Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அடியே (பட விமர்சனம்)

படம் : அடியே

நடிப்பு: ஜீவி பிரகாஷ் குமார், கவுரி ஜி கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர். ஜே .விஜய், வெங்கட் பிரபு,

தயாரிப்பு: மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ்  பிரபா பிரேம்குமார்

இசை :  ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவாளர்: கோகுல் பினோய்

இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்

பி ஆர் ஒ : யுவராஜ்

பிளாக் காமெடி, திரில்லர், கவுபாய், ஆக்ஷன் சென்டிமென்ட், லவ் ஜர்னர் என்று படங்களில் பல வகைகள் உள்ளன. அந்த வரிசை யில்.அடியே படம் மல்டி வெர்சஸ்  என்ற களத்தை கொண்டு ரொமாண்டிக் படமாக உருவாகி யிருக்கிறது.

பள்ளியில் படிக்கும் தருணத்தில் கவுரி கிஷன் மீது காதல் கொள்கி றார் ஜிவி.பிரகாஷ். பள்ளி  மேடையில் பாடிய பாடல் சரியில்லை என்று  கவுரி கண்கலங்க அவருக்கு ஆறுதல்  கடிதம் எழுதுகிறார் ஜிவிபிரகாஷ்.  அந்த கடிதம் கவுரிக்கு ஆறுதல் தருவதுடன் பின்னாளில் அவர் பிரபல  பாடகியாகிறார்.  ஆனால் பள்ளியில் ஆறுதல்.கடிதம் கொடுத்தது பிரகாஷ்தான்  என்பது கவுரிக்கு தெரியாது.  தான் பாடகியாக உதவிய கடிதம் தந்தவரை பார்க்க விரும்புவதாக டிவி பேட்டியில் சொல்கிறார். கவுரி.  அந்த  கடிதம் கொடுத்தது தான்தான் என்று அவரிடம் சொல்வதற்காக ஜிவிபிரகாஷ் வேகமாக வர விபத்தில் சிக்கு கிறார். அதன்பிறகு கண்விழிக்கும் போது அவர் கவுரியுடன்  வாழ்ந்துக்  கொண்டிருக்கிறார். தான் பார்த்த சென்னை நகரம் நவீனமயமாக மெட்ராஸ் என பெயர் மாறி கிடக்கிறது. தானே ஒரு பிரபல இசை அமைப்பாள ராகியிருக்கிறார். ஆனால் சில நாட்களுக்குள் இந்த வாழ்க்கை மாறி கவுரி வேறு ஒருவனை திருமணம் செய்ய தயாராகிறார். இப்படித் தான் இந்த கதை பாம்புபோல் வளைந்து, நெளிந்து கடைசி வரை செல்கிறது. இறுதி வரை இருவரும் இணைகி றார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

பார்க்க சுவாரஸ்யமான படமாக இருந்தாலும் இதை இயக்குவது,  நடிப்பது, எடிட்டிங் செய்வதெல்லாம் மிகக் கடினமான விஷயம்.  ஜிவி பிரகாஷ் தனது கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள  எத்தனைமுறை  இயக்குனரிடம் கதை கேட்டிருப்பார் என்று யோசிக்க தோன்றுகிறது.

ஒரு காட்சியில் கவுரியின் காதலன்,  இன்னொரு காட்சியில் இவரின் காதலி கவுரி தனது நண்பனின் காதலி என்று  பிரகாஷ் காணும் காட்சிகள் அவருக்கு மட்டுமல்ல ரசிகர் களுக்கும் ஆச்சர்யத்தை தருகிறது.

கவுரி தன்னைவிட்டு பிரிந்து விடுவாரோ என்ற பயத்தில் எதிர்காலம், நிகழ்காலம் கடந்த காலம் என்று மாறி மாறி செல்வதும் அதில் அவர் கேள்விப் படும் சச்சின் கால்பந்து வீரர், ஏ.ஆர்.ரகுமான் டான்ஸ் மாஸ்டர், மணிரத்னம் ஒரு.கோச், விஜய் நடித்த யோவான் பட வெற்றி விழா,  பிரதமர் கேப்டன் விஜய காந்த்,  கவுதம் மேனனாக வெங்கட்பிரபு  மாறி இருப்பது போன்ற தகவல்கள் தலையை சுற்ற வைத்தாலும் அரங்கில் அப்ளாஷ் பார்க்கிறது.

குழப்பமான வேடத்தை குழப்பாமல் நடித்திருக்கிறார் ஜிவி பிரகாஷ். கவுரி கிஷன் இயக்குனர் என்ன சொன்னாரோ அதை செய்திருக் கிறார்.  இது டைம் டிராவல்பாணி கதை என்பதை புரிய வைக்க செல்போன் சைசில் ஒரு டிஜிட்டல் போனை கொடுத்து எல்லா குழப்பத்துக்கும் இதுதான் காரணம் என்று சொல்லும்போது மீண்டும் ஒரு முறை ஏற்கனவே ஓட்டிய காட்சிகள் கண்முன் வந்து செல்கின்றன. சை

சைன்டிஸ்ட்டாக, கவுதம் மேனன் ஆக  வெங்கட் பிரபு தோன்றி  கலாய்க்கிறார்.

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ்  பிரபா பிரேம்குமார் தயாரித்தி ருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசை பாடல்களில்  தேன் தடவி இருக்கிறது.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு காட்சிகளை. வேறுபடுத்தி காட்டியிருக்கிறது. கிராபிக்ஸ், வி எப் எக்ஸ்.காட்சிகள் கதையை பளபளப்பாக்குகிறது அதுவும் சென்னையில் காஷ்மீர் போல் பனி மழை பெய்யச்செய்வது குளுமை

திட்டம் இரண்டு படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் அடியே படத்தை வித்தியாசமான கோணத்தில்  இயக்கியிருக்கி றார்.

எடிட்டிங் கைவண்ணமும் கவனிக்க வைக்கிறது.

அடியே – புது அனுபவம்

 

 

 

 

 

Related posts

விஜய்சேதுபதி-சூரி நடிக்கும் விடுதலை இரண்டு பாகமாக வெளியாகிறது

Jai Chandran

ச ம க தலைவர் சரத்குமார் பொங்கல் தின வாழ்த்து

Jai Chandran

Kantara: Chapter 1 to Release Date Announced

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend