Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தசரா (பட விமர்சனம்)

படம்: தசரா

நடிப்பு: நானி, கீர்த்தி சுரேஷ், தீக்ஷித் ஷெட்டி, ஷைனி டாம்

தயாரிப்பு: சுதாகர்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்

இயக்கம்: ஶ்ரீகாந்த் ஒடேல

பிஆர் ஓ : சதீஷ்,
ஷிவா சதீஷ் (AIM)

ஆந்திராவில் வீரள பள்ளி மிகவும் பின்தங்கிய கிராமம் அந்த ஊர் ஆண்கள் எந்நேரமும் சில்க் குடி பாரில்தான் பொழுதைப் கழிக்கின் றனர். குடி பார் நடத்தும் ஷைனிடாம் (வில்லன்) வைத்தது தான் சட்டம் என்ற நிலையில் தாழ்த் தப்பட்டவர்கள் யாரும் பாருக்குள் அனுமதி கிடை யாது. இந்த வகுப்பை சேர்ந்த தரணி (நானி) மேல் வகுப்பை சேர்த்த சூரி (தீக்ஷித்) இணை பிரியாத நண்பர்களாக இருக்கின்றனர். நட்புக் காக வெண்ணிலா (கீர்த்தி சுரேஷ்) மீதான காதலை தரணி விட்டுத் தருகிறான். ஒரு கட்டத்தில் சூரி கொலை செய்யப்பட வெண்ணிலா தனிமரமா கிறாள். நண்பனை கொன் றது ஷைனிதான் என்று தெரியவர அவரை தரணி எப்படி பழிதீர்க்கிறான், வெண்ணிலாவின் கதி என்ன என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் அளிக்கிறது.

நான் ஈ பட ஹீரோ நானி இப்படத்தில் தரலோக் கலுக்கு இறங்கி நடித்தி ருக்கிறார். எந்நேரமும் குடியும் கூத்துமாக இருந் தாலும் நண்பன் தீக்ஷித் மீது உயிரை வைத்தி ருக்கிறார்.
நண்பனுக்காக காதலை விட்டுத்தரும் நானி பின்னர் காதலை நினைத்து கலங்குகிறார்.
ஒரு கட்டத்தில் விதவை யாகும் கீர்த்தி கழுத்தில் தாலி கட்டும் நானி திடீர் திருப்பத்தை ஏற்படுத்து கிறார்.

கீர்த்தி சுரேஷ்
நடிப்பில் பெரும் பக்குவம் காட்டு கிறார். நானியின் நண்பராக வரும் தீக்ஷித் யார் இவர் என கேட்கும் அளவுக்கு நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
வில்லனாக வரும் ஷைனி டாம் நடிப்பின் மூலம் கடுப் பேற்றுகிறார்.

கிளைமாக்ஸ் தசரா காட்சி சிறப்பு. படத்தில் பிரமாண்டம் என்று சொல்ல எதுவுமில்லை கதையை நம்பித்தான் தயாரித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கிளைமாக்சில் இன்னும் வேக மான இசை கொடுத் திருந்தால் சீன் இன்னும் வீரியம் பெற்றிருக்கும்.

இயக்குனர் ஶ்ரீகாந்த் ஒடேல இயக்கம் சசிகுமாரின் சுப்பிரமணி யபுரம் படத்தை ஞாபகப் படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் சுப்ரமணியபுரம் படத்தை தழுவியது என்றும் கூறலாம்.

தசரா – நட்பும் காதலும்.

Related posts

துபாய் தொழிலாளர்களுடன் கார்த்தி தீபாவளி

Jai Chandran

என் டி ஆரின் ‘தேவரா’ பட முதல் பாக கிளிம்ப்ஸ்

Jai Chandran

சார்லஸ் எண்டர்பிரைசஸ் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend