Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆஸ்கார் போட்டியில் விருதை தட்டிய “நாட்டு நாட்டு” பாடல்

95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது  ஆஸ்கர் விருது வழங்கும் விழா  இன்று நடந்தது.

2023 ஆஸ்கர் விருதுகள் வென்ற விவரம்:

சிறந்த திரைப்படத்திற்காக சீன படம்  ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  வென்றது.

சிறந்த இயக்குனருக்கான விருதை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் 3 ஒன்ஸ்’ .

சிறந்த நடிகர் விருதை  தி வேல் திரைப்படத்திற்காக நடிகர் பிரெண்டன் ஃப்ரேசர் பெற்றார்.

சிறந்த நடிகை விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  படத்தில் நடித்த மைக்கேல் யோ பெற்றார்.

சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகை கே ஹுய் குவானுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

சிறந்த அசல் திரைக் கதைக்கான விருதை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட், ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) படத்துக்காக பெற்றுள்ளனர்.

சிறந்த எழுத்து (தழுவல் திரைக்கதை)-கான விருது சாரா பாலி வுமன் டாக்கிங் ( Women Talking).

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை கில்லெர்மோடெல் டோரோவின் பினோச்சி யோ  படம் வென்றுள்ளது.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை (All Quiet on the Western Front) ஆல் குய்ட் ஒன் தி வெஸ்டர்ன் பிரண்ட் திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை நவல்னி (Navalny) படம் வென்றுள்ளது.

சிறந்த எடிட்டருக்கான விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’  (‘Everything Everywhere All at Once’) படத்தில் பணியாற்றிய பால் ரோஜர்ஸ் வென்றார்.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர், ஆகியோர் பெற்றனர் (படம் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்).

சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை மார்க் வீன்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் வென்றனர் (டாப் கன்: மேவரிக்).

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோருக்கு “அவதார் தி வே ஆஃப் வாட்டர்” படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவு, “ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்” படத்திற்காக ஜேம்ஸ் பிரென்ட் வென்றுள்ளார்.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை, “RRR” திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி, மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் வென்றனர்.

சிறந்த இசை ஒரிஜினல் ஸ்கோருக்கான ஆஸ்கர் விருது, “ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரன்ட்” படத்திற்காக வோல்கர் பெர்டெல்மேன் பெற்றுள்ளார்.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை “பிளாக் பாந்தர் வகாண்டா ஃபாரெவர்”படத்திற்காக, ரூத் இ. கார்ட்டர் வென்றுள்ளார்.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத் திற்கான ஆஸ்கர் விருது, “தி வேல்”  படத்திற்காக அட்ரியன் மோரோட், ஜூடி சின் மற்றும் அன்னே மேரி பிராட்லி ஆகியோர் பெற்றனர்

சிறந்த நேரடி  குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை “ஆன் ஐரிஷ் குட்பை படம் வென்றது.

சிறந்த அனிமேஷன் குறும்படமாக ஆஸ்கர் விருதுக்கு “தி பாய், தி மோல், தி பாக்ஸ், தி ஹார்ஸ் படம் வென்றது.

சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது, “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு வழங்கப் பட்டது.

Related posts

Thriller flick ‘3:33’ Theatrical Release on December 10th

Jai Chandran

தீரஜ் நடிக்கும் “டபுள் டக்கர்” பட விழாவில்.மிஷ்கின் பரபரப்பு

Jai Chandran

மறக்குமா நெஞ்சம் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend