Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கார்த்தி பேச்சு

தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தின ராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி.

கார்த்தி பேசியதாவது:
”இன்றைய காலக் கட்டத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின் றன. இதனை பயன் படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.
பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படு கின்றன. போதைப் பொருள் பயன்படுத்துப வர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர் கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந் தால் போதைப்பொருட் களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டி களில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளை களை கவனித்து நண்பர் களாக வழிநடத்த வேண்டும்”
இவ்வாறு கார்த்தி பேசினார்

Related posts

Mahaan First Single, Soorayaatam from 22nd

Jai Chandran

SonyLIV gears up to release Tamil movie Maanaadu, on 24th December

Jai Chandran

ஜெரின் கான் இரு வேடங்களில் நடிக்கும் ” நாக பைரவா “

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend