படம்: ராஜ பீமா
நடிப்பு: ஆரவ், ஓவியா, ஆஷிமா, யாஷிகா ஆனந்த், கே.எஸ் .ரவிக்குமார், நாசர், யோகி பாபு, பாகுபலி பிரபாகர், சாயாஜி ஷிண்டே, ராகவன்
தயாரிப்பு: மோகன்
இசை: சைமன் கே கிங்
ஒளிப்பதிவு: எஸ் ஆர் சதீஷ்குமார்
இயக்கம்: நரேஷ் சம்பத்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா
காட்டுப்பகுதியில் வசிக்கும் நாசர் குடும்பம் ஒரு யானையை குட்டி முதல் எடுத்து வளர்க்கின்றனர். அதனுடன் சிறு வயது முதல் அன்பாக பழகுகிறார் ஆரவ். யானைகள் முகாமிற்கு அந்த யானை அனுப்பி வைக்கப்படுகிறது. முகாம் முடிந்து யானையை அழைத்து வர ஆரவ் செல்கிறார். அங்கு இருக்கும் யானையைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். இது எங்களது யானை இல்லை அதை எங்கோ மறைத்து வைத்திருக்கிறார்கள். யானையை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் புகார் செய்கிறார் ஆரவ். அந்த யானையை கடத்தினார்களா ?அல்லது தந்தத்திற்காக கொன்று விட்டார்களா? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
யானை நடித்து படங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அந்த வகையில் ராஜ பீமா யானையை மையமாக வைத்து வந்திருக்கும் படம் என்பது சிறுவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும்.
யானையுடன் ஆரவ் சிறு வயதில் விளையாடும் காட்சிகள் அதனுடன் நடந்து சென்று படிப்பது போன்ற காட்சிகள் இதம். முதல் பாதி வரை படம் இப்படித்தான்.. யானை, வளர்ப்பு, ஆஷிமாவுடன் காதல் விளையாட்டு, ஓவியா நடனம் என்று செல்கிறது.
யானையை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழும் நிலையில் திடீரென்று ஆரவ் முகாமில் இருக்கும் யானையை பார்த்துவிட்டு, “இது என்னுடைய யானை இல்லை “என்று சொல்லும் போது அதிர்ச்சி பரவுகிறது .
இயக்குனர் கே. எஸ் .ரவிக்குமார் அமைச்சராக நடித்திருக்கிறார் அதுவும் யாகம், பூஜை என்று சாமியார்கள் சொல்லும் கதைகளை கேட்டு அதை நம்பி யாகம், பூஜை செய்து தனது பதவியை உயர்த்திக்கொள்ள முயலும் மந்திரியாக நடித்திருக்கிறார்.
யானையைத் தேடி அலையும் ஆரவ் கிளைமாக்சில் யானையைக் காப்பாற்ற பாகுபலி பிரபாகருடன் மோதும் காட்சி பரபரப்பு
ஆனால் ஆரவ் அவரிடம் செம் அடி வாங்கி ரசிகர்களை நோகடிக்கிறார்.
ஆரவ் தந்தையாக நாசர் நடித்திருக்கிறார். ஆரவுடன் வரும் யோகி பாபு கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார்
தமிழ்நாட்டிலோ அல்லது வேறு மாநிலத்திலோ யானையை வைத்து படம் எடுக்க முடியுமா என்பதெல்லாம் இப்போது கேள்விக்குறியாகி விட்டது. விலங்கு வதை தடுப்புச் சட்டம் விலங்குகளையோ பறவைகளையோ பயன்படுத்தி படம் எடுக்கக் கூடாது என்ற தடை சட்டம் உள்ளதுதான் இதற்கு முக்கிய காரணம்.
ஆனால் ராஜ பீமா படத்தை நிறைய யானைகளுடன் எப்படி படம் எடுத்தார்கள் என்ற கேள்விக்கு ஆச்சரியம் ஏற்படுவது இயற்கை . அதற்கு இயக்குனர் நரேஷ் சம்பத்திடம் உள்ள பதில் இப்படத்தின் யானை காட்சிகள் முழுவதும் பாங்காக்கில் படமாக்கப்பட்டது என்பதுதான்.
மோகன் தயாரித்திருக்கிறார்
சைமன் கே கிங் இசை,
எஸ். ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு ஓகே.
ராஜ பீமா – குழந்தைகளுக்கு பிடிக்கும்.
