலும்புக் கூடுகளை பார்த்து. அலறியடித்து ஓடுவதும்.பின்னர் அதே பங்களா வுக்குள்  ஆதி, யோகி பாபு திருட வந்து செய்யும் அலப்பரையும் குழந்தைகளை கைகொட்டி சிரிக்க வைக்கும்

யோகிபாபு  திடீரென்று ஹன்சிகா வாக மாறியதும் அவரை கண்டு அதிர்ச்சி அடையும் ஆதி பின்னர் ஒரு வழியாக சமாளித்து அவரை கூட்டிக்கொண்டு ரவி மரியா வீட்டில் கொள்ளையடிக்க செல்வ தும், ஜொள்ளு பார்ட்டி ரவி மரியா ஹன்சிகாவை பார்த்து  மைதா மாவு என்று ஏங்குவதும் அதேபோல் ரோபோ சங்கரும் ஹன்சிகாவை பார்த்து ஏங்குவது தொடர் காமெடிகள்

பாலக் லால்வாணி வருவதும் போவதுமாக இருக்கிறார்.  ஜான் விஜய் கோபத்துடன் பேசினாலும் அதை யோகி பாபுவும், ரோபோ சங்கரும் பஞ்ச்.போட்டு காமெடி யாக்கிவிடுகின்றனர். ஹன்சிகா வின் குத்து பாட்டு செம ஜோர்.

கிளைமாக்ஸ் வழக்கம்போல் ஒரு குடோனில் சண்டை காட்சியுடன் முடிய கடைசியில்.போலீஸ் வருகிறது.

கோலி சூர்யா பிரகாஷ் தயாரித்தி ருக்கிறார்.

சந்தோஷ் தயாநிதி இசை ஒ கே.

சபீர் அஹமத் ஒளிப்பதிவு மினுமினுப்பு.

மனோஜ் தாமோதரன் ஜாலியான ஒரு கமர்ஷியல் படத்தை தந்திருக் கிறார்

பார்ட்னர் – பொழுதுபோகும்.

 

 

Related posts

“ரஜினி தான் இன்ஸ்பிரேசன்”- ‘விரூபாக்‌ஷா’ சாய் தரம் தேஜ்.

Jai Chandran

சீமான் தந்தை மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்

Jai Chandran

First-look of Arulnithi15 to be launched by Director Pandiraj

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend