Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விடுதலை (பட விமர்சனம்)

படம்: விடுதலை

நடிப்பு: விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன், சேத்தன்,  பவானிஶ்ரீ மற்றும் பலர்

தயாரிப்பு: எல்ரெட் குமார்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு:ஆர்.வராஜ்

இயக்கம்: வெற்றி மாறன்

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர் (D’ One)

கதை, உழைப்பு, இசை இருந்தால் அப்படம் தரமான. சம்பவம் செய்யும் என்பதற்கு ஒருசில படங்கள் சாட்சியாக இருக் கின்றன. அந்த வரிசை யில் விடுதலை படத்தை யும் சேர்த்துக் கொள்ள லாம்.
வெற்றி மாறன் விஜய் சேதுபதி, சூரி இவர்களுக் கெல்லாம் சிகரம் வைத் தார்போல் இசைஞானி இளையராஜா இணைந் திருக்கும் விடுதலை வாழ்வியலின் அடி ஆதாரத்தை கண்முன் நிறுத்துகிறது.

அருமபுரி ஊருக்கு அருகில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சிவப்பு சிந்தனை கொண்ட விஜய் சேதுபதி போராட் டத்தை முன்னெடுக்கிறார். போலீஸ் மீது தாக்குதல், குண்டு வெடிப்பு என அதிரடி போராட்டங்கள் அரசை நிலை குலையச் செய்கிறது. மக்கள் படை என்ற பெயரில் நடக்கும் தீவிர செயல்களை அரங்கேற்றும் விஜய் சேதுபதியை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டு தேடுதல் வேட்டை நடக்கிறது. இந்த போலீஸ் குழுவில் கான்ஸ்டபுளாக சூரி இடம் பெறுகிறார். கடமையே கண்ணாக இருந்தும் மேலதிகாரி யின் கோப்பத்துக்குள்ளா கிறார். அதனால் மெமோ தரப்பட்டு தண்ட னைக்குள் ளாகிறார். இந்நிலையில் உயர் அதிகாரியாக கவுதம் மேனன் பொறுப்பேற்  கிறார். அவர் தலைமை யில் விஜய் சேதுபதியை தேடும் வேட்டை தொடர் கிறது. அவர்களால் அவரை பிடிக்க முடிந்ததா என்ப தற்கு படம் பதில் சொல்கிறது.

என்னதான் சூரி கதையின் நாயகனாக இருந்தாலும் மக்கள் படை தலைவனாக வெகுஜன மக்களில் ஒருவன் போல் வரும்  விஜய்சேதுபதி சூரியின் ஈடுபாடான நடிப்பை முடக்கிப் போட்டு விடுகி றார்.

விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இல்லா விட்டாலும் வரும் ஒரு சில காட்சிகளில் எதர்த்த நடிப்பால் சூரியை விழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறார். அதையும் மீறி சூரி தன்னை நிலை நிறுத்த போராடுகிறார்.

பவானஶ்ரீ மீது சூரி காட்டும் காதல் இயல்பான தாக இருந்தாலும் அவரின் அந்த காமெடி முகம் சில சமயம் வெளிப்பட்டு சேதாரம் செய்கிறது.

கிராமத்து பெண்ணாக பவானிஶ்ரீ ஒரு ஓவியம் போல் கண்ணுக்குள் பதிகிறார்.

கவுதம் மேனன், சேத்தன் போலீஸ் அதிகாரிகளாக தங்கள் பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள்.

ரயில் விபத்து காட்சியில் இரத் தமும் சதையும் அச்சமூட்டுகிறது.

காட்டுப்பகுதி, இயற்கை எழில் என எல்லாவற் றையும் ஒட்டுமொத் தமாக சுருட்டிக் கொண்டு வந்தி ருக்கிறார் ஒளிப் பதிவாளர் ஆர்.வேல்ராஜ்.
இவை எல்லாவற் றையும் கண்கள் பார்க்கும்படி செவி வழியாக சிந்தைக்குள் பயணிக்க வைப்பது இளைய ராஜாவின் இசை இழைகள்தான்.
காட்டுமல்லி, உன்னோடு நடந்தா, அருட்பெருஞ் ஜோதி என மூன்று பாடல்களும் தேனினும் இனிய தெள்ளமுது சுவைக்க சுவைக்க சுவை கூடிக் கொண்டே போகி றது.
வெற்றிமாறன் இதுபோன்ற கதைகளில் முத்திரைப்பதிப்பார் என்று ஏற்கெனவே. நிரூபிக்கப் பட்ட விஷயம் ஆனால் இதுவே அவரது முத்திரை ஆகிவிடக்கூடாது இன்னும் புதிய களங்களுக்குள் அவர் கால் பதிக்க வேண்டியது அவசியம். அந்த பாதைகளை எப்படியமைக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

விடுதலை 2ம் பாகம் இன்னும் நிறைய விஷயங் களை பேசக் காத்திருக் கிறது என்பதற்கான அறிகுறிகள் முதல் பாகத்தில் தென்படுகின் றன.

விடுதலை- இதயத் துடிப்பின் எதிரொலி.

Related posts

குதிரைவால்’ புதிய அனுபவம் தரும் – இயக்குநர் பா.இரஞ்சித்

Jai Chandran

தயாரிப்பாளர் அன்புசெழியன் மகள் திருமண விழாவில் ரஜினி, கமல் வாழ்த்து

Jai Chandran

மோகன்லாலின் “எம்புரான்” டிரெய்லர் மார்ச் 20ல் ஐமேக்சில் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend