Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பெல் (பட விமர்சனம்)

படம்: பெல்

நடிப்பு: குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், ஜாக் அருணாச்சலம், ஷார்மிகா, துர்கா, சுவேதா, ஜோசப்பின்

தயாரிப்பு: பீட்டர் ராஜ்

இசை: ராபர்ட்

ஒளிப்பதிவு: பரணிக்கண்ணன்

இயக்கம்; ஆர்.வெங்கட் புவன்

பி ஆர் ஒ: வேலு

அகத்திய மாமுனிவர் 6 பரம்பரை வைத்தியர்களை தேர்வு செய்து மனிதன் உயிர் காக்கும் மூலிகை ரகசியம் உள்ளிட்ட 6 ரகசியங் களை தனித்தனியாக சொல்லி இதனை யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்து மக்கள் நல் வாழ்வுக்கு பயன் படுத்தச் சொல் கிறார். இதில் மனிதன் இறந்த பிறகும் அவனை உயிர்த்தெழச் செய்யும் நிசம்பசூதனி மூலிகை ரகசியத்தையும் சொல்கிறார். காலப் போக்கில் மூலிகை வைத்தியம் வழக்கொழிகிறது. நிசம்பசூதனி ரகசியத்தை அடைய குரு பிரம்மா (குருசோம சுந்தரம்) அந்த ரகசியம் தெரிந்த பெல் (நிதிஷ் வீரா, மாஸ்டர் ஶ்ரீ) இருவரையும் அச்சுறுத்தி பெற முயல்கிறார். அந்த முயற்சி என்னவாகிறது. பெல் எடுத்த முடிவு என்ன என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் அளிக்கிறது.

பழந்தமிழர் பெருமை சொல்லும் கதையாக உருவாகியிருக்கிறது பெல். இதில் பெல். இந்த கதாபாத்திரத்தில் நடித்த நிதிஷ் வீரா படத்தின் பெரும் பகுதியில் நடித்துள்ள நிலையில் திடீரென்று இறந்து விடவே அதே பாத்திரத் தில் மாஸ்டர் ஶ்ரீ தரும் நடித்துள்ளார்.

இன்னும் ஒன்றிரண்டு பாத்திரத் தில் மாற்று நடிகர்கள் நடித்திருப்ப தால் கதையில் குழப்பம் இல்லா விட்டாலும் மாற்றி மாற்றி நடிகர் களின் காட்சிகளை காட்டும்போது குழப்பம் ஏற்படுகிறது.

போலீஸ் விசாரணையின்போது ஶ்ரீதர் மாஸ்டர் பேசும் வசனத்தை கவனித்தால் ஓரளவுக்கு இரட்டை நடிகர்கள் குழப்பத்துக்கு விடை கிடைக்கும்.
“பார்வையற்ற எனக்கு எல்லார் உருவம் பற்றியும் ஒரு கற்பனை உருவம் இருக்கிறது என் உருவம் பற்றிய கற்பனையும் இருக்கிறது ” என்று சொல்லும்போது நிதிஷ் வீரா பாத்திரத்தை அறிமுகப் படுத்து வது குழப்பத்தை தவிர்க்கும் முயற்சி.

பார்வையற்ற பெல் பாத்திரத்தில் நிதிஷ் வீரா, மாஸ்டர் ஶ்ரீதர் நடித்துள்ளனர். இருவருமே பாத்திரத்தை உணர்ந்து நடிப்ப தால் மாறி மாறி கதாபாத்தி ரங்களை காட்டினாலும் நடிப்பு தொடர்ச்சி விடுபடாமல் கவனத்தில் நிற்கிறது.

பார்வையற்றவராக நிதிஷ் வீராவின் நடிப்பு கடைசி வரை அச்சு பிசகாமல் செல்கிறது. நிசம்பசூதனியை காட்டுவதாக நண்பனை அழைத்துச் செல்வது வில்லன் குரு சோமசுந்தரத்தின் கட்டுப்பாட்டில் நண்பன் இருப்பதை உணர்ந்து திடீரென்று நிசம்பா சூதனியை   காட்டிவிட்டு அதை அழிப்பதும் திருப்பம்.

நிதிஷ் வீராவின் நண்ப ராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் கிணற்றில் டைவ் அடிக்கும் காட்சி மனத்தில் பச்சக்.

குரு பிரம்மா பாத்திரத்தில் குரு சோம சுந்தரம் அசத்தியிருக் கிறார். வித வித காஸ்ட்யூம்களில் வந்து நிசம்பசூதனி ரகசியத்தை அடைவதற்காக செய்யும் அட்டகாசமும் , தானும் குறிப்பிட்ட பரம்பரை வைத்தியர் வம்சம் என்று சொல் வதும் ஷாக்.

கலை பாத்திரத்தில் வரும் துர்கா, ஷார்மிகா மற்றும் சுவேதாவும் கச்சிதமாக நடிப்பை வெளிப் படுத்தி உள்ளனர்.

ப்ரோகன் மூவிஸ் சார்பில் பீட்டர் ராஜ் தயாரித்திருக்கிறார். மூலிகை வைத்தியம் பாரிய மேன்மையை வெளிப்படுத்தும் விதமாக வெயிலோன் கதை வசனம் எழுதி உள்ளார். அதை எப்படி சுவாரஸ்ய மாக சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லி அதில் கமர்ஷியல் கலந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் புவன்

ராபர்ட் இசையும், பரணிக் கண்ணன் ஒளிப்பதிவும் பிளஸ்.

பெல் – ஆங்கில டைட்டிலில் தமிழ் பரம்பரை பெருமை பேசுகிறது.

 

Related posts

விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலத்த பாராட்டு மழை !

Jai Chandran

அனிருத் குரலில் “நட்பு”

Jai Chandran

புற்றுநோய் பாதித்த காமெடி நடிகருக்கு விஜய் சேதுபதி-சவுந்தரராஜா உதவி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend