Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நீ for ever (பட விமர்சனம்)

படம்: நீ பார் எவர் ( நீ for ever)

நடிப்பு: சுதர்சன் கோவிந்த்,, அர்ச்சனா ரவி, பிரதோஷ், நோபல் ஜேம்ஸ், வித்யா, ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, ரெத்திகா, எம் ஜே ஸ்ரீராம்

தயாரிப்பு: புகழ் அண்ட் ஈடன்

இசை: அஸ்வின் ஹேம்நாத்

ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சாரியார்

இயக்கம்: அசோக் குமார் கலைவாணி

பிஆர்ஓ : சதீஷ் (AIM)

சிறுவயதிலிருந்து தாத்தாவால்  (ஒய் ஜி மகேந்திரன் ) கட்டுப்பாடுடன் வளர்க்கப்படுகிறான் அஜய். (சுதர்சன் கோவிந்த்). இவன் இணையதளத்தில் வெளியிடுவதற்காக நீ ஃபார் எவர் என்ற இளைஞர்களுக்கான டேட்டிங் செயலியை கண்டுபிடித்து அதை ஐடி அதிபருக்கு விற்க முயல்கிறான். இன்னொரு புறம் ஆசிரமத்தில் வளர்ந்த மதி (அர்ச்சனா ரவி) திரைப்பட இயக்குனர் ஆவதற்காக கதை சொல்கிறார் அதைக் கேட்ட தயாரிப்பாளர் காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் அதை படமாக்குகிறேன் என்கிறார். அஜய், மதி இருவருக்குமே காதலில் முன் அனுபவம் இருக்கிறதா என்று அவர்கள் முதலாளிகள் கேட்க காதல் அனுபவம் பெற முடிவு செய்கின்றனர். இன்டர்நெட் செயலி மூலம் நண்பர்களாக அறிமுகமாகும் அஜய், மதி தங்களது லட்சியத்திற்காக காதலிப்பதுபோல் நடிக்கின்றனர். இது அவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் கதை.

நீ ஃபார் எவர் என்று படத்தின் டைட்டிலை கேட்கும்போது இளவட்டங்களுக்கான காதல் கதையாக இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது அப்படித்தான் கதையும் இருக்கிறது.
அஜய்யாக சுதர்சன் கோவிந்த், மதியாக அர்ச்சனா ரவி நடித்திருக்கின்றனர். முகங்கள் புதிதாக இருப்பதால் அவர்களது நடிப்பு எந்த ஸ்டைலில்
இருக்கும் என்று கணிக்க முடியாமல் போனாலும் அவர்களது எதார்த்தமான  நடிப்பை ரசிக்க முடிகிறது.

நெடுநெடு என வளர்ந்திருக்கும் சுதர்சன் கோவிந்த்தனது தாத்தாவின் பேச்சுக்கு கட்டுப்படுவது, குடும்ப உறவில் பாசமாக இருப்பது என்பதெல்லாம் இந்த காலத்தில் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அப்படி ஒரு பிள்ளை  இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நிழலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சுதர்சன்.

நண்பர்களுடன் சேர்ந்து லூட்டி அடித்தாலும் தனது செயலிக்காக அர்ச்சனாவை காதலிக்க தொடங்குவதும் பின்னர் அவரை உண்மையாகவே காதலிப்பது என சுதர்சன்  கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்.

என்னதான் இளவட்டங்கள் லூட்டி அடித்தாலும் அவர்கள் காதல் என்று வந்துவிட்டால் எவ்வளவு உண்மையாக இருப்பார்கள் என்பதை சீனுக்கு சீன் நிகழ்த்திக்காட்டியிருக்கும் சுதர்சன்  பெண்கள் மனதில் இடம் பிடிப்பார்.

அர்ச்சனா ரவி,  தான் எழுதும் சினிமா கதைக்காக பொய்யாக சுதர்சனை காதலிக்க தொடங்குவதும் பின்னர் சுதர்சன் வீட்டுக்கு சென்று அங்குள்ளவர்கள் காட்டும் குடும்ப பாசத்தில் அவரும் காதலில் உருகுவது நெகிழ வைக்கிறது.

டேட்டிங், லூட்டிங்,  சம்திங் சம்திங் என்றில்லாமல் உருப்படியான ஒரு காதல் கதையை அழகான வடிவத்தில் திரைக்கதை அமைத்து தந்திருக்கிறார் இயக்குனர் அசோக் குமார் கலைவாணி.

பிரதோஷ், நோபல் ஜேம்ஸ்  காமெடி செய்து கலகலப்பு செய்ய முயன்றிருக்கின்றனர்.

புகழ் அண்ட் ஈடன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

அஸ்வின் ஹேம்நாத் இசையும், ராஜா பட்டாச்சாரியா கேமராவும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது

நீ பார் எவர் – ஒருமுறை பார்க்கலாம்.

Review By
K.Jayachandhiran
trending cinemas now. com

 

Related posts

Teaser of Vels Signature’s sci-fi short film Shapes of Shadow is out now!

Jai Chandran

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை

Jai Chandran

தனுஷ் நடிக்கும் ’கர்ணன்’ ஏப்ரல் மாதம் தியேட்டரில் ரிலீஸ் எஸ்.தாணுவுக்கு நன்றி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend