Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கிங் ஆப் கொத்தா ( பட விமர்சனம்)

படம் :கிங் ஆப் கொத்தா

நடிப்பு: துல்கர் சல்மான், பிரசன்னா, சபீர் கல்லரக்கல், கோகுல் சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா

தயாரிப்பு:துல்கர் சல்மான், ஜீ ஸ்டுடியோஸ்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

இசை : ஜேக்ஸ் பிஜாய்,ஷான் ரஹ்மான்

இயக்கம்: அபிலாஷ் ஜோஷி

1996ல் கொத்தா நகருக்கு மாற்றலாகி வருகிறார் போலீஸ் அதிகாரி பிரசன்னா. நகரில் இளைஞர்கள் போதைக்கு அடிமை யாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். போதை மருந்தை தங்கு தடையின்றி சப்ளை செய்யும் ரவுடி கண்ணன் (சபீர்) பற்றி கேள்விப்பட்டு அவனை நேரில் எச்சரிக்கிறார். ஆனால் பிரசன்னாவை மிரட்டி நடுங்க வைக்கிறான் கண்ணன். அப்போதுதான் ராஜு (துல்கர் சல்மான்) பற்றி பிரசன்னா வுக்கு தெரிய வருகிறது. ராஜுவும் ஒரு ரவுடிதான். ராஜூவும், கண்ணனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில இவர்களுக்குள் விரோதம் உண்டாகிறது. பின்னர் ராஜு காணாமல் சென்று விடுகிறான். தன்னை கேட்க யாரும இல்லை என்ற தைரியத்தில் கண்ணன் மக்களை துன்புறுத்துகிறான். திடீரென்று ராஜு திரும்பி வந்து மக்களையும் குடும்பத்தையும் ரவுடியிடமிருந்து எப்படி காப்பாற் றுகிறான் என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் சொல்கிறது கிளை மாக்ஸ்.

சாக்லெட் பாய் என்று சொல்லப் பட்டு வந்த துல்கர் சல்மான் ஒரே படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருப்பது ஆச்சரியம். சண்டைக் காட்சிகளில் பின்னிபெட லெடுத்துவிட்டார். ரக்டு லுக் முரட்டு தோற்றத்துக்கும் அசத்தலாக மாறி வேடத்தை தக்க வைக்கிறார்.

என்னதான் முரட்டுத்தனம் இருந் தாலும் ஐஸ்வர்யா லட்சுமியுடன் காதல் என்று வந்ததும் மென்மை யாகி விடுகிறார். ஐஸ்வர்யாவை இன்னொரு வாலிபன் காதலிக்க நூல் விடுவதை பார்த்து ஆத்திரம் அடையும் துல்கர் அவனை பார்வை யாலேயே மிரட்டி விரட்டிவிடுவதும் ஆனாலும் அவன் மீது ஐஸ்வர்யா காதல்.கொண்டிருப்பதை பார்த்து கோபத்தில் விலகி ஊரைவிட்டு செல்வதும் ஆக்ஷன் கதைக்குள் ஒரு லவ் சென்டிமென்ட்.

மீண்டும் கொத்தாக்கு வந்து கண்ணன் பாய் ரவுடி கூட்டத்துக்கு துல்கர் சமாதி காட்டுவது முழுக்க முழுக்க இரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் அதகளம்.

சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர் இப்படத்தில் கண்ணன் பாய் ரவுடியாக நடித்திருக்கிறார். துல்கரும், சபீரும் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிரட்டல். நைலா உஷா அழகான பெண் ரவுடி.

துல்கர் சல்மான், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின் றனர்

நிமிஷ் ரவி ஒளிப்பதிவு ஆக்ஷன் மூடில் காட்சி பதிவு செய்திருக் கிறார்.

ஜேக்ஸ் பிஜாய்,ஷான் ரஹ்மான் இசை தொடக்க முதல் கிளை மாக்ஸ் வரை ஓயவே இல்லை

கே ஜி எப் பாணியில் படத்தை தர வேண்டும் என்ற எண்ணத்துடன் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி ஆக்ஷன் களத்தில் உஷ்ணம் ஏற்றி மிரட்டியிருக்கிறார்.

கிங் ஆப் கொத்தா – துல்கரின் ஆக்ஷன் அவதாரம்.

Related posts

இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் கார்டியன்

Jai Chandran

ZEE5-ல் ஆகஸ்ட் 7 முதல் விஜய் ஆண்டனியின் நூறு சாமி..

Jai Chandran

அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை: கமல் குரல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend