Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

புரோக்கன் ஸ்கிரிப்ட் ( பட விமர்சனம்)

படம்: புரோக்கன் ஸ்கிரிப்ட்

நடிப்பு: ரியோ ராஜ், ஜோ ஜியோ வன்னி சிங், ஜெய்நீஷ், குணாளன்,  நபிஷா ஜூலாலுதின், மூணிலா

தயாரிப்பு: ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ்

இசை: பிரவீன் விஸ்வா மாலிக்

ஒளிப்பதிவு: சலீம் பிலால் ஜிதேஷ்

இயக்கம்: ஜோ ஜியோவன்னி சிங்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

சினிமா எடுப்பதாக கூறி தன்னை ஏமாற்றிய இயக்குனரை  தேடி பழிவாங்க எண்ணும் தயாரிப்  பாளர் சைக்கோ (ஜோ ஜியோ வன்னி சிங்)உடல் சோர்வுக்காக மாத்திரை சாப்பிட்டு படுக்கிறார். அடுத்து சிங்கப்பூரில் மருத்துவ மனையில் சிகிச்சை. பெறுகிறார்.  திடீரென்று 2 டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். கொலையாளியை போலீஸ் தேடுகிறது. இந்நிலையில் அக்கா வுடன் (மூணிலா) ஹாலோவன் கேம் ஆடும்  தம்பிதுரை (ரியோ ராஜ்) சைக்கோ ஒருவரிடம் சிக்கிக் கொளகிறார். அவனிடமிருந்து தம்பிதுரை தப்பிக்கிறாரா?  தயாரிப்பாளர்  சைக்கோ இயக்கு னரை கொன்றாரா என்ற கேள்வி களுக்கு எதிர்பாராத பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

சைக்கோ கொலைகாரனாக  இயக்குனர் ஜோ ஜியோ வன்னி சிங் நடித்திருக்கிறார்.நிஜமாகவே இவரை ஒரு இயக்குனர் படம் தயாரிக்க இழுத்துவிட்டு பிறகு பாதியிலேயே ஜூட் விட்ட கோபத்தில் இப்படத்தை ஜோ இயக்கி நடித்திருக்கிறார்.

தனது கோபத்தை படத்திலேயே பல காட்சிகளில் வெளிப்படுத்தி யிருக்கிறார் ஜோ. ஆனால்  தொடர்பில்லாமல் ஜம்ப் ஆவது குழப்புகிறது .திரைக்கதை  எடிட்டிங் விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால்  இன்னும் வித்தியாசமான கதையாக மாற்றியிருக்கலாம்.

பங்களாவுக்குள்  திருடனாக ரியோ ராஜ் நுழைந்து அங்கிருக்கும் வக்கீலை கட்டிப்போட்டு மிரட்டு வதும் சில நிமிடங்களில்  வ்க்கீல் ஒரு சைக்கோ என்று தெரிந்து அவரிடம் ரியோ ராஜ் சிக்கிக் கொண்டு நடுங்குவதும் காமெடி.

சிங்கப்பூரிலும்.இந்தியாவிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஏமாற்றிவிட்டு ஓடிய இயக்குனரின் ஸ்கிரிப்ட்டை உடைத்து  மாற்றி எழுதியதால் படத்தின் டைட்டிலை புரோக்கன் ஸ்கிரிப்ட் என்று  வைத்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஜோ ஜியோ வன்னி கிங் கோபத்தின் வெளிப்பாடு. பல காட்சிகளில் எதிரொலிக்கிறது.

பிரவீன் விஸ்வா மாலிக் இசை சுமார்.

ஒளிப்பதிவை சலீம் பிலால் ஜிதேஷ் கவனித்திருக்கிறார் சிங்கப்பூரை.முழுவதுமாக சுற்றிj காட்டியிருநதால் ரசித்திருக்கலாம்.

புரோக்கன் ஸ்கிரிப்ட்  – ஆங்கில டைட்டிலில் ஒரு தமிழ் படம்.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

 

 

 

 

 

 

Related posts

ராஜ பீமா (பட விமர்சனம்)

Jai Chandran

அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

“மரகத நாணயம்” 2ம் பாகம் பூஜையுடன் தொடக்கம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend