Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பானி பூரி ( வெப் சீரிஸ் விமர்சனம்)

படம் : பானி பூரி ( வெப் சீரிஸ்)
நடிப்பு:  லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர்,  ஶ்ரீகிருஷ்ண தயாள்
தயாரிப்பு: புல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்
இசை: நவநீத் சுந்தர்
ஒளிப்பதிவு: பிரவின் பாலு
இயக்கம்: பாலாஜி வேணு கோபால்
ரிலீஸ்: ஷார்ட் ஃபிலிக்ஸ்  ஓ டி டி தளம்
பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா (D’ one)
லிங்கா, சம்பிகா ஐ டி கம்பெனியில் பணியாற்று கின்றனர். இருவரும் வருடக்கணக்கில் காதலித்த நிலையிலும் சாம்பிகா திருமணத்துக்கு சமம்பதிக்காமல் காலம் தாழ்த்துகிறார். ரோபோடிக்ஸ் துறையில் சாதித்த பிறகே திருமணம் என்கிறார். இந்நிலையில் காதலித்து திருமணம் செய்த தனது தோழி சில மாதங்களிலேயே விவாகரத்து செய்யப் போவதாக சொல்வதால் தன் காதல்.மீது நம்பிக்கை இழக்கிறார் சம்பிகா. இவரை மனதார காதலித்த லிங்கா திடீரென்று பெண்  கேட்டு வருகிறார். ஆனால் சம்பிகா திருமணம் செய்ய மறுக்கிறார். லிங்காவுடன்  சேர்ந்து  வாழ முடியுமா என்ற சந்தேகம் எழுப்புகி றார். அப்படி என்றால் ஒரு வாரம் இருவரும் லிவிங் டூ கெதர் ஜோடிகளாக வாழ்ந்து பார்த்து முடிவு செய்யும்படி சம்பிகாவின் தந்தை குமரவேல் யோசனை சொல்கிறார். அதன்படி இருவரும் தனியாக ஒரு வாரம் தனி வீட்டில் வாழச் செல்கின் றனர். அதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக் கின்றனர். இறுதியில் இந்த ஜோடியாக வாழ்வில் இணைய முடிகிறதா
என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
பானிபூரி என்றதும் ஏதோ சாப்பிடும் ஐட்டம் என்று நினைத்தால் இது கதையில் வரும் லிங்கா, சம்பிகா இருவரின் கதாபாத்திர பெயர்களின் இணைப்பு என்று தெரிய வந்ததும் ஏதோ சுவரஸ் மாக சொல்லாப் போகி றார்கள் என்பதை உணர முடிகிறது. அதை சீனுக்கு சீன்  உண்மையாக்கி யிருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
தொடக்கம் முதலே காட்சிகள் களைகட்டத் தொடங்குவதால் அடுத்த டுத்த காட்சிகள் எப்படி போகப்போகிறது என்ற ஆர்வம் அதிகரிக்கிறது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, அண்ணன் எதிர்ப்பு என்று  வழக்கமான எந்த பார்முளாவை பயன் படுத்தாமல் வாழ்க்கை யில் இணைந்து வாழ ஒரு நிஜ காதல் ஜோடி எப்படி எல்லாம் பிரச்னைகளை நடைமுறையில் எதிர் கொள்ளும் என்பதை ரூம் போட்டு யோசித்து அழகாக எல்லா காட்சி களையும் செதுக்கியிருக் கிறார்கள்.
காதலியை பெண் கேட்டு  திடீரென்று வீட்டுக்கு வந்து நிற்கும் லிங்காவை   சம்பிகாவின் தந்தை இளங்கோ குமரவேல்  திட்டித்  தீர்க்காமல்  அவரை வீட்டுக்குள் அழைத்து பேசும் பாங்கு சுவாரஸ்யத்தை அதிகரிக். கிறது. காதலிக்கு  இப்படி யொரு அப்பாவா என்று இளவட்டங்ககள் ஏங்கும் அளவுக்கு  இளங்கோ குமாரவேல் அசத்தியிருக் கிறார்.
லிங்காவும், சம்பிகாவும் லிவிங் டு கெதர் ஆக வாழ சம்பிக்காவின் தந்தை ஐடியா கொடுத்து அனுப்பி வைப்பதும் அதுதான் சாக்கு என்று லிங்காவும் சம்பிக்காவும் தனி அறையில் கும்மாளம் போடாமல் இருவரின் புரிதலுக்காகவே எல்லா காட்சிகளையும்  அமைத்தி ருப்பது சபாஷ் போட வைக்கிறது.
ஒரே கட்டிலில் லிங்கா, சம்பிகா படுத்திருந்தாலும்  அதில் கூட முகம் சுழிக்க வைக்கும் எந்தவொரு சிலுமிசத்தையும்  காட்டாமல் கண்ணியமாக காட்சி அமைத்திருக்கும் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் பெண் களிடம் மட்டுமல்லாமல் பெண்ணை.பெற்ற பெற்றோர்களிடம் பாராட்டுக்களை அள்ளிக் கொள்கிறார்.
சில படங்களில் முரட்டுத். தனமான வில்லனாக நடித்து இமைஜை கெடுத்து வைத்துக் கொண்டிருந்த லிங்கா முற்றிலுமாக தனது  இமேஜை ஸ்வீட்டான லவர் பாயாக  அழகான நடிப் பால் மாற்றிகாட்டியிருக் கிறார்.
சமம்பிகாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அவரிடம் பம்முவதும் சில சமயம் எகிறுவதும்  அருமை.
கொழுக் மொழுக்கென்று இருக்கும் சம்பிகா நடிப்பில்  செம்ம ஸ்டைல் காட்டி கவர்கிறார்.
லிவிங் டூ கெதர் சக்சஸ் ஆகிவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் தனிமையில் வாழப் போகும்  தந்தையை யார் பார்த்துக்கொள்வது என்ற சர்ச்சையை சம்பிகா கிளம்பியதும்  இயக்குனர் கே.பாக்யராஜ்  பட கிளை. மாக்சில் வரும் டிவிஸ்ட் போல் கதையின் முடிவு என்னவாகுமோ என்ற ஆர்வத்தை பல மடங்கு அதிகரித்துவிடுகிறது.
படத்தில் தங்கள் நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்து கிறார்கள் கனிகா,  வினோத் சாகர் மற்றும்  ஶ்ரீகிருஷ்ண தயாள்.
திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் ஏக்கத்தில் வாழ்க்கையை ஓட்டும் சக 90ஸ்கிட்டாக  வினோத். சாகர் பட்டையை கிளப்பி யிருக்கிறார்.
இதை இரண்டு மணி நேர. சினிமாவாக எடுத்திருந் தால் இவ்வளவு டீடெயிலை இயக்குனரால் சொல்லியிருக்க முடியாது. வெப் சீரிசாக இயக்கியது தான் உத்தமம்.
லிவிங் டுகெதர் வெப் சீரிஸ் என்றாலே அதை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க.முடியாதளவுக்கு விரசம்மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தை முற்றிலுமாக. உடைத்து தகர்த்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

இரண்டு வீடுகளில் மட்டுமே 90 சதவீத காட்சிகள் படமாக்கியி ருக்கும் ஒளிப்பதிவாளர் பிரவின் பாலு அந்த எண்ணமே வராமல் காட்சிகளோடு ஒன்ற வைத்து விடுகிறார்.நவநீத் சுந்தர் இசை பெரிய பிளஸ். அதேபோல் காட்சிகளை சிந்தாமல் சிதறாமல்  கோர்த்தி ருக்கும் எடிட்டர் பிகே  பங்கும் பெரியது.

புல் ஹவுஸ் என்டர்டெயின் மென்ட் தயாரித்திருக் கிறது. தரமான இந்த வெப் சீரிசை ஷார்ட் ஃபிலிக்ஸ் ஒ டி டி தளத்தில் பார்க்க லாம்.

பானி பூரி – காதல் கல்யாண வாழ்க்கையின் கோனார்  உரை.

 

 

 

Related posts

The Kashmir Files Movie Production Next Announcement Soon

Jai Chandran

Nidhhi Agerwal Pair with Prabhas in Raja Deluxe

Jai Chandran

Prabhas and Prashanth Neel’s “Salaar Part 1 On Dec 22nd

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend