Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

2018 (பட விமர்சனம்)

படம்: 2018

நடிப்பு: குஞ்சாக்கோ போபன், டிவினோ தாமஸ், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், நரேன், கலையரசன்,  அஜு வர்கீஸ்,  பீட்டர்,  லால், அபர்ணா பாலமுரளி, ஷிவதா, தன்வி ராம் மற்றும் பலர்

தயாரிப்பு: வேணு குண்ணப் பள்ளி,  சி.கே.பத்மா குமார், அண்டோ ஜோசப்

இசை: நோபின் பால், வில்லியம் தாமஸ்

ஒளிப்பதிவு: அகில் ஜார்ஜ்

இயக்கம்: ஜூடே ஆண்டனி ஜோசப்

பி ஆர் ஓ: ஜான்சன்

 

இது கதையாக நிஜம் என்று இப்படத்திற்கு  பெயர் வைத்திருந் தால் மிகவும் பொருததமாக இருக்கும் . இதில் ஒருவர் கூட நடிக்கவில்லை உழை உழை  என்று  உழைத்திருக்கிறார்கள் உழைக்காமல் ஒரு சீன் கூட இப்படத்தில்  யாரும் எடுத்துவிட முடியாது

கேரளாவில் சகஜமாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி.போல் வீட்டுக்கு வீடு ஒரு பிரச்சனை ஓடுகிறது மீனவ குடும்பத்தை சேர்ந்த  இளைஞன்  பணக்கார வீட்டு பெண்ணும் காதலிக்கி றார்கள். அதற்கு அப்பெண்ணின்  தந்தை மீனவ குடும்பத்தை அவமதிக்கிறார் . மனைவிக்கு டைவர்ஸ் தரச் சொல்லி மாமனார் ஒருவர் மாப்பிள்ளையை வற்புறுத்துகிறார்.  புது வீடுகிரக பிரவேசத்துக்கு போக அரசு அதிகாரி தயாராகிறார்,  தொழி லாளர் பிரச்னையால் வெடிகுண்டு வைக்க ஒரு லாரி டிரைவர் குண்டுகள் எடுத்துச் செல்கிறார். வெளிநாட்டிலிருந்து. ஒரு ஜோடி கேரளா அழகை ரசிக்க வருகிறது இப்படி இன்னும் பல சம்பவங்கள் நடக்கும் நிலையில் மெல்ல மெல்ல  ஊரில் மழை கொட்டத் தொடங்கி மாநிலம் முழுவதுமே வெள்ளத்தில் முழ்குகிறது.

யார் யாரை காப்பாற்றுவது என்று தெரியாமல் திணறுகின்றனர். ஒரு கட்டத்தில் அரசே நிலைகுலை கிறது. ஊர் மக்களை காப்பாற்ற மீனவ மக்கள் தங்கள் படகு களுடன்  வருகின்றனர். உயிரை பணயம் வைத்து ஒவ்வொரு குடும்பத்தையும்  காப்பாற்று கின்றனர். லால்,.குஞ்சக்கோ கோபன், நரேன் மூவரும் முழுக்க.முழுக்க படம் முழுவதும் மழையில் நனைந்தபடியே இருக்கின்றனர்.

வீட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் கணவன் மனைவி அவர்களது மன வளர்சசி குன்றிய மகனை காப்பாற்ற குஞ்சக்கோ  போபன் வெள்ளத்தில் படகுடன் வந்து கடுமையாக போராடி அவர்களை மீட்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு சீனும்  ஒரு கிளைமாக்சாக மாறியிருக்கிறது. எல்லாவற் றையும் விவரிக்க வார்த்தைகள்.கிடையாது  அதை பார்த்தால்தான்  உணரமுடியும்.

படம் தொடங்கி கண்கள் திரையில் பதிந்தபிறகு இருக்கையில் இருப்பவர்கள் அசைவற்று போய்விடுவார்கள்.

அகங்காரம், திமிர்த்தனம், பந்தா, நீ பெரியவன்,  நான் பெரியவன், ஏழை பணக்காரன், வலிமையா னவன், எளிமையானவன் , நல்லவன் கெட்டவன் என எல்லா பேதமும் இயற்கை  சீற்றத்துக்கு முன் எடுபடாது மனிதாபிமானம்  மட்டுமே நிலையானது என்பதை படம் உணர்த்துகிறது.

இப்படத்தை தயாரித்த வேணு குண்ணப் பள்ளி,  சி.கே.பத்மா குமார், அண்டோ

இசை அமைப்பாளரர் நோபின் பால், வில்லியம் தாமஸ்

ஒளிப்பதிவு செய்த அகில் ஜார்ஜ் எல்லோருக்குமே பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சவாலான ஒரு படத்தை சாதித்துக் காட்டிய இயக்குநர் ஜூடே ஆண்டனி ஜோசப்புக்கு ஆளுயர மாலை போட்டு கவுரவிக்கலாம்.

மலையாளத்தில்.உருவான இப்படம் தமிழிலl டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

2018 – திரையுலகில் மறக்க முடியாத பதிவு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

ராம் அண்ட் லீலா (பட விமர்சனம் )

Jai Chandran

Samantha oozes with grace in Shakuntalam first look

Jai Chandran

ஆச்சி மனோரமா மகன் தற்கொலை முயற்சியா?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend