Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பா.ரஞ்சித் இசைக்குழு பாடகி தேர்வு…

பிபிசி 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை தகர்த்தெறியும் 100 பெண்களின் பட்டியலை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருகிறது. இதில், உலகளவில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னை மட்டுமல்லாது தன்னை சார்ந்த சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் பிபிசி செய்தி நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்கள் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. அதில் இயாக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவான கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் பாடகி இசைவாணி இடம்பெற்றிருக்கிறார்.

சென்னையை சார்ந்த இசைவாணி கேஸ்ட்லெஸ் கலைக்குழுவின் முக்கியமான பாடகி, கானா பாடல்கள் மூலம் பலரின் பாராட்டுக்களைப்பெற்றவர். கானா பாடல்கள் என்றால் ஆண்கள் மட்டுமே பாடுகிறவர்கள் என்பதை உடைத்து அந்தத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.

கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் மூலமாக சமூகக்கருத்துக்களை மேடைகளில் பாடி பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுவரும் குழுவினருக்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்து அங்கீகாரமும், பாராட்டுக்களும் கிடைத்துவருவதால் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குறிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் பெரும் மகிழ்ச்சியுடன் இசைவாணியை வாழ்த்துவதோடு , குழுவினரின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடுவோம் என்று கூறுகிறார்.

Related posts

MohanRaja Completes 20 wonderful years as a film Director

Jai Chandran

Actor Vishal got severe back injury at Vishal31 shooting spot

Jai Chandran

Shanthnu Bhagyaraj Starrer Raavana Kottam

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend